சென்செக்ஸ் இன்று உயர்வுடன் நிறைவு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2020 18:32

மும்பை,

   இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.

அமெரிக்கா - ஈரான் தாக்குதலை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்பொழுது பதற்றம் சற்று தணிந்ததால் இன்று உலக சந்தையில் குறியீட்டெண்கள் எழுச்சி பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859.69 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 72.75 புள்ளிகள் உயர்ந்தது 12,329.55 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்போசிஸ் நிறுவன பங்குகள் இன்று 23.7 சதவீதம் உயர்ந்தது.  இதைத்தொடர்ந்து இன்டஸ்இன்ட் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.யூ.எல், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.34 சதவீதம் உயர்ந்தன.

மறுபக்கம் டி.சி.எஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ஆர்ஐஎல், ஆக்சிஸ் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.03 சதவீதம் சரிந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (13-01-2020) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 12 காசுகள் அதிகரித்து ரூ.70.82 காசுகளாக இருந்தது .இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.86 காசுகளாக நிலைபெற்றது