மக்காததை மக்க வைத்து சாதித்த இஷானா! – சுமதி

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2020

இஷானா தயா­ரிக்­கும் துணி நாப்­கின்­கள் ரசா­ய­னங்­க­ளற்­றது, மக்­கும் தன்மை கொண்­டது, மறு­ப­யன்­பாட்­டிற்கு உகந்­தது. இவர் 25 பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்கி அவர்­க­ளுக்கு வரு­வாய் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்.

”மங்­கை­ய­ராய் பிறப்­ப­தற்கே நல்ல மாத­வம் செய்­தி­டல் வேண்­டு­மம்மா...” என்­றார் கவி­மணி தேசிக விநா­ய­கம் பிள்ளை. அவ்­வாறு மாத­வம் செய்து பிறக்­கும் மங்­கை­யர்­கள் இன்று நட­னம் தொடங்கி நாசா வரை­யி­லும் பல்­வேறு துறை­க­ளில் கால் பதித்து சாத­னைப் படைத்து வரு­கின்­ற­னர். பல­வீ­ன­மா­ன­வர்­க­ளா­கக் கரு­தப்­பட்ட பெண்­கள் வலிமை மிகுந்­த­வர்­கள் என நிரூ­பிக்­கத் துவங்­கி­யுள்ள காலம் இது.

பொது­வா­கவே பெண்­கள் பல்­வேறு பணி­களை ஒரே சம­யத்­தில் கவ­னம் செலுத்­தக்­கூ­டிய திறன்­மிக்­க­வர்­கள். இருப்­பி­னும் அத்­த­கைய திற­மை­சா­லி­க­ளான பெண்­கள் மாத­வி­டாய் சம­யத்­தில் பல அச­வு­க­ரி­யங்­களை சந்­திக்க வேண்­டி­யுள்­ளது. மாத­வி­டாய் சம­யத்­தில் துணி­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யப் பெண்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக அறி­மு­க­மா­ன­து­தான் சானிட்­டரி நாப்­கின்­கள்.  இந்த சானிட்­டரி நாப்­கின்­கள் பல தர்­ம­சங்­க­டங்­க­ளுக்கு தீர்­வாக உள்­ள­போ­தும் இத­னால் பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­கி­றது என்­ப­தை­யும் நாம் மறுப்­ப­தற்­கில்லை. சானிட்­டரி பேட்­களை ஒரு­முறை பயன்­ப­டுத்­திய பிறகு தூக்கி எறிந்­து­வி­ட­வேண்­டும். இவற்றை மறு­சு­ழற்சி செய்ய போது­மான வச­தி­கள் நம்­மி­டையே இல்லை. இத­னால் அவை சுகா­தா­ர­மற்ற முறை­யில் அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. சாக்­க­டை­க­ளி­லும் கால்­வாய்­க­ளி­லும் வீசப்­ப­டு­கி­றது. இது ஒரு­பு­ற­மி­ருக்க இந்த சானிட்­டரி நாப்­கின்­கள் பிளாஸ்­டிக் இழை­கள் கொண்டு தயா­ரிக்­கப்­பட்டு, சில ரசா­ய­னங்­ளும் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. இதைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­து­வ­தால் பெண்­க­ளின் ஆரோக்­கி­யத்­திற்கு பாதிப்பு ஏற்­ப­டும் அபா­யம் உள்­ளது என மருத்­து­வர்­க­ளும், சமூக ஆர்­வ­லர்­க­ளும் மீண்­டும் மீண்­டும் கூறி வரு­கின்­ற­னர். சரி! இதற்­குத் தீர்­வு­தான் என்ன? இது­தானே உங்­கள் கேள்வி.

அவ­சர உணவு வகை­களை சாப்­பிட்டு ஆரோக்­கி­யத்தை கெடுத்­துக்­கொண்ட நாம் மீண்­டும் சிறு­தா­னி­யங்­க­ளைத் தேடி வாங்­கு­வ­தில்­லையா? பல நவீன அணி­க­லன்­க­ளைப் பயன்­ப­டுத்தி மகிழ்ந்­தா­லும் பழைய வடி­வ­மைப்­பு­க­ளான ‘ஆண்­டிக் ஜுவல்­ல­ரி­களை ஆர்­வ­மாக வாங்­கு­வ­தில்­லையா? ஆம். அதே போல் தான், சானிட்­டரி நாப்­கின் பிரச்­னை­க­ளுக்­கும் இதே தீர்­வு­தான். பிளாஸ்­டிக் கொண்டு தயா­ரிக்­கப்­ப­டும் சானிட்­டரி பேட்­க­ளுக்கு சரி­யான மாற்று துணி நாப்­கின்­கள்­தான். இதை சரி­யாக புரிந்­து­கொண்டு கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றார் கோவை கண­பதி நக­ரைச் சேர்ந்த இஷானா.

