ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 8–1–2020

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2020

எதிர்பாராத சம்பவம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

இளை­ய­ரா­ஜாவை, தனது 3 படங்­க­ளுக்கு இசை­ய­மைக்க ஏவி.எம். அதி­பர் மெய்­யப்ப செட்­டி­யார் ஒப்­பந்­தம் செய்­தார். ‘அன்­னக்­கிளி’ படத்­திற்­குப் பிறகு தனது இசை­யில் வெளி­வந்த சில படங்­கள், எதிர்­பார்த்த வெற்­றி­யைப் பெற­வில்லை என்­றா­லும் இசை­ய­மைப்­புப் பணி­யில் தீவி­ர­மா­கவே இருந்­தார் இளை­ய­ராஜா.

இந்த நேரத்­தில் அவர் கொஞ்­ச­மும் எதிர்­பார்த்­தி­ராத சம்­ப­வம் நடந்­தது. அது ஏவி.எம். பட அதி­பர் மெய்­யப்ப செட்­டி­யா­ரி­ட­மி­ருந்து வந்த அழைப்பு. அது பற்றி இளை­ய­ராஜா கூறு­கி­றார்:–

‘‘இசை­ய­மைத்த பாடல்­கள் பேசப்­பட்­டா­லும், அந்­தப் படங்­கள் வெற்­றி­க­ர­மாக ஓடி­னால்­தானே படைப்­பா­ளிக்­கான திருப்தி கிடைக்­கும்? ‘அன்­னக்­கி­ளி’க்கு அடுத்து பெரிய வெற்­றியை எதிர்­பார்த்த நேரத்­தில்­தான் ஏவி.மெய்­யப்ப செட்­டி­யா­ரி­ட­மி­ருந்து எனக்கு அழைப்பு வந்­தது. ஏவி.எம். ஸ்டூடி­யோ­வில் அவரை சந்­திக்­கப் போனேன்.என்­னைப் பார்த்­த­தும் ‘‘நீங்­கள்­தான் இளை­ய­ரா­ஜாவா?” என்று கேட்­ட­வர், நேர­டி­யாக விஷ­யத்­துக்கு வந்­தார். ‘‘நீங்­கள் ஏவி.எம். சம்­பந்­தப்­ப­டும் மூன்று படங்­க­ளுக்கு இசை­ய­மைக்க வேண்­டும்” என்­றார். ஏவி.எம். அவர்­களே கேட்­கி­றார். என்ன சொல்­வது என்று யோச­னை­யில் இருந்­த­போது, அவரே ‘‘என்ன சம்­ப­ளம் வாங்­கு­கி­றீர்­கள்?” என்று கேட்­டார்.

இதற்­கும் என் பதில் வரு­வ­தற்­குள் அவரே தொடர்ந்­தார். ‘‘நாங்­கள் எடுக்­கும் முதல் படத்­துக்கு இவ்­வ­ளவு தரு­கி­றோம்” என்று ஒரு தொகை­யைச் சொன்­னார். இரண்­டா­வது படத்­துக்கு அதை­விட ஐயா­யி­ர­மும், மூன்­றா­வது படத்­துக்கு இன்­னும் ஐயா­யி­ர­மும் சேர்த்­துத் தரு­கி­றோம்” என்­றார். இப்­படி சொன்­ன­தோடு, ‘‘மூன்று படத்­துக்­கு­மாக இதை அட்­வான்­சாக வைத்­துக் கொள்­ளுங்­கள்” என்று ஒரு தொகையை என் கையில் வைத்­தார். ஐயா­யி­ரம் ரூபாய் இருந்­தது. சந்­தோ­ஷ­மாக விடை­பெற்று வந்­தேன்.

இதற்­கி­டையே பார­தி­ராஜா, கிருஷ்­ணன் நாயர், சங்­க­ரய்­யர், அவி­னாசி மணி போன்ற பல டைரக்­டர்­க­ளி­டம் உத­வி­யா­ள­ராக இருந்து, அந்த அனு­ப­வத்­தில் சொந்த ஊரான பொள்­ளாச்­சி­யில் இருந்து படம் தயா­ரிக்­கும் ஆர்­வத்­து­டன் வந்­தி­ருக்­கி­றார் ராஜ்­கண்ணு. வந்த வேகத்­தில் பார­தி­ரா­ஜாவை சந்­தித்து தன் விருப்­பத்தை சொன்­னார்.

பார­தி­ராஜா ஏற்­க­னவே என்.எப்.டி.சி. நிதி உத­வி­யு­டன் தயா­ரிக்க தயார் நிலை­யில் வைத்­தி­ருந்த ‘மயில்’ படத்­தின் கதையை சொல்ல, ராஜ்­கண்­ணு­வுக்கு பிடித்­து­விட்­டது. ‘மயில்’ கதையை பட­மாக்­கும் முடி­வுக்கு வந்­தார். இந்த படம் மூல­மாக டைரக்­ட­ரா­கி­விட்ட பார­தி­ரா­ஜா­வு­டன், நான் இசை­ய­மைப்­பா­ள­ராக கைகோர்ப்­பேன் என்­பது நானே எதிர்­பார்த்­தி­ராத விஷ­யம்.

