நேபாளத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்: 3 பேர் பலி, 3 பேர் காயம்

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 16:22

காத்மாண்டு

நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவல்துறை அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து சுமார் 200 கிமீ கிழக்கே அமைந்துள்ளது தனுசா மாவட்டம். இம்மாவட்டதில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.