சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 13–1–2020

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2020


இந்திய பங்குச் சந்தை நிலவரம்

இந்த வார ஆரம்­பத்­தில் இருந்த அமெ­ரிக்க ஈரான் பிரச்­ச­னை­க­ளைப் பார்த்­தால் ஒரு பெரிய போரே உண்­டா­கும் என்ற எண்­ணம் தான் பல­ருக்­கும் இருந்­தது.  

போர் என்ற சம­யத்­தில் தங்­கம் தான் தக தக என எப்­போ­துமே ஜொலிக்­குமே, அது போல இப்­போ­தும் ஜொலித்­தது. வர­லாறு காணாத விலைக்­கும் சென்­றது.

 இந்­தி­யா­வில் வீடு­க­ளில் இருக்­கும் தங்­கத்தை எல்­லாம் அப்­போது சந்­தைக்கு கொண்டு வந்­தி­ருந்­தால் இந்­தியா பெரிய பணக்­கார நாடாகி இருக்­கும்.

 பங்­குச் சந்தை முத­லீட்­டா­ளர்­கள் எல்­லோ­ரும்  போர் என்ற ஒரு­வித பயத்­தி­லேயே இருந்­த­னர்.  ஆனால் அமெ­ரிக்கா, ஈரான் நாட்­டின் கட­வுள்­க­ளின் புண்­ணி­யத்­தில் அப்­படி ஏதும் நடக்­க­வில்லை. இத­னால் அடுத்த தினத்­தில் இருந்து சந்­தை­கள் எல்­லாம் சட­ச­ட­வென மேலே ஏற ஆரம்­பித்­தன.

அமெ­ரிக்கா, ஈரான் பிரச்­ச­னை­க­ளுக்­கி­டை­யே­யும் இந்­திய பங்­குச் சந்­தை­கள் புதிய உச்­சத்தை எட்­டி­யது குறிப்­பி­ட­தக்­கது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று மும்பை பங்­குச் சந்தை 147 புள்­ளி­கள் கூடி 41599 புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச்­சந்தை புள்­ளி­கள் 41 புள்­ளி­கள் கூடி 12256 புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தன.  மும்பை பங்­குச் சந்தை சென்ற வாரத்தை விட இந்த வாரத்­தில் 135 புள்­ளி­கள் கூடி   முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது

சிறிய மற்­றும் மிட்­கேட் பங்­கு­கள்

இரண்டு வரு­டங்­க­ளாக அடி­வாங்­கி­யி­ருந்த சுமால் அண்ட் மிட்­கேப் ஸ்டாக்­கு­கள் சட­ச­ட­வென ஏற ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. உங்­கள் போர்ட்­போ­லி­யொ­வில் சுமார் 20 முதல் 30 சத­வீ­தம் இந்த பங்­கு­க­ளில் இருக்­க­லாம். இந்த காலாண்டு முடி­வு­களை பாருங்­கள், அதில் நன்கு பரி­ண­மிக்­கும் பங்­கு­களை வாங்­குங்­கள், 25 சத­வீ­தம் லாபம் வந்­த­வு­டன் விற்று விடுங்­கள். மறு­படி விலை குறை­யும் போது வாங்­குங்­கள்.

மியூச்­சு­வல் பண்­டு­கள்

முத­லீட்­டா­ளர்­கள் மியூச்­சு­வல் பண்­டு­க­ளில் மறு­படி முத­லீ­டு­களை கூட்­டி­யி­ருக்­கின்­ற­னர். இது வர­வேற்க தகுந்­தது. அந்த முத­லீ­டு­கள் எல்­லாம்

பட்­ஜெட்

பிப்­ர­வரி 1ம் தேதி சமர்­பிக்­கப்­ப­டும் பட்­ஜெட்­டில் என்ன எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது? தனி நபர் வரு­மான வரி குறைப்பு இது தான் அதி­கம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அது அறி­விக்­கப்­ப­டு­மா­னால் அது சந்­தை­களை கூட்­டும்

காலாண்டு முடி­வு­கள்

இன்பி சிறப்­பான காலாண்டு முடி­வு­களை கொடுத்­துள்­ளது. இந்த காலாண்டு லாபம் சென்ற வரு­டம் இதே காலாண்டை  விட 23 சத­வீ­தம் கூடு­த­லாக இருந்­தது  குறிப்­பி­டத்­தக்­கது. இது சந்­தை­க­ளின் எதிர்­பார்ப்பை விட கூடு­த­லாக இருந்­த­த­தும்  முக்­கி­ய­மா­னது ஆகும். பல காலாண்டு முடி­வு­கள் காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன வரி­சை­யாக வர ஆரம்­பிக்­கும்.

 என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

ஸ்பெஷா­லிட்டி கெமிக்­கல்ஸ், லூமாக்ஸ் இண்­டஸ்­டீ­ரீஸ், இண்­டியா மார்ட் இண்­டர்­மெஸ், குஜ­ராத் கேஸ், கே என் ஆர் கன்ஸ்­டி­ர­க்ஷன்ஸ் ஆகிய பங்­கு­க­ளில் நீண்ட கால அடிப்­ப­டை­யில் முத­லீடு செய்­ய­வும்.

கடந்த வரு­ட­மும், நம் அறி­வு­ரை­க­ளும், பங்­குச் சந்­தை­யும்

கடந்த வரு­டம் நாம் கூறிய பங்­கு­க­ளில் முத­லீடு செய்­தி­ருந்­த­வர்­கள், நாம் கூறிய அறி­வுரை படி பங்­குச் சந்­தை­யில் சென்­ற­வர்­கள்  நல்ல லாபங்­களை எட்­டி­யி­ருப்­பார்­கள்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

அமெ­ரிக்கா ஈரான் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து இருந்து அமை­தியை நோக்கி உல­கம் சென்று கொண்­டி­ருக்­கின்­றது. பிப்­ர­வரி 1ம் தேதி பட்­ஜெட் அரு­கா­மை­யில் இருப்­ப­தால்   அடுத்த வாரம் ப்ரி-பட்­ஜெட் ராலி­யாக சந்­தை­கள்  மேலேயே இருக்­கும் வாய்ப்­பு­கள் அதி­கம்.

பொங்­கல் வாழ்த்­துக்­க­ளு­டன்


உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com