அப்­போது நடி­கர் தில­கம் சிவா­ஜியை வைத்து, நடி­கர் பாலாஜி தொடர்ச்­சி­யாக படங்­கள் எடுத்து வந்­தார். பாலாஜி ஒரு மலை­யா­ளப்­ப­டத்தை தமி­ழில் எடுக்­கப்­போ­வ­தா­க­வும், நான் இசை­ய­மைக்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார். மலை­யா­ளப்­ப­டத்தை எனக்கு திரை­யிட்­டுக் காட்­டி­னார்.

தமி­ழில் அதற்கு ‘தீபம்’ என்று பெயர் சூட்­டி­னார்­கள். ஏ.எல். நாரா­ய­ணன் வச­னம் எழு­தி­னார். இவரை பார்ப்­ப­தற்கு என் அண்­ணன் பாவ­லர் போலவே இருப்­பார். சிரிப்­பது, பேசு­வது எல்­லாமே எனக்கு அண்­ணனை ஞாப­கப்­ப­டுத்­தும். என்­ன­வொரு வித்­தி­யா­சம் என்­றால் அண்­ணன் கறுப்பு.இந்த ‘தீபம்’ படம்­தான் என் இசை வாழ்­வில் எனக்கு இரண்­டா­வது வெற்­றிப்­ப­ட­மாக அமைந்­தது.

அது­வரை அண்­ணன் சிவா­ஜியை பார்த்­த­தில்லை. வாகிணி ஸ்டூடி­யோ­வில் ‘தீபம்’ பட பூஜை நடந்­த­போது, சிவாஜி வந்­தி­ருந்­தார். பாலா­ஜி­யும், ஏ.எல். நாரா­ய­ண­னும் என்னை சிவா­ஜி­யி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்­கள். அப்­போது எனக்கு டைரக்­டர் மகேந்­தி­ரன் (அப்­போது அவர் டைரக்­டர் ஆகி­யி­ருக்­க­வில்லை) சொன்ன ஒரு சம்­ப­வம் நினை­வுக்கு வந்­தது.

அப்­போது, சிவாஜி நடித்து வெற்­றி­க­ர­மாக ஓடிய ‘தங்­கப்­ப­தக்­கம்’ படத்­தின் வச­ன­கர்த்தா, மகேந்­தி­ரன். அவ­ரும் கதா­சி­ரி­யர்- டைரக்­டர் வி.சி. குக­நா­த­னும் சிவா­ஜியை பார்த்து வர அவ­ரது வீட்­டுக்­குப் போயி­ருக்­கி­றார்­கள். அவர் அவர்­க­ளி­டம் பேசி­னாரே தவிர, உட்­கார சொல்­ல­வில்லை.

அதே நேரத்­தில் வச­ன­கர்த்தா பால­மு­ரு­கன் வந்­தி­ருக்­கி­றார். அவரை பார்த்­த­தும் ‘‘வாடா பால­மு­ருகா! உட்­கார்!” என்று உட்­கா­ரச் சொல்­லி­யி­ருக்­கி­றார். பால­மு­ரு­கனோ மகேந்­தி­ரன் நிற்­ப­தைப் பார்த்து ‘‘உட்­கா­ருங்­கள்” என்று சொல்­லிய பிறகே சிவாஜி ‘‘உட்­கார், மகேந்­திரா!” என்று சொன்­னார். பால­மு­ரு­கன் வச­னம் எழுதி சிவாஜி நடித்த ‘‘ராஜ­பார்ட் ரங்­க­துரை” தோல்வி அடைந்­தி­ருந்த நேரம் அது. சிவா­ஜி­யின் எண்ண ஓட்­டத்­தைப் புரிந்து கொண்ட மகேந்­தி­ரன், ‘‘இல்­லண்ணே! நான் இப்­ப­டியே நிற்­கி­றேன்” என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.

சிவா­ஜியை ‘தீபம்’ பட செட்­டில் பார்க்­கப் போகிற நேரத்­தில் மகேந்­தி­ரன் சொன்ன சம்­ப­வம் நினை­வுக்கு வர, இதோ மேக்­கப் ரூமில் இருந்த சிவா­ஜியை நெருங்கி விட்­டேன். பாலாஜி என்னை சிவா­ஜி­யி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.  உடனே அவர், பாலா­ஜி­யை­யும், ஏ.எல். நாரா­ய­ண­னை­யும் உட்­கா­ரச் சொன்­னார். அவர்­கள் உட்­கார்ந்­தார்­கள். அவர்­க­ளு­டன் நானும் படக்­கென உட்­கார்ந்து விட்­டேன். அதி­லி­ருந்து என்னை எங்கே கண்­டா­லும் உடனே உட்­கா­ரச் சொல்­லி­வி­டு­வார்.