பிரம்பு தான் பேசும்!

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2020

கோவை மாவட்­டம், மோட்­டுப்­பா­ளை­யம், தாச­னுார் நடு­நி­லைப் பள்­ளி­யில், 1968ல், 6ம் வகுப்பு படித்த போது, திக்கி திக்கி பேசு­வேன்.

புதி­தாக வந்த ஆசி­ரி­யர் கண்­ணப்­பன், முதல் நாள் வகுப்­பில், மாணவ, மாண­வி­ய­ரின் சுய விவ­ரங்­களை, லேசாக திக்­கி­ய­படி விசா­ரித்­தார்.

வகுப்பு முடிந்­த­தும், என்னை மட்­டும் அழைத்து, 'நாளைக்கு, 20 குறளை மனப்­பா­டம் செய்து, மூன்று நிமி­டத்­தில் ஒப்­பிக்­க­ணும்; இல்­லன்னா பிரம்பு தான் பேசும்...' என்­றார்.

திக்­கி­ய­ப­டியே பேசி­ய­தால், 'அவரை கிண்­டல் செய்­வ­தாக எண்ணி, தண்­டனை கொடுக்­கி­றார்' என, பயந்­தேன். இர­வெல்­லாம் படித்து, மறு­நாள், நான்­கரை நிமி­டத்­தில் திக்­கித் திணறி ஒப்­பித்­தேன்.

மேலும், 20 குறளை மனப்­பா­டம் செய்து, ஒப்­பிக்க கூறி­னார்; அவற்றை, மூன்­றரை நிமி­டத்­தில் சொன்­னேன். திக்­கிப் பேசு­வது வெகு­வாக குறைந்­தி­ருந்­தது.

நால­டி­யார், ஆத்­திச்­சூடி, இன்னா நாற்­பது, திரி­க­டு­கம் என்று, பழந்­த­மிழ் இலக்­கி­யப் பாடல்­களை ஒப்­பிக்க, வலி­யு­றுத்­திக் கொண்­டே­யி­ருந்­தார். இந்த பயிற்­சி­யால், சர­ள­மாய் பேச, படிக்க ஆரம்­பித்­தேன். திக்­கு­வாய் மறைந்­து­விட்­டது.

ஆறு மாதத்­திற்­குப் பின், 'பார்த்­தாயா... முறை­யாக பயிற்சி செய்­தால், தடை­களை உடைக்­க­லாம். இள­மை­யில் எனக்கு பயிற்­சி­ய­ளிக்க யாரு­மில்லை. உனக்­கும் அந்த மாதிரி நிலை வரக் கூடா­தென்று தான், தமிழ் பாக்­க­ளால் பயிற்சி அளித்­தேன்...' என்­றார். எனக்கு ஆனந்த கண்­ணீர் பெருக்­கெ­டுத்­தது.

தற்­போது என் வயது, 62; இன்­றும் அந்த ஆசி­ரி­யரை நன்­றி­யு­டன் நினைக்­கி­றேன்.

–- சி.லிங்­கம்­மாள், கோவை.