கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 2–1–2020

பதிவு செய்த நாள் : 02 ஜனவரி 2020

நடித்த ரோலும் கடித்த ரோலும்!

அண்­மை­யில் தமிழ் நாடு முதல்­வர் ஒரு சினிமா விழா­வில் பங்­கேற்­றார்.

அண்­மை­யில் = ரீஸென்ட்லி (recently)

தமிழ் நாடு முதல்­வர் = த டாமில் நாடு சீஃப் மினிஸ்­டர் (the Tamil Nadu Chief Minister)

ஒரு சினிமா விழா­வில் = இன் அ ஃபிலிம் ஃபங்­க்ஷன் (in a film function)

பங்­கேற்­றார் = டுக் பார்ட் (took part)

டேக் பார்ட் (take part) என்­பது நிகழ்­கால வடி­வம். கல்­ந­து­கொள்­வதை அது குறிக்­கி­றது.

'ஐ டேக் பார்ட் இன் மியூ­சிக் காம்­பி­டீ­ஷன்ஸ்' (I take part in music competitions) = நான் இசைப்­போட்­டி­க­ளில் பங்­கேற்­கி­றேன். நிகழ்­கால வினைச் சொல் (take part) என்­னு­டைய வழக்­கத்தை சுட்ட பயன்­ப­டு­கி­றது.

'வென் ஹீ வாஸ் யங்' (When he was young) = அவன் இளை­ஞ­னாக இருந்த போது, அதா­வது அவ­னு­டைய இள­மைக் காலத்­தில்….'ஹீ டுக் பார்ட் இன் மேனி காம்ப்­ப­டீ­ஷன்ஸ்' (he took part in many competitions) அவன் பல போட்­டி­க­ளில் பங்கு கொண்­டான்.

முதல்­வர் பங்கு கொண்ட விழா­விற்கு திரும்­பு­வோம். லெட் அஸ் டர்ன் டு dத சீஃப் மினிஸ்­டர்ஸ் ஃபங்­க்ஷன்.  Let us turn to the Chief Minister’s function.

முதல்­வர் அந்த விழா­வில் எம்.ஜி.ஆர். நடித்த வேடங்­க­ளைப் பற்­றிக் குறிப்­பிட்­டார். இன் dத ஃபங்­க்ஷன் dத சீஃப் மினிஸ்­டர் ஸ்போக் ஆஃப் dத ரோல்ஸ் இன் விச் எம்.ஜி.ஆர். ஆக்­டெdட். In the function, the Chief Minister spoke of the roles in which MGR acted.

இளை­ஞர்­க­ளைக் கெடுக்­கும் வேடங்­க­ளில் எம்.ஜி.ஆர் நடிக்­கவே மாட்­டார் என்று முதல்­வர் குறிப்­பிட்­டார்.  

முதல்­வர் குறிப்­பிட்­டார் = dத சீஃப் மினிஸ்­டர் பாயிண்­டெdட் அவுட் The Chief Minister pointed out…

இளை­ஞர்­க­ளைக் கெடுக்­கும் வேடங்­க­ளில் =

இன் ரோல்ஸ் தேட் ஸ்பாயில்ட் த யூத் in roles that spoiled the youth (ஸ்பாயில் spoil என்­ப­தன் கடந்த கால வடி­வம் ஸ்பாயில்dட் spoiled.  spoilt என்ற வடி­வ­மும் சரி­யா­ன­தே…­ஆ­னால் அமெ­ரிக்­கா­வில் அது தவறு என்று கரு­தப்­ப­டு­கி­றது!).

சினிமா பற்­றிய தன்­னு­டைய கொள்­கையை எம்.ஜி.ஆர். ஒரு பாட­லில்  வெளி­யிட்­டார்.

எம்.ஜி.ஆர். வெளி­யிட்­டார் = எம்.ஜி.ஆர். அன­வுன்ஸ்dட் MGR announced

சினிமா பற்­றிய தன்­னு­டைய கொள்­கையை =

ஹிஸ் வியூ அப­வுட் சினிமா His view about cinema

கொள்கை என்­கிற சொல் 'சித்­தாந்­தம்', 'கோட்­பாடு', 'கருத்து', 'பார்வை'   என்று பல­வி­தப் பொருள்­க­ளில் பயன்­ப­டும்… (அரசு கொள்கை) பாலிஸி, பிரின்­ஸி­பில் principle, டெனெட் tenet, வியூ view, தியரி theory என்று அதற்­கான ஆங்­கில சொற்­க­ளும் வேறு­ப­டும்).

