குடும்பமே சேர்ந் கலக்கிறது பிசினஸ்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 02 ஜனவரி 2020

மாலதி ஷர்மா, அவ­ரின் சகோ­த­ரர் ரவீந்­திரா, அவ­ரின் மனைவி நாக­ரத்னா, இணைந்து தொடங்­கிய பிராண்ட் பாரம்­ப­ரிய சங்­கேதி மசா­லாக்­கள், சாம்­பார் என்­பது ஒரு முக்­கிய உணவு வகை மட்­டு­மல்ல, அது தென்­னிந்­தி­யா­வின் வாழ்க்­கை­மு­றை­யில் தவிர்க்­க­மு­டி­யாத ஒரு அங்­கம். இந்த பகு­தி­யின் உணவு வகைக்கு பரிச்­சி­ய­மான அனை­வ­ருமே இதை நன்­க­றி­வார்­கள். அதே­ச­ம­யம் இதில் பல வேறு­பா­டு­கள் உள்­ளன.

தமிழ்­நாட்­டில் தயா­ரிக்­கப்­ப­டும் சாம்­பா­ரில் பிரெஷ்­ஷாக அரைக்­கப்­பட்ட மசா­லாக்­க­ளு­டன்­கூ­டிய சாம்­பார் பொடி சேர்க்­கப்­ப­டும். கேரள சாம்­பா­ரில் தேங்­காய் இடம்­பெற்­றி­ருக்­கும். கர்­நா­டக சாம்­பா­ரில் சிறி­த­ளவு வெல்­லம் சேர்க்­கப்­ப­டும். இவ்­வாறு ஒவ்­வொரு பகு­தி­யி­லும் அவர்­க­ளுக்கே உரிய சிறப்பு மூலப்­பொ­ருட்­கள் சேர்க்­கப்­ப­டும். சங்­கேதி சமூ­கத்­தி­னர் வித்­தி­யா­ச­மான முறை­யில் சாம்­பார் தயா­ரிப்­பார்­கள். இவர்­க­ளது மசாலா தயா­ரிப்­பில் லவங்­கப்­பட்டை சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும். இந்த சமூ­கத்­தின் பின்­ன­ணி­யைப் போன்றே இவர்­க­ளது உண­வு­வ­கை­க­ளும் கர்­நா­டகா, கேரளா மற்­றும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­தா­கும். எனவே இது தனித்­து­வ­மா­னது.

இவர்­கள் சங்­கேதி சமூ­க­மாக உரு­வாகி நாச்­சா­ரம்மா என்­கிற பெண்­ணைத் தொடர்ந்து கேரளா மற்­றும் தமி­ழக எல்­லை­யான செங்­கோட்­டை­யி­லி­ருந்து மாற்­ற­லாகி ஹசன் அருகே உள்ள கவு­சிகா, கர்­நா­டகா, மைசூரு மாவட்­டத்­தில் உள்ள பெட்­ட­ட­புரு ஆகிய பகு­தி­க­ளில் குடி­யே­றி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. சங்­கேதி உண­வு­வ­கை­கள் பிர­பல பிராண்­டான ‘அடுக்­களே’(- சங்­கே­தி­யில் சமை­ய­லறை என்று பொருள்) தனித்­து­வ­மான உண­வு­வ­கையை வழங்­கு­கி­றது. தயார் நிலை உண­வு­கள், கலந்த மசா­லாக்­கள், நம்­கீன் என அடுக்­க­ளே­வின் பல்­வேறு தயா­ரிப்­பு­கள் பதப்­ப­டுத்­தப்­ப­டும் பொருட்­களோ செயற்கை நிறங்­களோ இன்றி தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது.

