நிழல் நிஜமானது!

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020


காஷ்யப முனிவர், அதிதி தம்பதியின் மகன் சூரியன். சூரியனுக்கு உஷா, சாயா, சமுங்கை, பிரபை என்பவர்கள் மனைவியர். இவர்களில் உஷாவுக்கு வைவஸ்தமனு, எமதர்மராஜன் என்னும் மகன்களும், யமுனை என்னும் மகளும் பிறந்தனர். உஷாவுக்கு சூரியனின் வெப்பத்தை தாங்கும் சக்தி இல்லாததால் தன்னைப் போல ஒரு பிம்பம் செய்து உயிரூட்டி ‘சாயா’ எனப் பெயரிட்டாள். அவளை சூரியனின் மனைவியாக்கினாள். இவளுக்கு கிருதத்வாசி, சனி என்ற மகன்களும் பத்தரை என்ற மகளும் பிறந்தனர்.


8லிருந்து 80 வயது வரை!

சூரிய நமஸ்காரத்தை எட்டு முதல் 80 வயது வரை செய்யலாம். கடற்கரையில் காலை 6.00 -– 6.30 மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு நோய் அணுகாது. வீட்டில் திறந்தவெளியில் இதே நேரத்தில் சூரியனை வணங்க வேண்டும். இதனால் மனம், உடல், ஆத்மபலம் அதிகரிக்கும்.உடல்நலம் மேம்படுத்தும்

பொங்கல் பாட்டு!

பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கும் போது, இப்பாடலைப் பாடினால் உடல்நலம் மேம்படும்.

‘ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும்

தேயா மதிநலம் சிறந்திட நாமே

ஒளியினைப் போற்றுதும்

ஒளியினைப் போற்றுதும்

உண்மை உள்ளொளி உண்டிட நாமே!’