பொங்கலு பொங்கலு, மாட்டுப் பொங்கலு, காணும் பொங்கலு...! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2020

உல­கத்­துக்கே ஒளி­யை­யும் உயிர்ச் சக்­தி­யை­யும் தரு­ப­வர் சூரிய பக­வான். மண்­ணு­லக உயிர்­க­ளுக்­கெல்­லாம் கண்­கண்ட தெய்­வ­மாக வணங்­கப் படு­கி­றார். சூரி­யன் தனுசு ராசி­யி­லி­ருந்து மகர ராசி­யில் பிர­வே­சிக்­கும் நாளை, 'மகர சங்­க­ராந்தி' விழா­வாக நாடெங்­கும் கொண்­டா­டு­கி­றார்­கள். இந்த விழா, வரு­டந்­தோ­றும் தை மாதம் முதல் நாள் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இந்த நாளில் இருந்து சூரி­ய­னின் பய­ணம் வட­திசை நோக்­கிச் செல்­கின்­றது. இதை உத்­த­ரா­யண புண்­ணிய காலம் என்று சொல்­வார்­கள் " என்று கூறிய ஆன்­மிக சொற்­பொ­ழி­வா­ளர்  மயி­லா­டு­துறை ராக­வன். 

மேலும் "உத்­த­ரா­ய­ணம் என்­றால், 'வட திசை நோக்­கிய வழி' என்று பொருள். அதா­வது மனி­தர்­க­ளின் ஓராண்டு காலம், தேவர்­க­ளுக்கு பகல் பொழு­தா­கும். சூரி­யன் ஆடி மாதம் முதல் மார்­கழி மாதம் வரை சூரி­யன் தென் திசை நோக்கி பய­ணிக்­கும் தட்­சி­ணா­யன காலம் ஆகும். இது தேவர்­க­ளின் இர­வுப் பொழு­தா­கும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள காலம், சூரி­ய­னின் வட­தி­சைப் பய­ணம் தொடங்­கும் உத்­த­ரா­யன புண்­ணிய காலம் ஆகும். உத்­த­ரா­யன புண்­ணிய காலமே நல்ல காரி­யங்­க­ளைச் செய்­வ­தற்கு உகந்த காலம் ஆகும்.

போகிப் பண்­டிகை

பொங்­க­லுக்கு முதல்­நாள் போகிப் பண்­டிகை. போகங்­களை விரும்­பும் இந்­தி­ர­னுக்கு போகி என்ற பெய­ரும் உண்டு. கோகு­லத்­தில் வாழ்ந்த யது­கு­லத்­த­வர்­கள் வரு­டந்­தோ­றும், 'இந்­தி­ர­னுக்கு விழா' எடுப்­பது வழக்­கம். கோகு­லத்­தில் கிருஷ்­ணன் அவ­த­ரித்த பிற­கும் அவர்­கள் தவ­றா­மல் இந்­தி­ர­னுக்கு விழா எடுத்­த­னர். அவர்­க­ளு­டன் இருந்­த­தால் கிருஷ்­ண­னும் இந்­திர வழி­பாட்­டில் கலந்­து­கொள்­வது வழக்­கம். இத­னால், இந்­தி­ர­னுக்கு கர்­வம் ஏற்­பட்­டது. இந்­தி­ர­னின் கர்­வத்தை அடக்க நினைத்த கிருஷ்­ணன், 'கோவர்த்­த­ன­ம­லை­யையே கட­வு­ளாக வழி­ப­டு­வோம்' என்று கூறி­னார். இத­னால் கோபம் கொண்ட இந்­தி­ரன் பெரு­மழை பெய்­யச் செய்­தான். உடனே கிருஷ்­ணன் கோவர்த்­த­ன­ம­லையை தன் சுட்டு விர­லால் தூக்­கிப் பிடித்து மழை­யைத் தடுத்து கோகு­ல­வா­சி­க­ளை­யும், ஆவி­னங்­க­ளை­யும் காப்­பாற்­றி­னான். பக­வா­னின் அவ­தா­ரமே, 'கிருஷ்­ணன்' என்று இந்­தி­ரன் உணர்ந்து கர்­வம் நீங்­கிய நாளையே போகி­யா­கக் கொண்­டாடி மகிழ்­கி­றோம் என்று சொல்­லப்­ப­டு­கி­றது.போகித் திரு­நா­ளில் பழைய குப்­பை­களை எரித்து, புதி­ய­ன­வற்றை வாங்­கு­வது மரபு. அதா­வது ஆண­வம், கண்­மம், மாயை ஆகி­ய­வற்­று­டன், ஆசை, பொறாமை போன்ற மன மாசு­க­ளை­யும் பொசுக்கி, ஆன்ம பலம் பெற­வேண்­டும் என்­ப­தையே போகிப் பண்­டிகை நமக்கு உணர்த்­து­கி­றது. பண்­டைய தமி­ழ­கத்­தி­லும் போகிப் பண்­டிகை இந்­தி­ர­வி­ழா­வா­கக் கொண்­டா­டப்­பட்டு இருக்­கி­றது.

