ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் கலசம் திருட்டு

பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2020 16:18

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அருகில் உள்ள கோதண்டராமர் கோவில் கோபுர கலசம் திருடு போய்விட்டது என்று வெள்ளியன்று ராமேஸ்வரம் போலீசார் தெரிவித்தனர்.

கோதண்டராமர் கோவில் கலசம் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக திருடப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை,  ஆசிய நாடுகளுக்கு தமிழகத்திலுள்ள கோயில்களின் கோபுர கலசங்கள் பெருமளவு கடத்திச் செல்லப்படுகின்றன.

கோவில் கோபுர கலசங்களில் அழகுக்காகவும் புராதன தன்மைக்கும் அவை கடத்தப்படுகின்றன.

எந்த கோயிலில் இருந்து அவை திருடப்படுகின்றன என்பதை பொறுத்து அவற்றுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கோபுரக் கலசத்துக்கு 10 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரை கடத்துவோருக்கு கிடைக்கிறது என கூறப்படுகிறது.

கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் தான் அந்த கோயில் பகுதியின் வளத்துக்கும் செல்வத்துக்கும் காரணம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

ஒரு கோயில் கோபுரகலசத்தைக் கடத்தி வந்தால் அந்த கலசத்தோடு செல்வ வளமும் சேர்ந்து வந்துவிடுகிறது என்று மக்கள் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் உள்ள புராதன கோவில்களின் கோபுர கலசங்கள் கடத்தப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.