பிசினஸ்: காலமறிந்து வாய்ப்புகளை பெருக்க...! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 02 ஜனவரி 2020

முதல் படி­யாக, தற்­போது சந்­தை­யி­லுள்ள குறைப்­பாட்டை அல்­லது வினைத் திற­னின்­மையை அடை­யா­ளம் காண வேண்­டும். அந்த குறை­பாட்டை நீக்­கு­வ­தற்கு தேவைப்­ப­டும் ஒரு யோசனை உங்­க­ளுக்கு தோன்­று­கி­றதா ? இதற்கு உதா­ர­ண­மாக பிடெக்ஸ நிறு­வ­னத்தை காண­லாம். ஏற்­க­னவே பல்­வேறு கூரி­யர் கம்­ப­னி­கள் இருந்­தா­லும் அந்த கம்­ப­னி­க­ளி­னால் தங்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­கக்­கூ­டிய குறித்த நேரத்­தில் பட்­டு­வாடா செய்­யக்­கூ­டிய உத்­தி­ர­வா­தம் கிடைக்­க­வில்லை. இது அந்த சம­யத்­தில் அந்த துறை­யில் இருந்து வந்த குறைப்­பா­டா­கும். அந்­தக் குறைப்­பாட்டை நீக்­கும் படி­யாக, குறித்த நேரத்­தில் வேக­மாக உத்­தி­ர­வா­தத்­து­டன் பட்­டு­வாடா செய்த ஒரே கார­ணத்­தி­னால் இன்று பிடெக்ஸ்­உ­ல­கத்­தி­லுள்ள அனைத்து நாடு­க­ளி­லும் வேரூன்றி நிற்­கி­றது.

மற்­றொரு உதா­ர­ணம் ஏஜன்சி பாகி­யுஸ்

ஒரு காலக்­கட்­டத்­தில், விளம்­ப­ரத் துறை­யில் பணி­பு­ரிந்து வந்த வல்­லு­னர்­க­ளுக்கு தேவைப்­ப­டும் பல­த­ரப்­பட்­டத் தக­வல்­களை ஒரே இடத்­தில் பெறு­வ­தற்­கான வசதி இருக்­க­வில்லை. இதையே நாம் சந்­தை­யின் குறைப்­பாடு என்று சொல்­லல்­லாம். இந்­தக் குறைப்­பாட்டை அடை­யா­ளம் கண்டு கொண்ட ஏஜன்சி பாகி­யுஸ் அந்த துறைக்கு தேவைப்­ப­டு­கின்ற அனைத்து தக­வல்­க­ளை­யும் ஒன்­றாக திரட்டி, உல­கத்­தி­லேயே மிகப்­பெ­ரிய தக­வல் களஞ்­சி­யத்தை ஊரு­வாக்கி அளித்­தது மற்­றொரு உதா­ர­ணம் ஆகும். இது போலவே, இப்­போது இருக்­கக் கூடிய சந்­தை­யில் உள்ள குறைப்­பாட்டை அடை­யா­ளம் கண்­டுக்­கொண்டு, அதை நிவர்த்தி செய்­வ­தற்­கான ஒரு எண்­ணத்தை கொண்டு வரு­வது ஒரு புதிய தொழில்  திட்­ட­மாக அமை­ய­லாம்.

முக்­கிய குறை­களை களை­வது

ஒரு குறிப்­பிட்­டப் பொருளை வாங்­கும்­போது அல்­லது சேவை­களை பயன்­ப­டுத்­தும்­போது அதன் வாடிக்­கை­யா­ளர்­கள் சந்­திக்­கக்­கூ­டிய சங்­க­டங்­களை / குறை­களை அடை­யா­ளம் காணுங்­கள். இதற்­காக நீங்­கள் ஒரு அதே பொருளை / சேவையை புதி­தாக உரு­வாக்­கித்­தர வேண்­டும் என்று கருத்­துக் கொள்­ளக் கூடாது. ஏற்­க­னவே சந்­தை­யில் பயன்­பாட்­டில் இருக்­கும் குறிப்­பிட்­டப் பொருள் / சேவை­யின் மீது / அவற்­றின் செயல்­பா­டு­க­ளில் எவ்­வாறு முன்­னேற்­றத்­தைக் கொண்­டு­வர முடி­யும் என்ற ஒரு சிந்­தனை உங்­க­ளின் புதிய தொழில் முயற்­சிக்கு வித்­தாக அமை­ய­லாம்.

