30 வயதை கடந்த மகளிருக்கு..! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 02 ஜனவரி 2020

முப்­பது வய­தைக் கடந்த பெண் வேலைக்கு சென்­றா­லும் சரி, இல்லை வீட்டு நிர்­வாக்­கத்தை மேற்­கொள்­ப­வ­ராக இருந்­தா­லும் சரி. இவர்­கள் தங்­கள் குடும்ப நலத்­திற்­காக இது வரை எந்த முன் நட­வ­டிக்கை எடுக்­கா­மல் காலம் கடத்­தி­ருந்­தால் அதை எல்­லாம் தூக்கி ஏறிந்­து­விட்டு, இந்த புத்­தாண்­டி­லா­வது கண­வ­ரோடு இணைந்து எதிர்­கால வாழக்­கைக்கு தேவை­யான திட்­டங்­களை தீட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை இப்­போ­தா­வது எடுக்க முற்­ப­ட­வேண்­டும். அது எவ்­வாறு என்­பதை முழு­மை­யாக விவ­ரிக்­கி­றார் பொரு­ளா­தார

நிபு­ணர் சொக்­க­லிங்­கம் பழ­னி­யப்­பன். “நீங்­கள் 30 வயதை கடந்­த­வரா, அப்­படி என்­றால் பல வழி­களில் உங்­கள் பணத்தை இப்­போதே சேமிக்க ஆரம்­பி­யுங்­கள். என்­னென்ன வழி­க­ளில் சேமிக்­க­லாம் என்­பது பற்றி இப்­போது பார்ப்­போம்.

நீங்­கள் 30 வயதை கடந்­த­வர் என்­றால், உங்­க­ளில் பல­ருக்கு திரு­ம­ணம் ஆகி குழந்தை இருக்­கும். நீங்­களோ உங்­கள் கண­வரோ இப்­போது ஓர­ளவு நல்ல ஊதி­யத்­தில் வேலை­யில் இருப்­பீர்­கள் ஆனால் உங்­களை சுற்றி கடன்­க­ளும் இருக்­கும். வரு­மா­னம் எவ்­வ­ளவு வந்­தா­லும் செல­வு­கள் குறை­யா­மல் இருக்­கும்.

ஆகவே, இருக்­கும் கடன் மற்­றும் இஎம்ஐ பிரச்­னை­யில் எப்­படி சேமிக்க முடி­யும் என்று பல­ரும் புலம்­பு­வார்­கள். ஆனால் உண்­மை­யில் அவர்­கள் அனை­வ­ரா­லும் சேமிக்க முடி­யும் என்­பது உண்மை. அவர்­கள் கொஞ்­சம் கடன் குறித்த விழிப்­பு­ணர்­வு­டன் இருந்­தால் நிச்­ச­யம் நிறை­யவே சேமிக்க முடி­யும்..

கடன் மோச­மா­னது

மாத சம்­ப­ளம் வாங்­கு­ப­வர்­களை குறி­வைத்து வீசப்­ப­டும் மிகப்­பெ­ரிய வலை என்­றால் அது கிரி­டிட் கார்டு தான். மாதம் முழு­வ­தும் செல­வ­ழி­யுங்­கள், அதன்­பி­றகு அடுத்த மாதத்­தின் 20ம் தேதிக்­குள் வட்டி இல்­லா­மல் பணத்தை கட்­டுங்­கள் என்று கைமாத்து கொடுப்­பது போல் கடன் கொடுக்க பல வங்­கி­கள் காத்­துக்­கி­டக்­கின்­றன. ஆனால், இதில் மூழ்­கி­வி­டா­மல் இருந்­தாலே நிறைய சேமிக்­க­லாம். ஒரு வேளை கிரி­டிட் கார்டு கட­னில் இருந்­தால் மற்ற எந்த கடமை இருந்­தா­லும் ஓர­மாக வைத்­து­விட்டு அதை முடிக்க வேண்­டும். கடி­ன­மாக இருந்­தா­லும் முடித்­து­விட்­டால் நிறைய பணம் உங்­க­ளுக்கு மிச்­சம் ஆகும்.

வீட்­டுக்­க­டன்

சிலர் வீடு ஒத்தி வாங்­கு­வ­தற்­காக பர்­ச­னல் லோன் எடுத்­தி­ருப்­பார்­கள், சிலர் வீடு வாங்க கடன் எடுத்­தி­ருப்­பார்­கள், சிலர் வாகன கடன் எடுத்­தி­ருப்­பார்­கள். இதை எல்­லாம் நிச்­ச­யம் நல்ல கடன் தான். இவற்­றால் உங்­க­ளுக்கு பொருள்­கள் அல்­லது வீடு நிச்­ச­யம் கிடைக்­கும். அதே­நே­ரம் வீட்­டில் ஆடம்­பர பொருட்­களை வாங்கி குவித்து கட­னுக்கு மாத தவணை போட்­டி­ருந்­தால் நிச்­ச­யம் தவறு தான். இந்த கடன்­களை வாங்­கா­மல் இருந்­தாலே நிச்­ச­யம் சேமிக்­க­லாம்.

