பெட்ரோல் - டீசல் இன்றைய விலை நிலவரம்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 11:21

சென்னை,

   சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.85க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.85க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.98க்கு விற்கப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.