தன்வினை!

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2020

கண்­ண­னும், பாலு­வும் ஒரே வகுப்­பில் படித்­த­னர். வச­தி­யான குடும்­பத்­தில் பிறந்­த­வன் கண்­ணன். படிப்­பிலோ, விளை­யாட்­டிலோ அக்­கறை காட்ட மாட்­டான்; பணத்தை வைத்து எதை­யும் சாதிக்­க­லாம் என்ற மன­நிலை உள்­ள­வன்.

பாலுவோ, ஏழைத் தொழி­லா­ளி­யின் மகன்; பெற்­றோர் படும் கஷ்­டங்­களை உணர்ந்­த­வன். நன்கு படித்து, நல்ல பணி­யில்

அமர்ந்து, வய­தான காலத்­தில் பெற்­றோரை பாது­காக்க வேண்­டும் என்ற சிந்­தனை உள்­ள­வன். படிப்பு, விளை­யாட்டு என, பல­க­லை­க­ளி­லும் முதல் மாண­வ­னாக விளங்­கி­னான்.

இதைக்­கண்டு, கடும் வெறுப்பை உமிழ்ந்­தான் கண்­ணன். பாலு­வின் ஏழ்­மையை சுட்­டிக்­காட்­டி­ய­து­டன், மட்­டம் தட்டி பேசி மகிழ்ச்சி அடைந்­தான். அதை எல்­லாம் பொருட்­டாக எடுக்­கா­மல் சகித்­துக் கொண்­டான் பாலு.

பள்­ளி­யில், விளை­யாட்டு விழா­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது; கண்­ண­னுக்கு அதில் ஆர்­வம் இல்லை என்­றா­லும், சூழ்ச்­சி­யால் பாலுவை தோற்­க­டிக்க, ஓட்ட பந்­த­யத்­தில் சேர்ந்­தான். அதில், ஆறு பேர் இடம் பெற்­றி­ருந்­த­னர்.

போட்­டி­யின் முதல் நாள், ஓடு பாதையை அடை­யா­ளப் படுத்­தும் வித­மாக, சுண்­ணாம்பு பொடி­யால் கோடு­கள் போட்டு, தயார் படுத்­தி­னர்; உரிய வரிசை எண்­க­ளை­யும் எழு­தி­னர். பாலு­வின் ஓடு­தள எண் ஐந்து; கண்­ண­னுக்கு ஆறு.

அன்று பள்ளி முடிந்து, அனை­வ­ரும் சென்­று­விட்­ட­னர். யாரும் பார்க்­காத வேளை­யில் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு சென்­றான் கண்­ணன். ஓடு­தள பாதையை கவ­னித்­தான். பாலு ஓட வேண்­டிய பாதை­யில், சில இடங்­க­ளில் குழி பறித்து, முட்­களை புதைத்­தான். அதன் மீது மண்ணை துாவி, அடை­யா­ளம் தெரி­யா­த­படி செய்­தான்.

'எப்­ப­டி­யும், பாலு­வின் காலில் முள்­குத்தி காயம் ஏற்­ப­டுத்­தும். அந்த வலி­யால் ஓட முடி­யா­மல் போட்­டி­யில் தோற்­பது உறுதி' என, எண்ணி வீட்­டிற்­குச் சென்­றான் கண்­ணன்.

மறு­நாள் -

விளை­யாட்டு போட்­டி­கள் துவங்­கின. மிக­வும் உற்­சா­க­மாக காணப்­பட்­டான் கண்­ணன். பந்­த­யத்­தில் கலந்து கொள்­ள­வி­ருந்த, ஆறு பேரில் ஒரு­வன், உடல் நல­மின்­மை­யால் பங்­கேற்க வர­வில்லை. எனவே, 'ஐந்து ஓடு­த­ளங்­களை மட்­டும் தயார் செய்­தால் போதும்...' என, கூறி­னார் ஆசி­ரி­யர்.

அதன்­படி, பாலு நான்­கா­வது தளத்­தி­லும், கண்­ணன், ஐந்­தா­வது தளத்­தி­லும் ஓட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது. இந்த திடீர் மாற்­றத்­தால், என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் திகைத்­தான் கண்­ணன்.

'பாலுவை தோற்­க­டிக்க செய்த சூழ்ச்­சி­யில், தானே மாட்­டிக் கொள்­வோம்' என்று, அவன் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை. முட்­க­ளைப் புதைத்த இடங்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முயன்­றான். பதட்­டத்­தால் எது­வும் சரி­யாக புலப்­ப­ட­வில்லை. செய்­வ­த­றி­யாது திணறி நின்­றான்.

பந்­த­யம் ஆரம்­ப­மா­னது; வேறு வழி­யின்றி ஓடி­னான் கண்­ணன். ஓடு தளத்­தில் முள் புதைந்­தி­ருந்த பகு­தி­யில் காலை ஊன்­றி­ய­வு­டன், 'ஐயோ அம்மா...' என்று கத்­தி­ய­ப­டியே விழுந்­தான். பாதத்­தில் முள் குத்­தி­ய­தால், ரத்­தம் வழிந்­தது; முட்­டி­யில் அடிப்­பட்டு எலும்பு முறிவு ஏற்­பட்­டது.

உடனே, மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

அங்கு, உள்­ளங்­கா­லில் தைத்­தி­ருந்த முள்ளை அகற்­றி­ய­து­டன், பெரிய கட்­டும் போட்­ட­னர்; வலி­யால் துடித்து அல­றி­னான் கண்­ணன்.

போட்­டி­யில், முத­லா­வ­தாக வந்து பரிசு பெற்ற பாலு, அன்று மாலை மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றான். கண்­ணனை சந்­தித்து ஆறு­தல் கூறி­னான்.

'நல்ல குணம் படைத்த பாலு­வுக்கு, பெரிய தீங்கு செய்ய இருந்­தோம்' என்று புலம்பி வருந்­தி­னான் கண்­ணன். தான் செய்த கேடு, தனக்கே வந்­ததை எண்ணி அழு­தான். தவறை உணர்ந்து மனம் திருந்­தி­னான்.

தளிர்­களே... திற­மையை வளர்த்து முன்­னேற முயற்சி செய்ய வேண்­டும். பிறர் திறமை மீது பொறா­மைப்­பட்­டால், தீய எண்­ணம் தான் மன­தில் குடி­யே­றும்.

வி. கற்­ப­க­வல்லி