இவை பெங்­க­ளூ­ரு­வில் மட்­டும் நூற்­றுக்­கும் அதி­க­மான அவுட்­லெட்­க­ளில் கிடைக்­கி­றது. உப்­புமா, அவல் வகை­கள், கொடு­பலே, சாம்­பார் பொடி, ரசப்­பொடி, அனைத்து வகை­யான சட்னி பொடி­கள் போன்­றவை இவர்­க­ளது தயா­ரிப்­பு­க­ளில் அடங்­கும். ”எங்­க­ளது தயா­ரிப்­பு­கள் இத்­து­டன் முடிந்­து­வி­ட­வில்லை,” என்­கி­றார் அடுக்­களே இணை நிறு­வ­னர் மாலதி ஷர்மா.

”வெவ்­வேறு கலாச்­சா­ரங்­களை இணைத்து தயா­ரிப்­ப­தால் எங்­க­ளது உணவு தனித்­து­வ­மா­ன­தாக உள்­ளது. சாம்­பார் பொடி, ரசப்­பொ­டி­யைப் பொறுத்­த­வரை அதி­லுள்ள மசா­லாக்­கள் மட்­டு­மின்றி அவற்றை வறுக்­கும் வெப்­ப­நி­லை­யும் அரைக்­கப்­ப­டும் பத­மும் முக்­கி­யம்,” என்­றார். மால­தி­யின் சகோ­த­ரர் ரவீந்­தி­ரா­வும் அவ­ரது மனைவி நாக­ரத்­னா­வும் அடுக்­களே நிறு­வ­னத்­தின் மற்ற இணை நிறு­வ­னர்­கள் ஆவர்.

பெரி­ய­ள­வில் வளர்ச்சி அடுக்­களே நிறு­வ­னம் பாரம்­ப­ரிய சங்­கேதி ரெசி­பிக்­களை நவீன காலத்­திற்கு ஏற்ற வகை­யில் புதுப்­பித்து வழங்­கி­யது. தோசை மாவில் சிறிது பெருங்­கா­ய­மும் வெந்­தி­ய­மும் சேர்க்­கப்­பட்­டது. இவ்­வா­றான சிறு மாற்­றங்­க­ளும் சுவை­யைக் கூட்­டி­யது. பெங்­க­ளூ­ரு­வில் உள்ள மால­தி­யின் 10x10 அளவு கொண்ட சிறு அறை­யில் அடுக்­களே தொடங்­கப்­பட்­டது. ரவீந்­திரா அந்த சம­யத்­தில் ஜென­ரல் மில்ஸ் நிறு­வ­னத்­தில் தனது பணியை விட்டு விலகி முழு நேர­மாக விவ­சா­யத்­தில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

”நாங்­கள் மூவ­ரும் யதேச்­சை­யாக உரை­யா­டி­ய­போது அடுக்­களே உரு­வாக்­கும் எண்­ணம் தோன்­றி­யது. என் கண­வர் இந்­தியா முழு­வ­தும் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். ஆனால் அவர் சங்­கேதி உணவு வகை­க­ளையே அதி­கம் விரும்­பு­வார். இந்த எண்­ணத்தை செயல்­ப­டுத்­து­வ­தில் அவர் ஆர்­வம் காட்­டி­னார். நானும் மால­தி­யும் அப்­போது முழு­நே­ர­மாக பணி­பு­ரிந்து வந்­த­போ­தும் இதில் ஈடு­ப­டு­வ­தில் ஆர்­வ­மாக இருந்­தோம். ஒரு சிறு கடா­யை­யும் அடுப்­பை­யும் கொண்டு முத­லில் ரசப்­பொடி தயா­ரிக்­கத் துவங்­கி­னோம்,” என்று நாக­ரத்னா நினை­வு­கூர்ந்­தார்.

