சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 425– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 01 ஜனவரி 2020

நடி­கர்­கள் : தனுஷ், அனன்யா, உன்னி முகுந்­தன், சுஹா­சினி மணி­ரத்­னம், ஷீலா, விவேக், இள­வ­ரசு  மற்­றும் பலர். இசை : தீனா, ஒளிப்­ப­திவு : ஸ்ரீநி­வாஸ் தேவாம்­சம், எடிட்­டிங் : ராம் சுதர்­சன், தயா­ரிப்பு : மித் புரொ­டக்­க்ஷன்ஸ், கதை : ரஞ்­சித், திரைக்­கதை, இயக்­கம்: சுப்­ர­ம­ணி­யம் சிவா.

முதி­ய­வர் அமிர்­த­வள்ளி (ஷீலா) வீட்­டில் வேலைக்­கா­ரி­யாக இருந்து அவரை கவ­னித்­துக் கொள்­ப­வள் மகா (அனன்யா). அவ­ரது வீட்­டி­லும் அக்­கம்­பக்­கத்­தி­லும் அனை­வ­ரும் மகாவை வேலைக்­கா­ரி­யாக இல்­லா­மல் வீட்­டில் ஒரு­வ­ரா­கவே பார்க்­கி­றார்­கள். சமை­ய­லோடு வீட்­டின் அனைத்து வேலை­க­ளை­யும் பார்த்­துக்­கொள்­ளும் மகா சிறந்த முருக பக்தை. பழ­னி­யில் இருந்­தும் மகா­வால் முரு­கனை கோயில் சென்று தரி­சிக்க முடி­ய­வில்லை. ஒரு நாள் தனக்கு திரு­ம­ண­மா­வ­தாக கனவு காணும் மகா கன­வில் கண­வ­னாக கண்­ட­வரை அடுத்த நாள் தனது வீட்­டில் சந்­திக்­கி­றாள். அது அமிர்­த­வள்­ளி­யின் பேரன் மனோ (உன்னி முகுந்­தன்) என்று தெரிய வரு­கி­றது. பாட்­டி­யோடு தங்­கும் மனோ மகாவை நேசிக்க தொடங்­கு­கி­றான். முத­லில் மறுத்­தா­லும் மகா­வும் மனோவை விரும்­பு­கி­றாள்.

தங்­கள் திரு­ம­ணத்­திற்கு தனது தாய் சம்­ம­தம் தெரி­விப்­பார் என்று உறு­தி­யாக நம்­பும் மனோ, மகா­வுக்­கும் தைரி­யம் சொல்­கி­றான். ஆனால் மனோ சொல்­வ­தற்கு முன்பே அவ­னது அம்மா தங்­கம் (சுஹா­சினி மணி­ரத்­னம்) மனோ­வுக்கு தனது சிறு­ வ­யது தோழி­யின் மகளை நிச்­ச­யம் செய்­து­வி­டு­கி­றார். உண்மை தெரிந்­தும் ஒன்­றும் செய்­ய­மு­டி­யா­மல் அனை­வ­ரும் வருந்­து­கி­றார்­கள். இதற்­கி­டையே நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணம் மணப்­பெண்­ணால் நின்­று­விட உற­வி­னர்­கள் தங்­கத்தை குறை சொல்­கி­றார்­கள். வீட்­டில் ஒரு­வ­ராக பழ­கும் மகாவை வேலைக்­கா­ரி­யாக நடத்தி அவ­ம­திக்­கி­றார்­கள். மனம் வருந்­தும் மகா இனி முரு­கனை பார்க்­கப் போவ­தில்லை என்று முடி­வெ­டுக்­கி­றாள்.

பழனி மடப்­பள்­ளி­யைச் சேர்ந்த சர­வ­ணன் (தனுஷ்) சமை­யல்­கா­ர­ராக வீட்­டிற்­குள் நுழைய அவ­ரது சமை­யல் ருசி அனை­வ­ரும் பிடித்­து­வி­டு­கி­றது. குடும்ப நண்பர் மாதவ கவுண்­டர் (இள­வ­ரசு) சிபா­ரி­சில் வந்த சர­வ­ணன் தனக்கு நிம்­மதி கொடுக்­கும் சமை­யல் வேலையை பறித்­துக் கொண்­ட­தாக மகா குறை சொல்­கி­றாள். அவர்­கள் வீட்­டில் ஏற்­க­னவே தங்­கி­யுள்ள போலி

சா­மி­யார் கும்­பி­டு­சா­மி­யோடு (விவேக்) சர­வ­ணன் தங்­கிக் கொள்­கி­றார். அவ­ரது உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தாக கூறி அவரை தனது கட்­டுப்­பாட்­டில் சர­வ­ணன் வைத்­தி­ருக்­கி­றார். சர­வ­ணன் சொல்­படி, உற­வி­னர்­கள் நிச்­ச­யத்­திற்­கும் பெண் மனோ­வுக்கு பொருந்தி வர­மாட்­டாள் என கும்­பி­டு­சாமி அனை­வ­ரி­ட­மும் கூறி குழப்­பம் ஏற்­ப­டுத்­து­கி­றார்.

சர­வ­ணன் ஏற்­ப­டுத்­தும் குழப்­பங்­களை அடுத்து, ஏற்­க­னவே உண்­மையை உணர்ந்­தி­ருந்த அமிர்­த­வள்­ளி­யும், தங்­க­மும், மனோ­வும், மகா­வும் இணைய சம்­ம­தம்  தெரி­விக்­கி­றார்­கள். திரு­ம­ணத்­தன்று மனோ­வும், மகா­வும் நன்றி தெரி­விக்க சர­வ­ணனை தேடு­கி­றார்­கள். அங்கு வரும் புதிய நபர் மாதவ கவுண்­டன் சிபா­ரிசு செய்த மடப்­பள்­ளி­யைச் சேர்ந்த சர­வ­ணன் தான் என்­றும் தன்­னால் வேலைக்கு வர­மு­டி­ய­வில்லை என்­றும் கூறு­கி­றார். முதன்­மு­றை­யாக முரு­கனை கோயி­லில் தரி­சிக்­கும் மகா சர­வ­ணனை அங்கு காண்­கி­றாள். ஆனால் விரை­வி­லேயே கண்­ணி­லி­ருந்து மறைந்­து­விட்ட சர­வ­ணன் உண்­மை­யில் தான் வணங்­கும் முரு­கனே என்று உணர்ந்து மகிழ்­கி­றாள். இந்­து­மத நம்­பிக்­கை­யின்படி தேவைப்­ப­டும் இடங்­க­ளில் கட­வுள் மனித உரு­வில் வந்து உதவி செய்­வார் என்­பது ஆழ­மான நம்­பிக்கை.