மனநிலையை மாற்றும் ஐஸ்கிரீம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2020

சுவை, மணம், தரம் இந்த மூன்­றை­யும் வைத்து தான் ஐஸ்­கி­ரீம்­களை தயா­ரித்து வந்­த­னர். இப்­போது, மன நிலையை மேம்­ப­டுத்த உத­வும் ஐஸ் கிரீம், அமெ­ரிக்­கா­வில் அறி­மு­க­மாகி இருக்­கி­றது.

'மூடீஸ்' என்ற ஐஸ் கிரீம் நிறு­வ­னம், வழக்­க­மான மணம் கொண்ட ஐஸ் கிரீம்­க­ளு­டன், குறிப்­பிட்ட சில எண்­ணெய், சத்­துப் பொருட்­களை சேர்த்து விற்­பனை செய்­கி­றது. உதா­ர­ணத்­திற்கு, மூடீ­ஸின் அதிக விற்­பனை காணும் ரோஸ்­மேரி, புதினா எண்­ணெய் கலந்த ஐஸ் கிரீமை எடுத்­துக் கொள்­ளுங்­கள்.

ரோஸ்­மேரி எண்­ணெய், மன அமைதி, தெளிவை தரு­வ­தா­க­வும், புதினா எண்­ணெய் மூளைக்கு சுறு­சு­றுப்பை தரு­வ­தா­க­வும் சொல்­கின்­ற­னர் மூடீஸ் நிறு­வ­னர்­கள். லாவண்­டர், தேன், புளூ­பெர்ரி கலந்த ஐஸ் கிரீம், மன அழுத்­தத்தை குறைக்­கி­றது என­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.கடந்த, 2019 ஜூனில் அறி­மு­க­மான மூடீஸ், ஊட­கங்­க­ளின் கவ­னத்தை கவர்ந்­தி­ருப்­ப­தோடு, விரை­வில் அமெ­ரிக்கா முழு­வ­தும் கிளை பரப்ப உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.


இறைச்சி அரைக்­கும் இயந்­தி­ரத்­தில் சிக்­கிய நேபாளி

மலே­சி­யா­வில் இறைச்சி அரைக்­கும் இயந்­தி­ரத்­தில் சிக்கி நேபாள நாட்­டைச் சேர்ந்த தொழி­லாளி பலி­யா­கி­யுள்­ளார். மலாக்கா மாநி­லத்­தில் மஸ்­ஜித் தானா அருகே உள்ள இறைச்சி பதப்­ப­டுத்­தும் தொழிற்­சா­லை­யில் 47வயது உடைய நேபாள நாட்­டைச் சேர்ந்­த­வர் வேலை செய்­துள்­ளார். இவ­ரும், மற்ற மூன்று பேரும் இறைச்சி அரைக்­கும் இயந்­தி­ரத்தை பரா­ம­ரிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். தீடீ­ரென்ற இயந்­தி­ரம் செயல்­ப­ட­வும், அதில் எதிர்­பா­ர­த­வி­த­மாக நேபா­ளத்­தைச் சேர்ந்த தொழி­லாளி விழுந்­துள்­ளார். அரு­கில் இருந்­த­வர்­கள் சுதா­ரிக்­கும் முன், அவ­ரது இடுப்பு வரை இயந்­தி­ரம் நொறுக்கி தள்­ளி­யுள்­ளது. அவ­ரின் உடல் பாகங்ளை அரை மணி நேரம் போராடி இயந்­தி­ரத்­தில் இருந்து மீட்­டுள்­ள­னர்.

மலே­சி­யா­வில் சுமார் 20 லட்­சம் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் வேலை செய்­கின்­ற­னர். இதில் 3 லட்­சத்து 60 ஆயி­ரம் பேர் நேபா­ளத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என செய்தி நிறு­வ­னம் பெர்­னாமா தெரி­வித்­துள்­ளது. இவர்­க­ளில் பெரும்­பா­லோர் பாது­காப்பு, கட்­டு­மா­னம், ஹோட்­டல் ஆகி­ய­வற்­றில் வேலை செய்­கின்­ற­னர். சென்ற வரு­டம் காத்­மாண்டு போஸ்ட் என்ற நாளி­தழ், நேபாள தூத­ர­கத்தை மேற்­கோள்­காட்டி மலே­சி­யா­வில் 2018ல் தற்­கொலை, நோய், விபத்து உட்­பட பல்­வேறு கார­ணங்­க­ளால் 322 நேபாள தொழி­லா­ளர்­கள் இறந்­த­தாக கூறி­யது.

***