கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 9–1–2020

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2020

ஆக்ட் என்பதன் பேக்ட் (FACT)

மூன்று நடி­கர்­கள் தமிழ் நாட்­டின்

முதல்வர்­கள் ஆனார்­கள்.

மூன்று நடி­கர்­கள் = திரீ ஆக்­டர்ஸ் Three actors

ஆஃப் தமிழ் நாடு = தமிழ் நாட்­டின் Tamil Nadu’s

முதல்வர்­கள் = சீப் மினிஸ்­டர்ஸ் Chief Ministers

ஆனார்­கள் = bபிகேம் became

Three actors became Chief Ministers of Tamil Nadu.

bபிகேம் (became) என்­பது bபிகம் (become) என்­ப­தன் கடந்த கால வடி­வம். ஆவதை அது குறிக்­கி­றது.

ஒரு நிறு­வ­னத்­தில், சாதா­ரண வேலை­யில் அவன் சேர்ந்­தான். தன்­னு­டைய கடின உழைப்­பின் கார­ண­மாக அந்த நிறு­வ­னத்­தின் தலை­வர் ஆனான். ஹீ ஜொயிண்dடு அ கம்­பெனி இன் ஆன் ஆர்d­­டி­னரி பொஸி­ஷன். துரூ ஹிஸ் ஹார்dட் வர்க், ஹீ bபிகேம் dத ஹெdட் ஆஃப் dத கம்­பெனி. He joined a company in an ordinary position. Through his hard work he became the head of the company.

அவன் பணக்­கா­ரன் ஆகி­விட்­டான். ஹீ bபிகேம் ரிச். He became rich.

அவ­னுக்­குக் கோபம் வந்­து­விட்­டது. ஹீ bபிகேம் ஆங்gக்ரி. He became angry.

நாங்­கள் மிக நெருக்­கம் ஆகி­விட்­டோம். வீ bபிகேம் வெரி குளோஸ். We became very close.

அவள் மிக­வும் ஏழை ஆகி­விட்­டாள். ஷீ bபிகேம் வெரி புவர். She became very poor. She became very poor.

மிக­வும் இருட்­டா­கி­விட்­டது. இட் பிகேம் வெரி dடார்க். It became very dark.

' ஆக்ட்' (act)   என்ற வினைச் சொல்­லின் ஒரு பொருள் நடிப்­பது என்­பது.

அவன் மிக­வும் நன்­றாக நடிக்­கி­றான். ஹீ ஆக்ட்ஸ் வெரி வெல். He acts very well.

கப்­ப­லோட்­டிய தமி­ழ­னாக சிவாஜி நடித்­தார். சிவாஜி ஆக்­டெdட் ஆஸ் கப்­ப­லோட்­டிய தமி­ழன். Sivaji acted as Kappalottiya Tamizhan.

தசா­வ­தா­ரத்­தில் கம­ல­ஹா­சன் பத்­து­வே­டங்­க­ளில் நடித்­தார். கம­ல­ஹா­சன் ஆக்­டெdட் இன் டென் ரோல்ஸ் இன் தசா­வ­தா­ரம். Kamalahasan acted in ten roles in Dasavathaaram.

' ஆக்ட்'  செய்­வது என்­றால் நடிப்­பது.. ஆக்­டிங் (acting) என்­றால் நடிப்­பு…­­அ­தா­வது நடிப்­புக்­கலை.

தமி­ழர்­க­ளுக்கு, சிவாஜி கணே­சன் ஒரு நடிப்­புக்­க­லைக் கட­வுள். ஃபார் டாமிள்ஸ், சிவாஜி கணே­சன் இஸ் அ gகாட் ஆஃப் ஆக்­டிங். For Tamils, Sivaji Ganesan is a god of acting.

dத நட்டி புரோஃ­பெஸ்­ஸர் என்ற திரைப்­ப­டத்­தில் எdட்dடி மர்ஃபி ஏழு வேடங்­க­ளில் நடித்­தார். எdட்dடி மர்ஃபி ஆக்­டெdட் இன் ஸெவென் ரோல்ஸ் இன் dத நட்டி புரோஃ­பெஸ்­ஸர். Eddie Murphy acted in seven roles in The Nutty Professor.

1949ல் வெளி­வந்த கைண்dட் ஹார்ட்ஸ் ஆண்ட் கோரோ­னெட்ஸ் என்ற படத்­தில் அலெக் gகின்­னஸ் ஒன்­பது வேடங்­க­ளில் நடித்­தார். அலெக் கின்­னஸ்    ஆக்­டெdட் இன் நைன் ரோல்ஸ் இன் dத 1949 ஃபிலிம் கைண்dட் ஹார்ட்ஸ் ஆண்ட் கோரோ­னெட்ஸ். Alec Guinness acted in nine roles in the 1949 film, Kind Hearts and Coronets.

நடிப்பு என்ற பொரு­ளில் அல்­லா­மல் பொது­வான அர்த்­தத்­தில் ஆக்ட் (act) வரும் போது அதன் பயன்­பா­டு­க­ளைக் கவ­னி­யுங்­கள்.

ஸ்பீக் லெஸ். ஆக்ட் மோர். Speak less. Act more. (நீ) குறை­வா­கப் பேசு. அதி­க­மா­கச் செய் (அதா­வது செயல்­படு, செய­லில் ஈடு­படு).

மருத்­து­வர் விரை­வா­கச் செயல்­பட்டு, அவன் உயி­ரைக் காப்­பாற்­றி­னார். dத டாக்­டர் ஆக்­டெdட் ஸ்விஃப்ட்லீ அண்ட் ஸேவ்dட் ஹிஸ் லைஃப். The doctor acted swiftly and saved his life.

