முன்னேற வேண்டிய மூவர்!

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2020

ஈரோடு மாவட்­டம், கோபி, பங்­க­ளா­பு­துார், அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1976ல், 9ம் வகுப்பு படித்­துக் கொண்­டி­ருந்­தேன்.

தலைமை ஆசி­ரி­ய­ராக சுப்­பி­ர­ம­ணி­யம் பணி­பு­ரிந்­தார். நன்­றாக பாடம் நடத்­து­வார். மாணவ, மாண­வி­ய­ரி­டம் அன்­பாக பழ­கு­வ­து­டன், கண்­டிப்­பா­க­வும் இருப்­பார்.

வகுப்­பில் முதல், மூன்று இடங்­களை பிடிப்­ப­வ­ரை­யும், கடைசி இடத்­துக்கு பின் தங்­கு­ப­வ­ரை­யும் பட்­டி­ய­லிட்டு, 'முதல் மூவர்; முன்­னேற வேண்­டிய மூவர்' என்று, வகுப்­ப­றை­யில் ஒட்ட ஏற்­பாடு செய்­வார்.

அதைப் பார்க்­கும் எங்­க­ளுக்கு, 'முன்­னேற வேண்­டிய மூவர்' பட்­டி­ய­லில் இடம் பிடித்து விடக்­கூ­டாது என்ற எண்­ணம் மேலி­டும். கவ­ன­மாக படித்து, 10ம் வகுப்­பில், 'முதல் மூவர்' பட்­டி­ய­லில் இடம் பிடித்­தேன்.

படிப்பை முடித்து சத்­து­ணவு அமைப்­பா­ளர் பணி­யில் சேர்ந்­தேன். ஒரே பள்­ளி­யில், 35 ஆண்­டு­கள் பணி­பு­ரிந்து, நற்­பெ­ய­ரு­டன் ஓய்வு பெற்­றேன்.

இப்­போது, 62 வய­தா­கி­றது; அந்த தலைமை ஆசி­ரி­ய­ரின் மேன்­மை­யான செயல், மன­தில் தங்­கி­யுள்­ளது.

–- ப.சகுந்­தலா, திருப்­பூர்.