ஐயப்பனின் அறுபடை வீடு: சொரிமுத்து அய்யனார் கோயில்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2020

தல வர­லாறு : கைலா­யத்­தில் சிவ, பார்­வதி திரு­ம­ணம் நடந்­த­போது பூமியை சமப்­ப­டுத்த அகத்­தி­யரை பொதிகை மலைக்கு அனுப்­பி­னார் சிவன். அகத்­தி­யர் பொதி­கை­யில் தங்­கி­யி­ருந்த போது, லிங்க பூஜை செய்­தார். காலப்­போக்­கில் அந்த லிங்­கம் மண்­ணால் மூடப்­பட்­டு­விட்­டது. பிற்­கா­லத்­தில், இவ்­வ­ழி­யாக சென்ற மாடு­கள் ஓரி­டத்­தில் மட்­டும் தொடர்ந்து பால் சொரிந்­தன. இது­பற்றி அப்­ப­குதி மன்­ன­ரி­டம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. அங்கே தோண்­டிய போது, ஒரு லிங்­கம் உள்ளே இருந்­த­தைக் கண்­டெ­டுத்து கோயில் எழுப்­பி­னார். இத்­த­லத்­தி­லேயே தர்ம சாஸ்­தா­வுக்­கும் சன்­னதி கட்­டப்­பட்­டது. சாஸ்­தாவை கிரா­மப்­பு­றங்­க­ளில் அய்­ய­னார் என்­பர். அய்­யன் என்­றால் தலை­வன். இதில் மரி­யா­தைக்­காக ஆர் விகுதி சேர்ப்­பர். பக்­தர்­க­ளுக்கு அரு­ளைச் சொரி­ப­வர் என்­ப­தால் இவர் சொரி­முத்து ஐய­னார் எனப்­பட்­டார்.

அதி­ச­யத்­தின் அடிப்­ப­டை­யில்: முரு­க­னுக்கு ஆறு­படை வீடு இருப்­பது போல் ஐயப்­ப­னுக்­கும் சொரி­முத்து அய்­ய­னார் கோயில், அச்­சன்­கோ­வில், ஆரி­யங்­காவு, குளத்­துப்­புழை, பந்­த­ளம், சப­ரி­மலை என ஆறு­படை வீடு உள்­ளது. சப­ரி­ம­லை­யி­லேயே சாஸ்தா முத­லில் அமர்ந்­தார் என்று சொல்­வ­துண்டு. ஆனால், அதற்­கும் முன்­ன­தாக அமைந்த கோயி­லாக இந்த சாஸ்தா கோயில் கரு­தப்­ப­டு­கி­றது. இங்­குள்ள சாஸ்தா இட­து­காலை மட்­டும் குத்­துக்­கா­லிட்டு, வலது காலை தொங்­க­விட்­ட­படி, சற்றே இடப்­பு­ற­மாக திரும்­பி­யி­ருக்­கி­றார். இவ­ருக்கு எதிரே ஒரே பீடத்­தில் நந்தி, யானை, குதிரை வாக­னங்­கள் இருப்­ப­தும், இவ­ரது சன்­ன­தி­யி­லேயே சப்­த­கன்­னி­யர்­கள் இருப்­ப­தும், முன்­மண்­ட­பத்­தில் உள்ள பைர­வ­ரின் எதிரே நாய் வாக­னம் இருப்­ப­தும் விசே­ஷ­மான அம்­சம். குல­தெய்­வம் தெரி­யா­த­வர்­கள் இவரை வழி­ப­டு­கி­றார்­கள்.

தல­பெ­ருமை: பொதிகை மலை மீதுள்ள இந்­தக் கோயி­லில், ஆடி அமா­வாசை விழா பிர­சித்­தம். இங்கே சாஸ்தா சொரி­முத்­தைய்­ய­னார் என்ற பெய­ரில், பூர்ண, புஷ்­கலா தேவி­ய­ரு­டன் அருள் செய்­கி­றார். சப­ரி­மலை செல்­ப­வர்­கள் சாஸ்­தா­வின் முதல் கோயி­லான இங்கு வந்து மாலை அணி­விக்­கின்­ற­னர்.

சிறப்­பம்­சம்: பந்­தள மன்­னர் அரண்­ம­னை­யில் வளர்ந்து வந்த சாஸ்­தா­வின் அம்­ச­மான ஐயப்­பன், தன் இள வய­தில், இப்­ப­கு­திக்கே முதன் முத­லில் வீர விளை­யாட்டு கற்க வந்­தார். அதன் கார­ண­மாக இங்கு முதன் முத­லில் கோயில் எழுந்­த­தா­க­வும், அடுத்து அவ­ரது வர­லாற்று நிகழ்­வு­கள் நடந்த குளத்­துப்­புழை, ஆரி­யங்­காவு, அச்­சன்­கோ­வில் தலங்­க­ளில் கோயில்­கள் எழுப்­பப்­பட்­ட­தா­க­வும், இறு­தி­யாக அவர் தவம் மேற்­கொள்ள சப­ரி­மலை சென்ற போது தான், சப­ரி­மலை கோயில் தோன்­றி­ய­தா­க­வும் ஒரு கருத்து இருக்­கி­றது.