ஒரு சில பொருட்­களை சந்­தை­யில் பெறு­வ­தற்கு பல்­வேறு சிர­மங்­களை வாடிக்­கை­யா­ளர்­கள் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­க­லாம்.  அதே பொருளை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு எளி­தில், குறிப்­பிட்ட நேரத்­தில் சிறப்­பாக  எவ்­வித சிர­ம­மும் இல்­லா­மல் வழங்க முடி­யும் என்று யோசி­யுங்­கள்.   உதா­ர­ணத்­திற்கு, சந்­தை­யில் இருக்­கக்­கூ­டிய பல்­வேறு தேடல் இயந்­தி­ரங்­க­ளையே எடுத்­துக் கொள்­ளுங்­கள். லட்­சக்­க­ணக்­கான தேடல் இயந்­தி­ரங்­கள் இணை­ய­த­ளத்­தில் பய­னில் இருந்­தா­லும், நமக்­குத் தேவைப்­ப­டும் ஒரு குறிப்­பிட்ட விஷ­யத்தை கண்­டுப்­பி­டிப்­பது பல சம­யங்­க­ளில் மிக­வும் சிர­ம­மாக இருக்­கும். ஆனால். கூகுல், யாஹூ போன்ற தேடல் இயந்­தி­ரங்­கள் இன்று நமது தேடலை மிக­வும் எளி­தாக்கி விட­வில்­லையா ?

புதிது புதி­தாக எதை­யா­வது அனு­ப­விக்­கத் துடிக்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள்

உங்­க­ளி­டம் சந்­தைக்கு தேவைப்­ப­டு­கின்ற ஏதா­வது ஒரு புதிய பொருள் அல்­லது சேவையை வழங்­கக் கூடிய வணி­கத் திட்­டம் இருக்­க­லாம், அல்­லது இல்­லா­ம­லும் இருக்­க­லாம்.  அல்­லது இருக்­கக்­கூ­டிய சந்தை வாடிக்­கை­யா­ளர்­க­ளின் அனைத்­துத் தேவை­க­ளை­யும் பூர்த்தி செய்­யும் வகை­யில் எவ்­வித குறைப்­பா­டு­க­ளும் இல்­லா­மல் இருக்­க­லாம். ஆனால் பொது­வாக மக்­கள் மனத்­தில் புதி­ய­தாக எதை­யா­வது அனு­ப­விக்க வேண்­டும் என்­கிற ஒரு துடிப்பு எல்லா சம­யங்­க­ளி­லும் இருக்­கவே செய்­கி­றது. இந்த எதிர்­பார்ப்பை தீர்க்­கும் வகை­யில், ஏற்­க­னவே சந்­தை­யில் இருக்­கக்­கூ­டிய ஒரு பொருள் அல்­லது சேவையை மாற்றி அளிக்­கும் வகை­யில், உங்­க­ளுக்கு ஏதா­வது யோசனை தோன்­றி­னால், அதுவே கூட ஒரு வெற்­றி­க­ர­மான வணிக திட்­ட­மாக அமை­யக்­கூ­டும்.

வளர்ந்து வரும் துறை / தொழிலை தெரிவு செய்­தல்

புதி­ய­தாக ஒரு தொழிலை ஆரம்­பிக்க நினைக்­கும்­போது, அந்த துறை அல்­லது தொழில் / சேவைக்கு எந்த அள­வுக்கு வளர்ச்சி வாய்ப்­பு­கள் இருக்­கி­றது என்று கண்­ட­றி­வது முக்­கி­ய­மா­கும். உதா­ர­ண­மாக, இந்­தியா மட்­டு­மில்­லா­மல், உல­கின் பல்­வேறு நாடு­க­ளி­லும் கணினி துறை சம்­மந்­தப்­பட்ட பல்­வேறு தொழில் / சேவை­க­ளுக்கு அதி­க­மான வளர்ச்சி வாய்ப்­பு­கள் இருந்து வரு­கின்­றன. இந்­தத்­துறை மற்ற எந்­தத் துறையை விட­வும் மிக­வும் வேக­மான வளர்ச்­சியை கண்­டும்  வரு­கி­றது.  எனவே இந்­தத்­து­றை­யைச் சார்ந்த ஏதா­வது ஒரு தொழிலை துவங்­கு­வது என்­பது ஒரு­வேளை நன்மை பயக்­கும் யோச­னை­யாக இருக்­க­லாம். அதே சம­யம், ஏற்­க­னவே வளர்ச்சி நிலை­யில் உள்ள சந்­தை­யின் குறைப்­பா­டு­களை சரி­யாக அடை­யா­ளம் கண்டு அதை தீர்க்க தகுந்த திட்ட வடி­வம் உங்­க­ளி­டம் இல்லை என்­றால், தேக்க நிலை­யில் இருக்­கும் தொழில் துறை­யில் முத­லீடு செய்­வது என்­பது நீங்­கள் எதிர்­பார்க்­கும் நன்­மை­களை வழங்­கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

பொருள் / சேவையை வித்தியாசப்­ப­டுத்­திக் காட்­டல்

சந்­தைக்கு தரத்­தில் மிகச் உயர்ந்த பொருட்­கள் மற்­றும் சேவை­களை வழங்­கு­வது மட்­டுமே வெற்­றிக்­கான வழியா அல்­லது மாற்­றுப் பொருட்­களை வழங்­கு­வதா என்ற கேள்­வியை கேட்­பது மிக­வும் முக்­கி­ய­மா­கும்.  மற்­றப் பொருட்­க­ளி­லி­ருந்து உங்­கள் தயா­ரிப்­பு­களை எந்த கூறு (கார­ணி­கள்) வித்­தி­யா­சப்­ப­டுத்­திக் காட்­டு­கி­றது என்று கண்­ட­றிய வேண்­டும். நம் பொருட்­கள் மற்ற பொருட்­க­ளி­லி­ருந்து எவ்­வித வித்­தி­யா­சத்­தை­யும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றால், வாடிக்­கை­யா­ளர்­கள் உங்­கள் பொருட்­களை நாடா­மல் தாங்­கள் ஏற்­க­னவே பயன்­ப­டுத்தி வரும் பழைய பொருட்­க­ளையே தொடர்ந்து உப­யோ­கிக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம்.