தைப்­பொங்­கல் திரு­நாள்

'மகர சங்­க­ராந்தி' என்று சாஸ்­தி­ரங்­கள் போற்­றும் இத்­தி­ரு­நாள் சூரி­யக் கட­வு­ளுக்கு உரிய திரு­நாள். துன்ப இரு­ள­கற்றி எல்­லோர் மன­தி­லும் இன்­பம் பொங்­கும் வகை­யில் உழ­வி­லும், வாழ்­வி­லும் ஒளி­த­ரும் சூரி­யக் கட­வு­ளுக்கு நன்றி செலுத்­தும் நாள் இத்­தி­ரு­நாள்.

பொங்­க­லுக்கு முன்­ன­தா­கவே வீட்­டைக் கழுவி சுத்­தம் செய்து வெள்­ளை­ய­டித்து, கோல­மிட்டு அலங்­க­ரித்து வைப்­போம். பொங்­க­லன்று சூரிய பூஜை அவ­சி­யம். ஆகவே, சூரிய ஒளி­ப­டும் இடத்தை சுத்­த­மா­கப் பெருக்கி பச்­ச­ரிசி மாவி­னால் தேர்­போல கிழக்கு நுனி­யாக கோலம் இட்டு வடக்­குப்­பு­றத்­தில் அரிசி மாவி­னாலே சூரி­ய­னைப் போல் வரைந்து அதன் அரு­கில் குங்­கு­மத்­தால் பாதி சந்­தி­ர­னை­யும் வரை­ய­வேண்­டும்.

பிறகு தலை­வாழை இலை­வி­ரித்து, அதில் காய்­க­றி­கள், புது­மஞ்­சள், கரும்பு, அரிசி பரப்­பி­வைத்­துக் கொள்­ள­வேண்­டும். மஞ்­சள் பிள்­ளை­யா­ரும் பிடித்­து­வைக்க வேண்­டும். மேலும் திரு­வி­ளக்­கேற்றி வைத்து பூச்­சூடி, பிள்­ளை­யார் வணக்­கத்­து­டன் பொங்­க­லிட வேண்­டும். புதுப் பானை­யில் நல்ல தண்­ணீர் ஊற்றி சந்­த­னம், குங்­கு­மம் இட்டு, மஞ்­சள் குலை சேர்த்­துக் கட்டி, அடுப்­பில் வைத்து நெருப்­பேற்ற வேண்­டும். பிறகு புது அரி­சி­போட்டு பொங்கி வரும் வேளை­யில், பாலூற்றி பொங்­க­லிட்டு படைத்து இறை­வ­ழி­பாடு செய்து வணங்க வேண்­டும்.

பூஜை­யின் முடி­வாக, 'ஆதித்­யஹ்­ரு­த­யம்', 'சூரிய காயத்ரி' கூறி கைகூப்பி கதி­ர­வனை மன­தில் தியா­னித்து வணங்கி வழி­ப­டு­வது மிக­வும் நன்று. நகர்ப்­பு­றங்­க­ளில் உள்­ளோர் வீட்­டுக்­குள் பொங்­கல் வைத்­தா­லும் பால்­கனி அல்­லது மொட்­டை­மா­டி­யில் பொங்­க­லைப் படை­ய­லிட்டு சூரி­யனை கண்­டிப்­பாக வழி­ப­டு­தல் வேண்­டும். பூஜை முடிந்து காகத்­துக்கு அன்­ன­மிட்டு ஏழை ஒரு­வ­ருக்கு பொங்­கல் சாதம், கரும்­புத்­துண்டு, காணிக்­கை­யோடு தந்து பிறகு அனை­வ­ரும் உண்டு மகி­ழ­லாம்.

மாட்­டுப் பொங்­க­லும், காணுப்­ப­டி­யும்;

இயற்­கையை வழி­ப­டு­வ­தைப் போலவே பசுக்­க­ளை­யும் காளை­க­ளை­யும் கன்­று­க­ளை­யும் வரு­டத்­துக்கு ஒரு முறை­யா­வது தெய்­வ­மாக கருதி பூஜிக்க வேண்­டும் என்­பது சாஸ்­திர நியதி. அதை கடைப்­பி­டிக்­கும் வித­மா­க­வும், நமக்­காக உழைக்­கும் மாடு­க­ளுக்கு நன்றி செலுத்­தும் வித­மா­க­வும் மாட்­டுப் பொங்­கல் கொண்­டா­டு­கி­றோம். மாட்­டுப் பொங்­க­லன்­றும், பொங்­கல் வைத்து வீட்­டில் உள்ள மாடு, கன்­று­க­ளைப் பூஜித்து வணங்­கு­வ­தால், முப்­பது முக்­கோடி தேவர்­க­ளை­யும் வணங்­கிய பலன் கிடைக்­கும். தை மாதம் இரண்­டாம் நாள் காணுப்­பிடி முக்­கி­யத்­து­வம் பெறு­கி­றது.

காணு - காக்கை; பிடி - பிடி­சோறு அதா­வது காக்­கை­க­ளுக்கு படைக்­கப்­ப­டு­கின்ற பிடி­சோறு காணுப்­பி­டி­யா­கும். மக­ளிர் தம் உடன்­பி­றந்­த­வர்­கள் நல­மு­டன் வாழ காணுப்­பிடி கொண்­டா­டு­வார்­கள். வெட்ட வெளி­யில் தூய்­மை­யான இடத்­தில் மெழுகி, கோல­மிட்டு மஞ்­சள் இலை அல்­லது வாழை இலை பரப்பி அதில் வண்ண வண்­ண­மான சித்­ரான்­னங்­களை ( கலவை சாத வகை­கள்) ஐந்து அல்­லது ஏழு­பி­டி­க­ளாக பிடித்து வைத்து பூஜித்து காக்­கை­க­ளுக்­குப் படைத்து வழி­ப­டு­தல் வேண்­டும். இந்த காக்கை வழி­பாட்டை பித்ரு வழி­பா­டா­கக் கருதி வழி­ப­டு­வோ­ரும் உண்டு. தைமா­தம் மூன்­றாம் நாள் மக்­கள் யாவ­ரும் மகிழ்­வின் வெளிப்­பா­டா­கக் கொண்­டா­டு­வது காணும் பொங்­க­லா­கும். அன்று தான தர்­மம் செய்­வ­தும் பெரி­யோ­ரி­டம் ஆசி வாங்­கு­வ­தும் நம் வாழ்வை வள­மாக்­கும்" என்­றார்.