நட்பை பேணிய சொற்கள்!

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2020

கோவை மாவட்­டம், பொள்­ளாச்சி, முனி­சி­பல் ஆண்­கள் உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1950ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசி­ரி­ய­ராக சீதா­ரா­மன் இருந்­தார். படிப்­பில், முதல் மாண­வ­னாக வந்து கொண்­டி­ருந்­தேன்.

அந்த ஆண்டு புதி­தாக மாரி­யப்­பன், என் வகுப்­பில் சேர்ந்­தி­ருந்­தான். அரை­யாண்டு தேர்வு, கணக்­குப் பாடத்­தில் முத­லா­வ­தாக வந்­தான். மற்ற பாடங்­க­ளில் எனக்கு அடுத்த இடத்தை பிடித்­தி­ருந்­தான்.

விடைத்­தாள் வழங்­கிய அன்று மாலை, பள்ளி விட்­ட­தும் என்­ன­ரு­கில் வந்­த­வன், 'முழு ஆண்­டுத் தேர்­வில், நீ முதல் மாண­வ­னாக வரும்­வ­கை­யில் சில கேள்­வி­க­ளுக்கு விடை எழு­தா­மல் விடு­கி­றேன்; என் மீது கோபித்து பேசா­மல் இருந்­தி­டாதே...' என்று, நா தழு­த­ழுக்க கூறி­னான்.

அவன் பேச்­சில் நெகிழ்ந்து, 'இரண்டு பேரும் முத­லி­டத்­தில் வர முயற்­சித்து படிப்­போம். உன் மீது எந்த கோப­மும் இல்லை...' என, கூறி­னேன். பள்ளி இறுதி தேர்­வில், போட்டி போட்டு படித்து, முதல் மாண­வர்­க­ளாக வந்­தோம். நட்பை சிறப்­பாக பேணி­னோம்.

இப்­போது, 80 வய­தா­கி­றது; என் பேரன், பேத்­தி­க­ளி­டம், அந்த சம்­ப­வத்தை கூறி, நன்­றாக படிப்­ப­தன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி வரு­கி­றேன்.

- தேவ­பி­ர­சாத், சென்னை.