கழுதையான குதிரை!

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2020

குட்­டிப்­பா­ளை­யம் கிரா­மத்­தில், கழு­தை­களை வளர்த்து வந்­தார், ஒரு சல­வைத் தொழி­லாளி. அவை, விசு­வா­ச­மாக, பொதி சுமந்து வாழ்ந்து வந்­தன. முன்­னேற வேண்­டும் என்ற லட்­சி­யம் இன்றி, கிடைத்­ததை உண்டு வாழ்ந்­தன.

காட்­டுப்­ப­கு­தி­யில் வழி தவ­றிய குதி­ரைக்­குட்டி ஒன்று, அந்த கிரா­மத்­துக்கு வந்­தது. சல­வைத்­தொ­ழி­லாளி வீட்­ட­ருகே, ஒரு கணம் நின்று உற்­றுப்­பார்த்­தது.

உருவ அமைப்­பில் உத்­தே­ச­மாக ஒரே மாதிரி இருந்த கழு­தை­க­ளு­டன் சேர்ந்து கொண்­டது. கூடு­த­லாக ஒன்று கிடைத்த மகிழ்ச்­சி­யில் அதை­யும் பரா­ம­ரி­ரத்­தார் தொழி­லாளி. குதி­ரைக்­குட்டி பொதி­க­ளைச் சுமக்க ஆரம்­பித்­தது. தன் பலத்­தை­யும், ஆற்­ற­லை­யும் மறந்­தது.

அன்று ஆற்­றங்­க­ரை­யில், துணி மூட்­டையை இறக்­கிய பின், ஓய்­வெ­டுத்­துக் கொண்­டி­ருந்த கழு­தை­கள், அவ்­வ­ழியே ஓடிய குதிரை ஒன்­றைக் கண்­டன. அதன் அழ­கும், கம்­பீ­ர­மும் கவர்ந்­த­தால் வியந்து, 'அதைப் போல­தான் இருக்­கி­றோம்; நம்­மால் துள்­ளிக்­கு­தித்து ஓட முடி­ய­வில்­லையே...' என, புலம்­பின.

அங்­கி­ருந்த குதி­ரைக் குட்­டி­யும், 'ஆமாம்... ஆமாம்... மிக மிக ஆழ­காக இருக்­கி­றதே, இது என்ன வகை விலங்கு; புயல்­போல் அல்­லவா பாய்ந்து ஓடு­கி­றது...' என, வியந்து கேட்­டது.

கூட்­டத்­தில் மூத்த கழுதை, 'அந்த விலங்­கிற்கு, குதிரை என்று பெயர்; அதி­வே­க­மாக பாய்ந்து ஓடும்; படை­யில் பீடு­நடை போட்டு, எதி­ரி­களை வீழ்த்­தும். அத­னு­டன் போட்டி போடவே முடி­யாது...' என்­றது.

'ஓ அப்­ப­டியா...' என்ற குதி­ரைக்­குட்டி, தான் யாரென்று அறி­யா­ம­லேயே, இயந்­திர கதி­யில், பொதி­யைச் சுமந்து கொண்­டி­ருந்­தது.

செல்­லங்­களே... இயந்­தி­ரம் போல் செயல்­ப­டா­தீர்­கள். கற்­ப­னை­யு­டன் வலம் வாருங்­கள். உங்­கள் திறனை அறிந்து செயல்­க­ளில் ஈடு­ப­டுங்­கள். உல­கில் உயர்ந்த பத­வி­க­ளில் அம­ரும் வாய்ப்பு தேடி வரும்.

பூபதி பெரி­ய­சாமி