சத்குருவிடம் யோகா கற்க வாய்ப்பு

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 19:55

சென்னை, 

சென்னையில் ஈஷா யோகா வகுப்பு, 18, 19ம் தேதி மற்றும் 21, 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், சத்குரு நேரடி பயிற்சி அளிக்கிறார்.

இது தொடர்பாக, ஈஷா யோகா மையத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் லோக்நேத்ரா கூறியதாவது:

ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னையில், சத்குரு நேரடியாக ஈஷா யோகா வகுப்பை நடத்த உள்ளார். மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில், டிசம்பர் 18, 19ம் தேதி மற்றும் 21, 22ம் தேதிகளில் யோகா வகுப்பு நடக்க இருக்கிறது.

இதில், 'ஷாம்பவி மஹாமுத்ரா' என்ற எளிமையான, சக்தி வாய்ந்த யோக க்ரியா கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த வகுப்பு, எந்த ஒரு மதத்தையும் சாராமல், அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் மாணவர்களுக்கு, கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்ய, isha.sadhguru.org/chennai என்ற இணையதளம் அல்லது

83000 - 37000 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, சென்னை ஒருங்கிணைப்பாளர் லோக்நேத்ரா கூறினார். 

அப்பல்லோ மருத்துவமனை எலும்பியல் மருத்துவ நிபுணரும், ஈஷா தன்னார்வலருமான டாக்டர் சுந்தர் குமார், ஈஷா தன்னார்வலர் ராஜ் சீதாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.