மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; மக்கள் அச்சம்

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 12:37

மும்பை

மகாராஷ்டிராவில் மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பல்கார் மாவட்டத்தில்  இன்று காலை  5.22 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 4.8 ஆக பதிவானது.
தஹானு தாலுகாவில் உள்ள  துண்டல்வாடி என்ற கிராமத்தில்  வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்தே 2 முறை லேசான நிலநடுக்கத்தை உணர முடிந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியம் 12.26 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில்,  10 கி.மீட்டர் ஆழத்தில் இரவு 9.55 மணியளவில்  3.4  ரிக்டர் அளவுக்கு மற்றொரு நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஹானு தாலுகாவில்  கடந்த ஓராண்டாகவே அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.