செருப்பு காணிக்கை: இப்­ப­கு­தி­யில் வசித்த பிரா­ம­ண­ரான முத்­துப்­பட்­டன் என்­ப­வர், பிரா­மண குலத்­தில் பிறந்து, சூழ்­நிலை கார­ண­மாக தாழ்த்­தப்­பட்ட குலத்­தில் வளர்ந்த இரு பெண்­க­ளைக் காதல் திரு­ம­ணம் செய்து கொண்­டார். காத­லுக்கு ஜாதி­யில்லை என்­பதை முதன் முத­லாக நிரூ­பித்த இவர், பசுக்­க­ளைப் பாது­காக்­கும் ஒரு போரில் பங்­கேற்று மர­ண­ம­டைந்­தார். அவரை பட்­ட­வ­ரா­யன் என்று அழைத்து, இந்­தக் கோயி­லின் ஒரு பகு­தி­யில் சன்­ன­தி­யும் எழுப்­பி­னர். பொம்­மக்கா, திம்­மக்கா என்ற தம் மனை­வி­ய­ரு­டன் பட்­ட­வ­ராய சுவாமி அருள்­கி­றார். இவர் பிரா­ம­ண­ரா­யி­ருந்­தும், தன் மாம­னார் உத்­த­ர­வுப்­படி, காதல் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தற்­காக, செருப்பு தைக்­கும் பயிற்­சி­யும் எடுத்­துக் கொண்­டார். இதன் கார­ண­மாக இவ­ரது சன்­ன­தி­யில் பக்­தர்­கள் செருப்­பு­களை காணிக்­கை­யாக கட்­டு­கின்­ற­னர். முதல் ஆண்டு கட்­டப்­ப­டும் செருப்பை மறு­ஆண்­டில் போய் பார்த்­தால் அது தேய்ந்­தி­ருக்­கும். பட்­ட­வ­ரா­யரே இந்த செருப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­து­கி­றார் என்று பக்­தர்­கள் பர­வ­சத்­து­டன் சொல்­கின்­ற­னர். இது வனப்­ப­குதி என்­ப­தால் ஆட்­க­ளும் அதி­கம் செல்­வ­தில்லை. செல்­ப­வர்­க­ளும் இந்த செருப்­பு­க­ளைத் தொடு­வ­து­மில்லை. அப்­ப­டி­யி­ருந்­தும், செருப்­பு­கள் தேய்­வது, கலி­யுக அதி­ச­ய­மா­கவே இருக்­கி­றது.

இரட்டை யானை விநா­ய­கர்:கோயில் வளா­கத்­தில் இலுப்பை மரம் இருக்­கி­றது. இதனை, மணி விழுங்கி மரம் என்­கின்­ற­னர். பக்­தர்­கள் பிரார்த்­த­னைக்­காக இம்­ம­ரத்­தில் கட்­டும் மணி­களை, மரம் விழுங்­கி­வி­டு­வ­தைப் போல, உள்­ளேயே பதிந்து விடு­கின்­றன. இது பக்­தர்­க­ளின் காணிக்­கையை சுவாமி, ஏற்­றுக்­கொள்­வ­தன் அடை­யா­ள­மாக இருப்­ப­தாக சொல்­கி­றார்­கள். இம்­ம­ரத்­திற்கு கீழே சங்­கி­லி­பூ­தத்­தார், மொட்­டை­யர், பாதாள கண்­டிகை, கும்­பா­மணி ஆகிய காவல் தெய்­வங்­கள் இருக்­கின்­றன. அரு­கி­லேயே ஒரு விநா­ய­கர் இருக்­கி­றார். இவ­ருக்கு இரு­பு­ற­மும் இரண்டு யானை­கள் இருப்­பது வித்­தி­யா­ச­மான அமைப்பு.

பொது தக­வல்: மகா­லிங்­கம், சொரி­முத்­தைய்­ய­னார், சங்­கிலி பூதத்­தார், பிரம்­ம­ரட்­சஸி, தள­வாய்­மா­டன், தூசி­மா­டன், பட்­ட­வ­ரா­யர், அகத்­தி­யர், பேச்­சி­யம்­மன், சுட­லை­ மா­டன், இரு­ளப்­பன், இரு­ளம்­மன், கர­டி­மா­ட­சாமி, மொட்­டை­யர், பாதாள கண்­டிகை, கும்­பா­மணி ஆகிய காவல் தெய்­வங்­கள் உள்­ள­னர்.

பிரார்த்­தனை: பக்­தர்­கள் பிரார்த்­த­னைக்­காக இம்­ம­ரத்­தில் கட்­டும் மணி­களை, மரம் விழுங்­கி­ வி­டு­வ­தைப் போல, உள்­ளேயே பதிந்து விடு­கின்­றன. இதனை, மணி விழுங்கி மரம் என்­கின்­ற­னர்.

நேர்த்­திக்­க­டன்: ஆடி அமா­வா­சை­யின் போது பக்­தர்­கள் பூக்­குழி இறங்கி நேர்த்­திக்­க­டன் செலுத்­து­ கின்­ற­னர். இங்­குள்ள அய்­ய­னா­ருக்கு பக்­தர்­கள் செருப்பு காணிக்கை செலுத்­து­கின்­ற­னர்.

திரு­விழா: ஆடி, தை அமா­வாசை, கடைசி வெள்ளி, பங்­குனி உத்­தி­ரம்.

திறக்­கும் நேரம்: காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்­தி­ருக்­கும்.

முக­வரி: சொரி­முத்து அய்­ய­னார் திருக்­கோ­யில் காரை­யார், பாப­நா­சம், திரு­நெல்­வேலி மாவட்­டம்.