நீதிபதி ஆகிறார் கோர்ட் பியூன் மகள்! – சுமதி

பதிவு செய்த நாள் : 02 ஜனவரி 2020

எடுத்த சபதத்தை முடிப்பேன் தயங்காதே’ என்ற வரிகளுக்கு பொருத்தமானவர் மற்றும் கடின உழைப்பும், லட்சியத்தை விடாமல் துரத்தும் மனப்பாங்கும் இருந்தால் வெற்றி நம் வாசல் தேடி வரும். தனது தந்தை பியூனாக பணியாற்றிய அதே நீதித்துறையில் நீதிபதியாக அமரப் போகிறார் ஐந்து வயது குழந்தைக்கு தாயான அர்ச்சனா.

வாழ்க்­கை­யில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஓர் கனவு, லட்­சி­யம் இருக்­கும். ஆனால், அதை அடைய ஒரு­வர் எந்­த­ள­வுக்கு ஈடு­பாட்­டு­ட­னும், அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­ட­னும் பணி­யாற்­று­கி­றார்­களோ அந்­த­ள­வுக்கு வெற்றி எனும் கிரீ­டம் அவர்­க­ளின் சிரசை அலங்­க­ரிக்­கும் என்­ப­தற்கு மிகச் சிறந்த எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­கி­றார் பீகா­ரைச் சேர்ந்த ஐந்து வயது குழந்­தை­யின் தாயான அர்ச்­சனா.

கடின உழைப்­பும், லட்­சி­யத்தை விடா­மல் துரத்­தும் மனப்­பாங்­கும் இருந்­தால் வெற்றி நம் வாசல் தேடி வரும். எந்­த­வொரு சாத­னைக்­கும் வயது ஓர் தடை­யல்ல எனக் கூறும் அர்ச்­சனா, பீகா­ரில் விரை­வில் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்று நீதி­ப­ரி­பா­ல­னம் செய்ய இருக்­கி­றார். பீகா­ரின் கங்­கர்­பாக் பகு­தி­யில் பிறந்­த­வர் அர்ச்­சனா.

இவ­ரின் தந்­தை­யான கயூ­ரி­னந்­தன், சரண் மாவட்­டத்­தில் உள்ள சோனீ­பூர் நீதி­மன்­றத்­தில் பியூ­னாக பணி­பு­ரிந்து வந்­தார். தனது தந்தை பியூ­னாக பணி­பு­ரிந்த இதே நீதித் துறை­யில் தான் ஓர் நீதி­ப­தி­யாக பணி­யில் அமர வேண்­டும் என சிறு­வ­ய­தி­லேயே அர்ச்­சனா முடி­வெ­டுத்­தார். தனது இந்த லட்­சி­யத்தை செயல்­ப­டுத்த கடும் போராட்­டங்­க­ளைச் சந்­தித்த அர்ச்­சனா, தனது இரண்­டா­வது முயற்­சி­யில் பீகார் நீதித்­து­றை­யில் நடை­பெற்ற நீதி­ப­தி­க­ளுக்­கான தேர்­வில் தேறி, விரை­வில் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்க உள்­ளார். ஆனால் தனது வெற்­றி­யைக் கொண்­டாட தனது தந்தை தற்­போது உயி­ரு­டன் இல்லை என்­பதே அவ­ரின் தற்­போ­தைய சந்­தோ­ஷத்­தி­லும் வருத்­த­மான விஷ­ய­மா­கும்.

இது­கு­றித்து அர்ச்­சனா கூறி­ய­தா­வது,” எனது தந்தை நீதி­ப­தி­யி­டம் பியூ­னாக பணி­யாற்­றி­னார். ஓர் சிறு குழந்­தை­யாக எனக்கு இது பிடிக்­க­வில்லை. எனவே அந்த நீதி­ப­தி­யின் இடத்­தில் நான் இருக்­க­வேண்­டும் என முடி­வெ­டுத்­தேன். ஆனால், என் தந்­தை­யின் மர­ணத்­துக்­குப் பிறகு கல்­வி­யைத் தொடர்­வது எட்­டாக்­க­னி­யாக இருந்­தது. இருந்­தா­லும் எனது தாயார் அனைத்து சூழ்­நி­லை­க­ளை­யும் மீறி, ஓர் கல்­தூண் போல என்­னைத் தாங்கி நின்­றார். சில உற­வி­னர்­க­ளும் உத­விக்­க­ரம் நீட்­டி­னர்,” என்­கி­றார்.

சாஸ்­திரி நகர் அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யின் பிளஸ் 2 முடித்த அர்ச்­சனா, பாட்னா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்து முடித்­து­விட்டு, கணினி ஆசி­ரி­ய­ராக பணி­யில் சேர்ந்­தார். இந்­நி­லை­யில் அவ­ருக்­குத் திரு­ம­ண­மும் நடை­பெற்­றது. குழந்­தை­யும் பிறந்­தது. ஆனால் ஒரு நீதி­பதி ஆக வேண்­டும் என்ற அவ­ரின் கனவு மட்­டும் மன­தின் ஓரத்­தில் ஓளிந்து கொண்டே இருந்­ததை அவர் உணர்ந்­தார்.

அர்ச்­ச­னா­வின் லட்­சி­யத்தை அறிந்த அவ­ரது கண­வர் ராஜீவ் ரஞ்­சன், அவ­ரின் கல்­வி­யைத் தொடர ஊக்­கு­வித்­தார். மாமி­யா­ரும் அவ­ரது பங்­குக்கு ஆத­ர­வ­ளித்­தார். இதை­ய­டுத்து அர்ச்­சனா மீண்­டும் தனது போராட்­டத்­தைத் தொடங்­கி­னார். ஆம், இது அவ­ரது லட்­சி­யத்தை அடை­வ­தற்­கான போராட்­டம்.

புனேக்கு வந்த அர்ச்­சனா எல்.எல்.பி. பட்­டத்­து­டன்­தான் பாட்னா திரும்­பி­னார். தொடர்ந்து, 2014ல் பூர்­னி­யா­வின் பி.எம்.டி. சட்­டக் கல்­லூ­ரி­யில் எல்.எல்.எம். முடித்­தார். இதன்­பின், நீதி­பதி தேர்­வு­க­ளுக்­காக பயிற்சி வகுப்­பு­க­ளில் கலந்­து­கொள்ள டில்­லிக்கு வந்­தார். இது­கு­றித்து அவர் கூறும்­போது,

“திரு­ம­ண­மாகி ஓர் குழந்­தைக்­குத் தாயான பின் நான் படிப்­பது என்­பது மிகக் கடி­ன­மான ஓர் விஷ­ய­மா­கத்­தான் இருந்­தது. இருந்­தா­லும், என் கண­வ­ரும், மாமி­யா­ரும் எனக்கு அளித்த ஊக்­க­மும், உற்­சா­க­முமே எனது வெற்­றிக்கு கார­ணம்,” என்­கி­றார் அர்ச்­சனா.

ஒரு­வர் தன் கனவை நன­வாக்க விரும்­பி­னால் அதற்­கா­கக் கடு­மை­யா­கப் பாடு­ப­டத் தயா­ராக இருந்­தால், நிச்­ச­யம் அதை அடைய முடி­யும் எனக்­கூ­றும் அர்ச்­சனா, தனது சிறு­வ­யது நீதி­பதி கனவு நன­வா­கும் இவ்­வே­ளை­யில் தனக்கு உத­விய, தன்னை நம்பி ஊக்­கு­வித்து அனை­வ­ருக்­கும் தனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­விக்­கி­றார்.