2020ம் புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள் : 01 ஜனவரி 2020 14:51

சென்னை

நாடு முழுவதும் 2020ம் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நிலையில், கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

புத்தாண்டையொட்டி வாடிகனில் கூடிய ஆயிரக்கணக்கானோருக்கு போப் பிரான்சிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை
சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் அங்கு திரண்டு புத்தாண்டைக கொண்டாடினர்..
வேளாங்கண்ணி
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. உலக மக்கள் நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நாசரேன் சூசை தலைமையில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது.