21 முதல் 80 வரை உள்ளாட்சி தலைவர்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2020

தமி­ழ­கத்­தில் 27 மாவட்­டங்­க­ளுக்கு உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்டு முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன. 27 மாவட்­டங்­க­ளில் உள்ள 91 ஆயி­ரத்து 975 பத­வி­களுக்கு தேர்­த­லா­னது நடந்­தது. மாவட்ட ஊராட்சி கவுன்­சி­லர், ஊராட்சி ஒன்­றிய கவுன்­சி­லர், ஊராட்­சித் தலை­வர், ஊராட்சி வார்டு உறுப்­பி­னர்­கள் பத­வி­யி­டங்­க­ளுக்­காக தமி­ழ­கத்­தில் டிசம்­பர் 27 மற்­றும் 30ம் தேதி­க­ளில் வாக்­குப்­ப­தி­வா­னது நடை­பெற்­றது. சரா­ச­ரி­யாக 2 கட்ட தேர்­த­லி­லும் 77 சதவீத வாக்­கு­கள் பதி­வா­கின. 91 ஆயி­ரத்து 975 பத­வி­க­ளுக்கு 3 லட்­சத்து 2 ஆயி­ரம் வேட்பு மனுக்­கள் பெறப்­பட்­ட­தில் 48 ஆயி­ரத்து 891 பேர் மனுக்­க­ளைத் திரும்­பப் பெற்­ற­னர். மேலும் 18 ஆயி­ரத்து 570 பத­வி­க­ளுக்கு வேட்­பா­ளர்­கள் போட்­டி­யின்றி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர்.

2 லட்­சத்து 31 ஆயி­ரத்து 890 வேட்­பா­ளர்­கள் களத்­தில் இருந்­த­னர்.

இவர்­க­ளில் ஊராட்சி மன்ற உறுப்­பி­னர் பத­விக்கு ஒரு லட்­சத்து 70 ஆயி­ரத்து 898 பேரும், ஊராட்­சித் தலை­வர் பத­விக்கு 35,611 பேரும் போட்­டி­யிட்­ட­னர். ஊராட்சி ஒன்­றிய வார்டு உறுப்­பி­னர் பத­விக்கு 22 ஆயி­ரத்து 776 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்­றிய உறுப்­பி­னர் பத­விக்கு 2,605 வேட்­பா­ளர்­க­ளும் களம் கண்­ட­னர். உள்­ளாட்­சித் தேர்­தல் என்ற கட­லில் ஊறிப்­போன அர­சி­யல் கட்­சி­க­ளின் திமிங்­க­லங்­க­ளுக்கு மத்­தி­யில் பெண்­க­ளும் போட்­டி­யிட்டு வெற்றி கண்டு தனி முத்­திரை பதித்­துள்­ள­னர்.

அர­சி­யல் பின்­பு­லம் கொண்­ட­வர்­கள் மட்­டுமே அர­சி­ய­லுக்கு வர முடி­யும். அர­சி­யல் என்­றால் வேண்­டவே வேண்­டாம் என்று பெண்­கள் ஒதுங்­கியே இருப்­ப­தாக சொல்­வ­தெல்­லாம் இந்த நூற்­றாண்­டி­லும் தொட­ரத் தான் செய்­கி­றது. இதில் அத்தி பூத்­தார்­போல சில எதிர்­பா­ராத அதி­ர­டி­க­ளும் நடக்­கும் அப்­ப­டி­யான சம்­ப­வம் தான் 2019 உள்­ளாட்­சித் தேர்­த­லி­லும் நடந்­தி­ருக்­கி­றது. மாண­வி­கள் முதல் 80 வயது பாட்டி வரை தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­யும்

பெற்­றி­ருக்­கின்­ற­னர்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஓசூர் அருகே உள்ள சூள­கிரி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்­டது கே.என்.தொட்டி ஊராட்சி. இந்த ஊராட்­சிக்­கான தலை­வர் பத­விக்கு 21 வயது கல்­லூரி மாணவி சந்­தியா ராணி போட்­டி­யிட்­டார். ”பிபிஏ இறு­தி­யாண்டு படிக்­கும் சந்­தியா முதல் தேர்­த­லி­லேயே வெற்றி கண்­டுள்­ளார். வயது வித்­தி­யா­ச­மின்றி தனக்கு வாக்­க­ளித்த 4 கிராம மக்­க­ளுக்கு நன்­றி­களை தெரி­வித்­துள்ள சந்­தியா, தன்னை நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளின் தேவை­களை என்­னால் முடிந்த அள­விற்கு பூர்த்தி செய்­வேன்,” என தெரி­வித்­துள்­ளார்.

சந்­தியா ராணி­யின் தந்தை ஜெய­சா­ரதி முன்­னாள் ஊராட்சி மன்­றத் தலை­வர், கே.என். தொட்டி ஊராட்சி, பெண்­கள் தொகு­தி­யாக அறி­விக்­கப்­பட்­ட­தால் சந்­தி­யா­ராணி அந்­தப் பத­விக்கு போட்­டி­யிட்ட நிலை­யில் தன்னை எதிர்த்து போட்­டி­யிட்ட வேட்­பா­ளரை 108 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் தோற்­க­டித்து ஊராட்சி மன்­றத் தலை­வ­ராகி இருக்­கி­றார்.

திரு­வள்­ளூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த 22 வயது சுபிதா திருத்­து­றைப்பூண்டி யூனி­ய­னுக்கு உட்­பட்ட பூச­லங்­குடி பஞ்­சா­யத்து தலை­வர் பத­விக்கு போட்­டி­யிட்­டார். பள்­ளிப்­ப­ரு­வத்­தில் இருந்தே மாணவ அமைப்­பில் சேர்ந்து சமூ­கப் பணி­யாற்றி வரு­கி­றார் சுபிதா. மார்க்­சிஸ்ம்ட கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாணவ அமைப்­பான எஸ்­எப்ஐ யிலும் உறுப்­பி­ன­ராக இருக்­கி­றார். 499 வாக்­கு­கள் பெற்று பஞ்­சா­யத்­துத் தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். தமி­ழ­கத்­தின் 2 ஊராட்­சி­களை இளம் பெண்­கள் தலை­வர்­க­ளாக வழி­ந­டத்த இருக்­கின்­ற­னர்.

சுபிதா, சந்­தியா ராணி மட்­டு­மல்ல இந்த தேர்­த­லில் இன்­னொரு ஆச்­ச­ரி­ய­மும் இருக்­கி­றது. முதல் முறை­யாக திரு­நங்கை ஒரு­வர் உள்­ளாட்­சித் தேர்­த­லில் ஒன்­றிய கவுன்­சி­லர் பத­விக்கு போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்­ளார். நாமக்­கல் மாவட்­டம் திருச்­செங்­கோடு ஊராட்சி ஒன்­றி­யத்­தில் இரண்­டா­வது வார்டு கவுன்­சி­ல­ருக்­கான தேர்­த­லில் போட்­டி­யிட்ட 35 வயது திரு­நங்கை ரியா 2,701 வாக்­கு­கள் பெற்று வெற்றி பெற்­றார். திமுக சார்­பில் போட்­டி­யிட்ட ரியா, மக்­கள் பிரச்­னை­க­ளைப் போக்க தான் தொடர்ந்து பாடு­ப­டப் போவ­தா­க­வும், முழு நேர அர­சி­யல்­வா­தி­யாக இருந்து மக்­க­ளுக்கு உத­வு­வேன் என்­றும் கூறி­யுள்­ளார்.

20’, 30’ மட்­டு­மல்ல இந்த தேர்­த­லில் 70+ பாட்­டி­க­ளும் வெற்றி பெற்­றுள்­ள­னர். திருப்­ழுர் மாவட்­டம் வெள்­ளக்­கோ­வில் ஊராட்சி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட மேட்­டுப்­பா­ளை­யம் ஊராட்­சிக்­கான தலை­வர் பத­விக்கு 82 வயது விசா­லாட்சி போட்­டி­யிட்­டார். முன்­னாள் அமைச்­ச­ரின் துரை ராம­சா­மி­யின் மனை­வி­யான இவர் 3,069 வாக்­கு­கள் பெற்று தலை­வர் பத­விக்கு வெற்றி பெற்­றார்.

மேலூர் ஊராட்சி ஒன்­றி­யம் அரிட்­டா­பட்டி ஊராட்சி மன்­றத் தலை­வர் பத­விக்கு 79 வய­தான வீரம்­மாள் போட்­டி­யிட்­டார். இவர் தம்மை எதிர்த்து போட்­டி­யிட்ட வேட்­பா­ளரை விட 195 வாக்­கு­கள் அதி­கம் பெற்று ஊராட்சி மன்­றத் தலை­வ­ராக வெற்றி பெற்று தேர்­தல் அதி­கா­ரி­யி­டம் இருந்து வெற்­றிச் சான்­றி­த­ழைப் பெற்­றார்.

இவ­ரைப் போலவே ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் கமுதி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட அ.தரைக்­குடி ஊராட்சி மன்­றத்­தின் தலை­வ­ராக 73 வயது மூதாட்டி தங்­க­வேலு போட்­டி­யிட்­டார். தள்­ளாத வய­தி­லும் தீவிர வாக்கு சேக­ரிப்பு செய்து வெற்­றிக்­க­னி­யை­யும் பறித்­தி­ருக்­கி­றார் இவர். சட்­ட­மன்­றம், பார்லிமென்டில் பெண்­க­ளுக்கு 33 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு வழங்­கும் மசோதா நிறை­வேற்­றப்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொண்டு இருக்­கி­றோம். ஆனால் அப்­படி இட­ஒ­துக்­கீடு தந்­தா­லும் தைரி­ய­மாக பெண்­கள் அர­சி­யல் களம் காண வேண்­டும் என்­ப­தற்கு சான்­றாக இருக்­கின்­ற­னர் உள்­ளாட்­சித் தேர்­த­லில் வயது வித்­தி­யா­ச­மின்றி வெற்றி பெற்­றுள்ள

பெண்­கள்.