அநீதிக்கு எதிராக போராடாதவர்கள், கோழைகள்: பிரியங்கா காந்தி

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 15:28

புதுடில்லி,        

நாட்டில் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள், கோழைகளாக கருதப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்த மசோதா, காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கம், விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் டில்லியில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது.

இந்நிலையில், டில்லி ராம்லீலா திடலில் இன்று பிற்பகல் இந்த பேரணி தொடங்கியது. அந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,

”நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள். நாம் அமைதியாக இருந்துவிட்டால் புரட்சிகரமான நமது அரசியலமைப்பு அழிக்கப்பட்டு நாட்டில் பிரிவினை தொடங்கிவிடும்” என்று தெரிவித்தார்.