இது 2009-ம் ஆண்டு நடந்­தது. முத­லில் தயா­ரித்த ரசப்­பொடி பேக் செய்­யப்­பட்டு குடும்­பத்­தி­னர்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டது. விரை­வி­லேயே பரிந்­துரை வாயி­லாக பொடி பிர­ப­ல­மாகி ஸ்டோர்­க­ளில் இருந்து விசா­ர­ணை­கள் வரத் தொடங்­கி­யது. ”சமை­ய­லைப் பொறுத்­த­வரை என்­னு­டைய மாமி­யா­ரின் வழி­காட்­ட­லையே பின்­பற்­றி­னோம். மூலப்­பொ­ருட்­கள் எந்­த­வித பதப்­ப­டுத்­தும் பொருட்­க­ளும் கலக்­கப்­ப­டா­மல் பிரெஷ்­ஷாக அரைக்­கப்­பட்­டது. இத­னால் பாரம்­ப­ரிய சுவை­யைத் தக்­க­வைக்­க­மு­டிந்­தது. மக்­கள் எங்­கள் தயா­ரிப்­பு­களை ஏற்­றுக்­கொண்டு பாராட்­டத் தொடங்­கி­னார்­கள்,” என்­றார்.

ஒரு சிறிய அறை­யில் தொடங்­கப்­பட்ட அடுக்­களே 30 டன் திறன் கொண்ட 3,000 சதுர அடி தொழிற்­சா­லைக்கு மாற்­றப்­பட்­டது. கடந்த ஆண்டு பெங்­க­ளூ­ரு­வின் தெற்கு பகு­தி­யில் உள்ள மேலும் பெரிய வளா­கத்­திற்கு மாற்­றப்­பட்­டது. இது 100 டன் திறன் கொண்ட 7,000 சதுர அடி தொழிற்­சா­லை­யா­கும்.

 ”எங்­க­ளது உற்­பத்­தித் திறன் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ள­போ­தும் எங்­க­ளது செயல்­மு­றை­யில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை. எங்­க­ளது பார்ட்­னர்­க­ளில் ஒரு­வர் ஒவ்­வொரு நிலை­யை­யும் மேற்­பார்­வை­யிட்டு தயா­ரிப்பை சோதனை செய்­கி­றார். இத­னால் ஒவ்­வொரு நிலை­யி­லும் தொடர்ந்து தரத்தை சிறப்­பாக நிர்­வ­கிக்க முடி­கி­றது,” என்­றார் மாலதி.

சிறந்த பாரம்­ப­ரி­யம் மற்­றும் சுவை பெங்­க­ளூ­ரு­வில் உள்ள 100 அவுட்­லெட்­கள் தவிர இந்த பிராண்ட் மல்­லேஸ்­வ­ரம் நக­ரில் அனு­பவ மையம் ஒன்­றை­யும் திறந்­துள்­ளது. இங்கு வாடிக்­கை­யா­ளர்­கள் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு முன்பு அவற்றை சுவைத்­துப் பார்க்­க­லாம். வருங்­கா­லத்­தில் கூடு­தல் அனு­பவ மையங்­களை திறக்க இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது. குடும்­பத்­தி­னர் ஒன்­று­சேர்ந்து தொடங்­கிய ஒரு எளிய முயற்சி தற்­போது மிகப்­பெ­ரிய உணவு பிராண்­டாக உரு­வெ­டுத்து இந்­தி­யா­வி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் பிர­ப­ல­மா­கி­யுள்­ளது.

”நாங்­கள் இந்த முயற்­சியை சுய­நி­தி­யி­லேயே தொடங்­கி­னோம். வாடிக்­கை­யா­ளர்­கள் தயா­ரிப்­பு­களை சிறப்­பாக ஏற்­றுக்­கொள்­வதை உணர்ந்­த­போது எங்­க­ளது செயல்­பா­டு­களை விரி­வாக்­கம் செய்ய திட்­ட­மிட்­டோம். தேசிய வங்­கி­கள் மூலம் உதவி கிடைத்­தது. 2020 நிதி­யாண்­டின் இறு­தி­யில் 7-8 கோடி ரூபாய் வரு­வாய் ஈட்ட இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.