ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமனம்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 17:10

டில்லி,

    இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வைரல் வி ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்த பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேபப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு மைக்கேல் தேவப்ரதா புதிய துணை ஆளுநராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநராக தேபப்ரதா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியில் அதிகபட்சம் நான்கு துணை ஆளுநர்களைக் கொண்டிருக்கலாம். 

மற்ற துணை ஆளுநர்களான என் எஸ் விஸ்வநாதன், பி பி கனுங்கோ மற்றும் எம் கே ஜெயின் ஆகியோர் மத்திய வங்கியில் பணிபுரிகின்றனர்.