ஒரு­வி­த­மாக நடந்­து­கொள்­வது என்ற பொரு­ளில் 'ஆக்ட்' பயன்­ப­டு­கி­றது.

அந்த ஆள் சந்­தே­கத்­திற்கு உரிய விதத்­தில் நடந்­து­கொண்­டான். dத மேன் ஆக்­டெdட் இன் அ ஸஸ்­பி­ஷஸ் மேன்­னர். The man acted in a suspicious manner.

ஸஸ்­பி­ஷி­யஸ் என்­ப­து­போல் ஆங்­கில எழுத்­துக்­கள் இருந்­தா­லும், ஸஸ்­பி­ஷஸ் என்­ப­து­தான் உச்­ச­ரிப்பு என்று மன­தில் நிறுத்­திக்­கொள்­ளுங்­கள்.

இந்த வகை­யில் உச்­ச­ரிப்பு கொண்­டவை, ஆஸ்­பி­ஷஸ் (auspicious), dடெலி­ஷஸ் (delicious), ambitious (ஆம்­பி­ஷஸ்), vicious (விஷஸ்) போன்ற சொற்­கள். எல்­லாம் 'ஷஸ்' என்று முடி­ப­வை­தான்.

என்­னப்பா வய­சா­கி­யும் சின்­னக்­கு­ழந்தை மாதிரி நடந்­துக்­கொள்­கி­றாய். வய­துக்­குத் தக்­க­படி நடந்­து­கொள். ஆக்ட் யோர் ஏஜ். Act your age.

ஆம்­ப­ளையா நடந்­து­கொள். ஆக்ட் லைக் அ மேன். Act like a man.

அவள் வேக­மாக செயல்­பாட்­டில் இறங்­கு­கி­றாள். ஷீ ஆக்ட்ஸ் ஸ்விஃப்ட்லி. She acts swiftly.

நடந்­து­கொள்­ளும் முறையை 'ஆக்ட்' கொண்டு குறிப்­பி­ட­லாம்.

ஹீ ஆக்­டெdட் ஃபூலிஷ்லி வென் ஷீ மெட் ஹிம்.

ஹீ He = அவன்

ஆக்­டெdட் acted = நடந்­து­கொண்­டான்

ஃபூலிஷ்லி foolishly = முட்­டாள்­த­ன­மாக

வென் ஷீ மெட் ஹிம் when she met him = அவள் அவனை சந்­தித்­த­போது.

ஒரு குறிப்­பிட்ட பணி­யில் செயல்­ப­டு­வதை 'ஆக்ட்'   (act) என்ற சொல்­லின் வாயி­லாக வெளிப்­ப­டுத்­த­லாம்.

ஷீ ஆக்ட்ஸ் ஆஸ் த கம்­பெ­னீஸ் ெஜர்­மன் இண்­டர்­பி­ரெ­டர். She acts as the company’s German interpreter. அந்­தக் கம்­பெ­னி­யின் ெஜர்­மன் மொழி இண்­டர்­பி­ரெ­ட­ராக அவள் செயல்­ப­டு­கி­றாள்.

இண்­டர்­பி­ரெ­டர் (interpreter) = பேச்சை உட­னுக்­கு­டன் பொழி­பெ­யர்த்­துக்­கூ­று­ப­வர்.

ஆக்­டிங் acting என்­றால் நடிப்பு. ஒரு­வர் ஆக்­டிங் என்­றால் என்ன என்று கூறி­னார். கற்­பனை சூழ்­நி­லை­க­ளில் உண்­மை­போல் இயங்­கு­வற்கு நடிப்பு என்று பெயர். ஆக்­டிங் இஸ் bபிஹே­விங் லைக் ரியல் இன் இமே­ஜி­னரி ஸிச்­சு­வே­ஷன்ஸ். Acting is behaving like real in imaginary situations. பெய­ர­டை­யாக (ஆட்­ஜெக்­டிவ் adjective) 'ஆக்­டிங்' சீஃப் ஜஸ்­டிஸ், 'ஆக்­டிங்' கவர்­னர் என்­றெல்­லாம் 'ஆக்­டிங்' பயன்­ப­டு­கி­றது. இன்­னொ­ரு­வர் ஏற்­க­வேண்­டிய பொறுப்­பைத் தாற்­கா­லி­க­மாக ஏற்­றி­ருப்­ப­வர் என்று பொருள். ஸ்டாப் ஆக்­டிங் லைக் அ பேபி (Stop acting like a baby) என்­றால், ஒரு பாப்­பா­வைப் போல் நடந்­து­கொள்­வதை நிறுத்து என்று பொருள்.

ஷீ இஸ் ஆக்­டிங் இன் அ ஸ்டிரேஞ்ச் மேன்­னர் (She is acting in a strange manner) என்­றால் அவள் வினோ­த­மான, விசித்­தி­ர­மான முறை­யில் நடந்­து­கொள்­கி­றாள் என்று பொருள். இது பாராட்­டுக்­கு­ரிய விதத்­தில் சொல்­லப்­ப­டு­வது அல்ல.

வென் பீபில் ஸ்டாப் ஆக்­டிங் ஸெல்ஃ­பிஷ்லி, dத வர்ள்ட் வில் bபீ அ பெbட்­டர் பிளேஸ். When people stop acting selfishly, the world will be a better place. மக்­கள் சுய­நல நோக்­கத்­து­டன் நடந்­து­கொள்­வதை நிறுத்­தும்­போது, இந்த உல­கம் இப்­போது இருப்­பதை விட சிறந்த இட­மாக

 இருக்­கும்!

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in