சினிமா பற்­றிய தன்­னு­டைய கொள்­கையை எம்.ஜி.ஆர். ஒரு பாட­லில்  வெளி­யிட்­டார்…MGR announced his theory about cinema in a song.

சினிமா பற்­றிய எம்.ஜி.ஆரின் கொள்­கை­யைத் 'தியரி' என்று கூடச் சொல்­ல­லாம் அல்­லவா…('தியரி'

theory = கோட்­பாடு).

'நாம் பாடற பாட்­டும் ஆடற கூத்­தும் படிப்­பி­னைத் தந்­தா­க­ணும்' என்ற வரி­கள் எம்.ஜி.ஆரின் கருத்­தைத் தெரிக்­கின்­றன.

''த லைன்ஸ், 'dத சாங்ஸ் வி சிங் அண்ட் த ரோல்ஸ் வீ பிளே மஸ்ட் ஸர்வ் ஆஸ் லெஸென்ஸ் டு பீபில்' ரிவீல் எம்.ஜி.ஆர்ஸ் வியூ அப­வுட் சினிமா'' (The lines, 'the songs we sing and the roles we play must serve as lessons to people', reveal MGR’s view about cinema).

(பாடற பாட்­டும்) ஆடற கூத்­தும் என்று பாட­லா­சி­ரி­யர் ஒரு வீச்­சில் எழு­திச் சென்­றதை, 'ரோல்ஸ் வீ பிளே' என்று நம் காலத்­துச் சினி­மா­வு­டன் இணைத்து மொழி பெயர்த்­தி­ருக்­கி­றேன்.

'எம்.ஜி.ஆர். ஆக்­டெdட் ஆஸ் அ ரி­க்ஷா­மேன்'. MGR acted as a rickshawman. எம்.ஜி. ஆர். ரி­க்ஷா­கா­ர­னாக நடித்­தார்.

எம்.ஜி.ஆர் ஆக்­டெdட் ஆஸ் அ லேbப­ரர். MGR acted as a labourer. எம்.ஜி.ஆர். தொழி­லா­ளி­யாக நடித்­தார்.

எம்.ஜி.ஆர் ஆக்­டெdட் ஆஸ் ஆன் எலி­பென்ட் டிரை­னர். MGR acted as an elephant trainer. யானை பயிற்­சி­யா­ள­ராக எம்.ஜி.ஆர். நடித்­தார்.

எம்.ஜி.ஆர். ஷோdட் dத dடிgக்­னிடி ஆஃப் லேbபர் bபை ஆட்­டிங் இன் ஸச் ரோல்ஸ்…MGR showed the dignity of labour by acting in such roles. இத்­த­கைய பாத்­தி­ரங்­க­ளில் நடித்­த­தன் வாயி­லாக, உழைப்­பின் உயர்வை எம்.ஜி.ஆர். வெளிக்­காட்­டி­னார்.

இந்த முறை­யில் பேசி­னார் முதல்­வர். dத சீஃப் மினிஸ்­டர் ஸ்போக் இன் dதிஸ் மேன்­னர். The Chief Minister spoke in this manner.

ரோல் (role) என்ற சொல்­லைக் கவ­னி­யுங்­கள். பாத்­தி­ரம், வேடம் என்ற பொரு­ளில் அது வரு­கி­றது.

சிவாஜி ஆக்­டெட் இன் நைன் ரோல்ஸ் இன் த ஃபிலிம் நவ­ராத்­திரி. Sivaji acted in nine roles in the film, Navarathri. நவ­ராத்­திரி என்ற படத்­தில் சிவாஜி ஒன்­பது வேடங்­க­ளில் நடித்­தார்.