சைக்­கிள் பய­ணம்

நீங்­களோ இல்லை உங்­கள் கண­வரோ அரு­கில் உள்ள இடங்­க­ளுக்கு கூட பைக்­கில் செல்­வ­தையோ, காரில் செல்­வ­தையோ தவிர்த்து பணத்தை சேமிக்­க­லாம். சைக்­கி­ளில் சென்­றால் ஆரோக்­கி­யம் மேம்­ப­டு­வ­து­டன், பண­மும் நிறைய மிச்­ச­மா­கும்.

இன்­சூ­ரன்ஸ்

உங்­க­ளுக்­கும், உங்­கள் குடும்­பத்­திற்­கும் உங்­க­ளால் கண­வ­ராலோ சொத்து சேர்க்க முடி­யா­மல் இருந்­தால் கூட கவ­லைப்­பட வேண்­டாம். கட்­டா­யம் காப்­பீடு செய்­து­வி­டுங்­கள். இது உங்­க­ளை­யும் உங்­கள் குடும்­பத்­தை­யும் காக்­கும். இதற்­காக பல காப்­பீ­டு­கள் இப்­போது உள்­ளன.

அதிக வட்டி

மாத சம்­ப­ள­தா­ரர்­க­ளுக்கு முக்­கி­ய­மா­னது பிஎப். இதில் இப்­போது புதி­தாக தானாக முன்­வந்து பணம் சேமிக்­கும் வசதி உள்­ளது. எனவே உங்­க­ளால் முடிந்த அளவு மாதம் மாதம் கூடு­தல் தொகை அதில் போட்டு வந்­தால் மிகப்­பெ­ரிய நன்மை கிடைக்­கும். ஏனெ­னில் வங்­கி­களை விட மிக அதிக வட்­டியை 8 சத­வீ­தற்க மேல் பிஎப் வழங்­கு­கி­றது. வரு­மான வரிச்­ச­லு­கை­யும் உண்டு.

வீண் செலவு ஏற்­ப­டாது

எப்­போது உங்­களை பிரி­யாக வைத்­துக்­கொள்­ளா­தீர்­கள். ஏதே­னும் ஒரு கட­மைக்கு பணத்தை செலுத்­தும் வகை­யில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். உதா­ர­ணத்­திற்கு உங்­க­ளி­டம் இருக்­கும் பணத்தை வங்­கி­யில் டெபா­சிட் செய்­வது , நிலம் வாங்­கு­வது, நகை­கள் வாங்­கு­வது, போன்­ற­வற்­றுக்­காக மாதம் மாதம் முத­லீடு செய்­யுங்­கள். இப்­படி செய்­தால் வீண் செலவு என்ற கூண்­டுக்­குள் பெரும்­பா­லும் சிக்க மாட்­டீர்­கள்.

செல்­வ­ம­கள் திட்­டம்

இதே­போல் உங்­க­ளுக்கு குழந்­தை­கள் இருந்­தால் செல்வ மகள் சேமிப்பு திட்­டம் அல்­லது செல்ல மகன் சேமிப்பு திட்­டத்­தில் மாதம் மாதம் ஒரு குறிப்­பிட்ட தொகையை சேமிக்­க­லாம். இதன் மூலம் உங்­க­ளுக்கு ஆண்­டுக்கு ஒன்­றரை லட்­சம் வரை அரசு வரிச்­ச­லுகை அளிக்­கி­றது. இந்த திட்­டம் உங்­கள் குழந்­தை­க­ளின் எதிர்­கா­லத்­திற்கு உத­வும்.

பென்­சன் திட்­டங்­கள்

எல்­லோ­ருக்­கும் சேமிக்­கும் நீங்­கள் உங்­களை பற்­றி­யும் அக்­கறை பட வேண்­டும். ஒரு குறிப்­பிட்ட வயது கடந்­து­விட்­டால் இன்­றைக்கு தனி­யார் நிறு­வ­னங்­க­ளில் வேலை­யில் நீடிப்­பது பெரிய விஷ­ய­மாக உள்­ளது. எனவே இப்­போதே ஒய்­வுக்­கான முத­லீட்­டுக்கு திட்­ட­மி­டுங்­கள். ஏரா­ள­மான பென்­சன் திட்­டங்­கள் இப்­போது உள்­ளன. வாலன்­டரி பிரா­வி­டன்ட் பண்ட், பப்­ளிக் பிரா­வி­டென்ட் பண்ட் என அரசு உள்­பட பல நிறு­வ­னங்­கள் வைத்­தி­ருக்­கின்­றன. உங்­க­ளுக்கு விருப்­பம் உள்­ளதை தேர்வு செய்து உங்­களை பாது­காத்­துக்­கொள்­ளுங்­கள்.

அவஸ்தை படு­வீர்­கள்

வாழ்க்கை என்­பது அனு­ப­விப்­ப­தற்கு தான். ஆனால் இள­மை­யில் எல்லா பணத்­தை­யும் செலவு செய்­து­விட்டு பின்­னர் வய­தான காலத்­திலோ அல்­லது வேலை இல்­லாத காலத்­திலோ பணம் இல்­லா­மல் அவஸ்தை பட வேண்­டாம். பிஎப் பணத்தை எந்த சூழ்­நி­லை­யி­லும் எடுக்­கா­தீர்­கள். உங்­க­ளுக்கு வேலை இல்­லாத சூழல் வந்­தாலோ அல்­லது ஓய்வு பெறும் காலத்­திலோ அது தான் உங்­கள் உயிர் நாடி­யாக இருக்­கும்