இவர் பருத்­தித் துணி­க­ளால் ஆன நாப்­கினை தயா­ரித்து வரு­கி­றார். இவை மக்­கும் தன்மை கொண்­டவை. பருத்தி பேட் தயா­ரிக்­கும் இஷானா 12ம் வகுப்பு படித்­துள்ள இவர் தைய­லில் சான்­றி­தழ் பட்­ட­யப்­ப­டிப்பு முடித்­துள்­ளார். இவ­ரது அம்­மா­வு­டன் இணைந்து தையல் தொழில் புரிந்து வரு­கி­றார். இவ­ரது பெற்­றோர் இவரை உயர்­கல்வி படிக்க வற்­பு­றுத்­தி­ய­போ­தும் தொழில்­மு­னைவு ஆர்­வத்­தால் தையல் வேலை­யில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார். மாத­வி­டாய் சம­யத்­தில் சந்­தை­யில் கிடைக்­கும் சானிட்­டரி நாப்­கின்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தால் இஷா­னா­விற்கு உடல் உபா­தை­கள் ஏற்­பட்­டது. இத­னால் இவர் தனது சொந்த பயன்­பாட்­டிற்­காக துணி நாப்­கின்­களை தயா­ரிக்­கத் தொடங்­கி­னார். அவ­ரைப் போன்றே பிரச்­னை­களை சந்­தித்த அவ­ரது தோழி­க­ளுக்­கும் இந்த தயா­ரிப்­பைக் கொடுத்­துள்­ளார். அவர்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த வர­வேற்­பைத் தொடர்ந்து அதி­க­ள­வில் துணி பேட்­க­ளைத் தயா­ரிக்­கத் தொடங்­கி­னார்.

 ”நான் இந்­திய மக்­க­ளுக்­காக இந்த பணி­யில் ஈடு­பட்­டுள்­ளேன். பிளாஸ்­டிக் கொண்டு தயா­ரிக்­கப்­ப­டும் வழக்­க­மான சானிட்­டரி நாப்­கின்­க­ளால் ஒவ்­வொரு பெண்­ணும் சரு­மத்­தில் தடிப்பு ஏற்­ப­டு­வது போன்ற பிரச்­னை­களை சந்­திக்­கின்­ற­னர்,” என்­றார் இஷானா.  இஷானா தயா­ரிக்­கும் மறு­ப­யன்­பாட்­டிற்கு உகந்த நாப்­கின்­கள் 120 ரூபாய் விலை­யில் கிடைக்­கி­றது. வழக்­க­மான பிளாஸ்­டிக் நாப்­கின்­கள் மக்­கு­வ­தற்கு வரு­டக்­க­ணக்­கில் ஆகும். ஆனால் இந்த துணி நாப்­கின்­கள் ஆறு நாட்­க­ளில் மக்­கி­வி­டக்­கூ­டி­யது. இவற்றை துவைத்து 12 முறை வரை பயன்­ப­டுத்­த­லாம்.

"இந்த துணி நாப்­கின்­களை வழக்­க­மான முறை­யில் துவைத்த பிறகு மஞ்­சள்­பொ­டி­யில் ஊற­வைக்­க­லாம். வெயி­லில் காய­வைக்­க­வேண்­டும். அடுத்த மாதம் இந்த நாப்­கினை எடுத்து பயன்­ப­டுத்­து­வ­தற்கு இரண்டு நாட்­கள் முன்பு ஈரத்­து­ணிக்கு அடி­யில் நாப்­கினை வைத்து அயர்ன் செய்­தால் நல்­லது,” என்­கி­ரார் இஷானா.

இஷானா பெண்­க­ளின் ஆரோக்­கி­யத்­தில் கவ­னம் செலுத்­து­வ­து­டன் அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பும் அளித்து வரு­கி­றார். நாப்­கின் தயா­ரிக்­கும் பணி­யில் 25 பெண்­களை இணைத்­துக் கொண்­டுள்­ளார். கட் செய்­யப்­பட்ட துணி­களை இந்த பெண்­கள் வீட்­டுக்கு எடுத்­துச் சென்று அங்கே இஷானா பயிற்சி அளித்­தப்­படி தைத்து அதை விற்­ப­னைக்கு தயா­ராக்­கு­கின்­ற­னர்.இந்த நாப்­கின்­களை பயன்­ப­டுத்­தும் பய­னா­ளி­கள் கூறும்­போது, “ஜெல், பசை போன்ற ரசா­ய­னங்­கள் கலந்த சானிட்­டரி பேட்­கள் பல­ருக்கு ஒவ்­வாமை ஏற்­ப­டுத்­து­கி­றது. சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் தீங்கு விளை­விக்­கி­றது. ஆரம்­பத்­தில் பருத்தி நாப்­கி­னுக்கு மாறு­வ­தில் சில சங்­க­டங்­கள் இருந்­தா­லும் பிறகு மிக­வும் எளி­தா­க­வும் வச­தி­யாக இருக்­கி­றது,” என்­கின்­ற­னர்.