குறிப்­பிட்ட சூழ்­நி­லை­யில் ஒன்­ற­னு­டைய அல்­லது ஒரு­வ­ரு­டைய அல்­லது சிலர்/பல­ரு­டைய தன்­மை­யைக் குறிக்க 'ரோல்' பயன்­ப­டு­கி­றது.

'த ரோல் ஆஃப் பேரென்ட்ஸ் இன் த அப்b­பி­ரிங்g­கிங் ஆஃப் அ சைல்ட் இஸ் வெரி இம்­பார்­டென்ட்'. The role of parents in the upbringing of a child is very important. ஒரு குழந்­தை­யின் வளர்ப்­பில் பெற்­றோ­ரு­டைய பங்கு மிக முக்­கி­ய­மா­னது (அப்b­பி­ரிங்g­கிங்=வளர்ப்பு)

'த ரோல் ஆஃப் நேதாஜி இன் அவர் நேஷ­னல் ஸ்ட்ரgகிள் வாஸ் வெரி இம்­பார்ட்­டென்ட்'. The role of Netaji in our national struggle was very important. நம்­மு­டைய தேசிய போராட்­டத்­தில் நேதா­ஜி­யின் பாகம் மிக­வும் முக்­கி­ய­மா­னது.

'யூ ஆர் கோயிங் டு பிளே அ மேஜர் ரோல் இன் dதிஸ் கம்­பெனி'. You are going to play a major role in  this company. இந்த நிறு­வ­னத்­தில் நீ ஒரு முக்­கிய பாகத்தை வகிக்­கப் போகி­றாய்.

'பாகிஸ்­தான் பிளேdட் அ விக்­கெdட் ரோல் இன் ஃபோமென்­டிங் டெர்­ர­ரி­ஸம் இன் காஷ்­மீர்'. Pakistan played a wicked role in fomenting terrorism in Kashmir.

காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தத்­தைத் தூண்­டும் விஷ­யத்­தில் பாகிஸ்­தான் ஒரு தீய செயல்­பாட்டை மேற்­கொண்­டது.

ரோல் (role) என்ற அதே உச்­ச­ரிப்­பு­டன் roll என்ற இன்­னொரு சொல்­லும் உள்­ளது.

ஃபிலிம் ரோல் (film roll) என்­பது ஃபிலிம் சுருள்.

பிரெdட் ரோல் (bread roll) என்­பது பிரெdட்dடை சுற்றி செய்­யப்­ப­டு­கி­றது ஒரு உணவு வகை.

roll என்­பதை வினைச்­சொல்­லா­கப் பயன்­ப­டுத்­தும் போது, உருட்டு, சுருட்டு என்ற பொரு­ளில் வரும்.

ரோல் த பால் டு மீ. Roll the ball to me. பந்தை என்­னி­டம் உருட்டு.

ரோல் அப் யூர் ஸ்லீவ்ஸ் (Roll up your sleeves). சட்­டைக்­கையை சுருட்டு என்று பொருள். வேட்­டியை மடிச்­சுக் கட்­டு…­என்­ப­து­போல் களத்­தில் குதி, கோதா­வில் இறங்கு, செய­லில் ஈடு­படு என்ற பொரு­ளில் இது வரு­கி­றது.

பள்­ளி­யில் அட்­டென்­டென்ஸ் (attendance) எடுப்­பார்­கள் அல்­லவா...அதற்கு ரோல் கால் (roll call) என்று பெயர்.

'மஸ்­டர் ரோல்' (muster roll) என்­பது வேலை­யில் இருப்­ப­வர்­கள் பட்­டி­யல். இது தொடர்­பாக சென்னை மாந­க­ராட்­சி­யில் ஒரு மிகப்­பெ­ரிய ஊழல் 1973ல் வெடித்­தது. அதற்கு மஸ்­டர் ரோல் ஸ்கான்­டல் (muster roll scandal) என்று பெயர். ராக் அண்ட் ரோல் (rock and roll) என்­பது ஒரு இசை வகை. அதை பbப்­ளிக் பணத்­து­டன் சிலர் தனி ஆவர்த்­த­னம் போட்­டு­விட்­ட­தால் நேர்ந்த கட்­டுப்­பா­டற்ற கொள்ளை அது.