தட்­டுப்­பா­டற்ற பணப்­பு­ழக்­கம்

மற்ற எல்லா தொழில்­க­ளுக்­குப் பொருந்­து­வது போலவே, துவக்க நிலை­யில் இருக்­கும் அனைத்து வணிக நிறு­வ­னங்­க­ளின் கையி­லும் போதிய அளவு பணப்­பு­ழக்­கம் இருக்க வேண்­டும். ஆனால் தேவைப்­ப­டும் அளவு பண இருப்பு கைவ­சம் இல்­லா­மல், வெறும் சரக்­கு­கள் மற்­றும் இதர சொத்­துக்­கள் மட்­டுமே கைவ­சத்­தில் இருந்­தால், விரை­வில் நாம் பல்­வேறு வித­மான சிக்­கல்­களை எதிர்­கொள்ள வேண்டி வர­லாம்.

சில வகை தொழில்­க­ளில் / துறை­க­ளில் பணம் அல்­லது ரொக்­கம் கையில் வர நீண்ட காலம் பிடிக்­க­லாம். நீங்­கள் பொருட்­களை உற்­பத்தி செய்­யும் துறையை சார்ந்­த­வ­ராக இருந்­தால், டீலர்­க­ளுக்கு / ஏஜன்டு­க­ளுக்கு கடன் அடிப்­ப­டை­யில் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருக்­கும் பொருட்­க­ளுக்­கான பணம் திரும்ப வந்து சேர சில மாதங்­கள் கூட பிடிக்­கும். இது போன்ற சம­யங்­க­ளில் அன்­றாட செல­வு­கள்,  தொழி­லா­ளர் ஊதி­யம், மின்­சா­ரக் கட்­ட­ணம், இடுப்­பொ­ருட்­க­ளுக்கு தேவைப்­ப­டும் பணம் போன்ற செல­வி­னங்­களை சமா­ளிக்க முடி­யா­மல் போகும் நிலை எற்­ப­ட­லாம். எனவே நீங்­கள் எந்த துறையை தேர்ந்­தெ­டுத்­தா­லும், தட்­டுப்­பா­டற்ற பணப்­பு­ழக்­கம் கையில் இருக்­கு­மாறு பார்த்­துக்­கொள்ள வேண்­டும், கூடு­மா­ன­வரை வர­வு­களை உட­ன­டி­யா­க­வும், செல­வு­க­ளுக்­கான கணக்­கு­களை பைசல் செய்­வதை காலம் தாழ்த்­தி­யும் செய்­வது உங்­க­ளின் பணப்­பு­ழக்­கத்தை ஓர­ள­வுக்கு கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கும். போது­மான அளவு பணப்­பு­ழக்­கம் உங்­க­ளின் நிறு­வ­னத்­தில் / கையில் இல்­லை­யென்­றால், தெரிவு செய்த தொழில் யோசனை எவ்­வ­ளவு சிறந்­த­தாக இருந்­தா­லும் கடை­சி­யில் நீங்­கள் தோல்­வி­யையே சந்­திக்க நேரி­டும் என்­பதை நினை­வில் கொண்டு அதற்­கேற்­ற­வாறு திட்­ட­மி­டல் வேண்­டும்.

உங்­கள் வர்த்­த­கம் பரு­வ­கா­லத்தை சார்ந்­ததா...

ஒரு புதிய வர்த்­த­கத்தை தேர்ந்­தெ­டுக்­கும் பொது, அது வரு­டம் முழு­வ­தும் நடக்­கக்­கூ­டிய வர்த்­த­கமா அல்­லது குறிப்­பிட்­டக் காலங்­க­ளில் மற்­றும் நடக்­கக் கூடி­யதா என்­பதை மன­தில் கொண்டு, அதற்­கேற்­ற­வாறு பணப் புழக்­கத்தை திட்­ட­மி­டல் வேண்­டும், உதா­ர­ணத்­திற்கு உல்­லன் ஸ்வட்­டர்­கள் (பனி­யன்­கள்) மற்­றும் கோட்­டு­களை உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு குளிர் காலம் தவிர மற்ற காலக்­கட்­டங்­க­ளில் போது­மான வியா­பா­ரம் இருக்­காது. எவ்­வித பண­வ­ர­வும் இல்­லா­தி­ருக்­கும் இது­போன்ற சம­யங்­களை சமா­ளிக்க தேவை­யான முன்­னேற்­பா­டு­களை ஆரம்­பத்­தி­லேயே திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது அவ­சி­ய­மா­கும்.