எங்களுக்கே வாக்களிப்பார்கள் அரவிந்த் கெஜ்ரிவால்

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019

டில்லி சட்­ட­சபை தேர்­தல் அடுத்த வரு­டம் பிப்­ர­வரி மாதம் நடை­பெற வாய்ப்பு உள்­ளது. தற்­போது டில்­லி­யில் ஆம் ஆத்மி கட்­சி­யின் ஆட்சி நடை­பெ­று­கி­றது. முதல்­வ­ராக அர­விந்த் கெஜ்­ரி­வால் உள்­ளார். டில்லி சட்­ட­சபை உறுப்­பி­னர் எண்­ணிக்கை 70. சென்ற சட்­ட­சபை தேர்­த­லில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்­க­ளில் வெற்றி பெற்று அசு­ர­ப­லத்­து­டன் ஆட்சி அமைத்­தது. கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் நிறை­வேற்­றி­யுள்ள திட்­டங்­க­ளால், வரும் தேர்­த­லி­லும் வாக்­கா­ளர்­கள் ஆம் ஆத்­மிக்கே வாக்­க­ளிப்­பார்­கள் என்று நம்­பிக்­கை­யு­டன் கூறு­கின்­றார் ஆம் ஆத்மி கட்­சி­யின் நிறு­வ­ன­ரும், முதல்­வ­ரு­மான அர­விந்த் கெஜ்­ரி­வால். அவர் அவுட்­லுக் வார இத­ழுக்கு அளித்த பேட்­டி­யின் சுருக்­கம்.

கேள்வி: உங்­கள் முத­ல­மைச்­சர் பத­விக் காலம் முடி­வ­டை­யும் தரு­வா­யில் உள்­ளது. நீங்­கள் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­விட்­ட­தாக கரு­து­கின்­றீர்­களா?

பதில்:நாங்­கள் மக்­க­ளுக்கு சேவை செய்­ய­வும், அர­சி­யல் முறையை மாற்­ற­வுமே அர­சி­ய­லுக்கு வந்­தோம். கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் மூன்று விஷ­யங்­கள் நடந்­துள்­ளன. முத­லில் நாங்­கள் நேர்­மை­யாக ஆட்சி செய்­ய­மு­டி­யும் என்­பதை நிரூ­பித்­துள்­ளோம். இரண்­டா­வ­தாக தேர்­தலை கூட நேர்­மை­யாக சந்­தித்­தோம். மூன்­றா­வ­தாக முடிந்த அளவு மாற்­றத்தை உண்­டாக்­கி­யுள்­ளோம். நாங்­கள் கடந்த 70 ஆண்­டு­க­ளாக நிறை­வற்ற முடி­யா­த­வற்றை நிறை­வேற்­றி­யுள்­ளோம். இதற்கு முன் இருந்த எந்த அர­சும் பள்­ளி­கள் அல்­லது மருத்­து­வ­ம­னை­க­ளின் தரத்தை உயர்த்த முயற்சி செய்­த­தில்லை. அதே போல் 24 மணி நேர­மும் குறைந்த கட்­ட­ணத்­தில் மின்­சா­ரம் கிடைக்க செய்­த­தில்லை. இவற்றை அவர்­க­ளுக்கு எப்­படி செய்­வது என்று தெரி­யா­மல் இருந்­தி­ருக்­க­லாம் அல்­லது செய்­வ­தற்கு மன­தில்­லா­மல் இருந்­தி­ருக்­க­லாம். மக்­கள் படிக்­கா­த­வர்­க­ளாக, ஏழை­க­ளாக, பின்­தங்­கி­ய­வர்­க­ளாக இருந்­தால் தான் தங்­க­ளுக்கு வசதி என்று நினைத்­தி­ருக்­க­லாம். நாங்­கள் இந்த அர­சி­யல் நோக்­கத்தை பெரிய அள­வில் மாற்­றி­யுள்­ளோம்.

பார­திய ஜனதா ஹரி­யானா தேர்­த­லில் ஜாட் ஜாதி­யி­னர், ஜாட் அல்­லாத மற்ற ஜாதி­யி­னர் என்ற கோணத்­தில் போட்­டி­யி­டு­கி­றது. மகா­ராஷ்­டி­ரா­வில் மராத்­தி­யர். மராத்­தி­யர் அல்­லா­த­வர்­கள் என்ற ரீதி­யில் போட்­டி­யி­டு­கி­றது. குஜ­ராத்­தில் படேல், படேல் அல்­லா­த­வர்­கள் என்ற ரீதி­யில் போட்­டி­யி­டு­கி­றது. எல்லா இடங்­க­ளி­லும் இந்து –முஸ்­லீம் என்று வேறு­ப­டுத்தி தேர்­தலை சந்­திக்­கி­றது. ஆனால் டில்­லி­யில் அதே பார­திய ஜனதா, மின்­சா­ரம், குடி­தண்­ணீர், வரை­மு­றைப்­ப­டுத்­தாத கால­னி­கள், பள்­ளிக் கூடங்­கள், மருத்­து­வ­ம­னை­கள் என்று பேச­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. தேர்­தலை சந்­திக்க கட்­சி­க­ளின் சாத­னை­களை பற்றி பேசும் அள­வுக்கு மாறி­யுள்­ளது. எங்­கள் அரசு நிறை­வேற்­றி­யுள்ள திட்­டங்­களை பற்றி, சாத­னை­களை பற்றி மக்­கள் பேசு­கின்­ற­னர். எனவே பா.ஜ,வுக்கு வேறு­வ­ழி­யில்லை. ஜாதி, மதம் அடிப்­ப­டை­யில் அர­சி­யல் நடக்­கும் நாட்­டில், இது மிகப்­பெ­ரும் மாற்­றம். முதன் முறை­யாக வளர்ச்சி, மேம்­பாடு பற்றி பேச வேண்­டி­ய­துள்­ளது.

கேள்வி: வாக்­கா­ளர்­கள் சாத­னை­களை பார்த்து வாக்­க­ளிப்­பார்­கள் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்: எங்­கள் அர­சின் சாத­னை­யால் மக்­கள் மகிழ்ச்­சி­யாக உள்­ள­னர். பா.ஜ.. காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­க­ளின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் கூட, இந்த முறை­யும் ஆம் ஆத்­மிக்கு வாக்­க­ளிப்­போம் என்­கின்­ற­னர். ஆம் ஆத்மி மீண்­டும் ஆட்­சிக்கு வரா­விட்­டால், மின்­சார கட்­ட­ணம் அதி­க­ரிக்­கும், அரசு பள்­ளி­கள் சிதி­ல­ம­டை­யும், மருத்­து­வ­ம­னை­கள் பழைய நிலைக்கே திரும்­பி­வி­டும் என்று அச்­சப்­ப­டு­கின்­ற­னர். எங்­கள் அர­சில் மக்­க­ளை­யும் ஒரு அங்­க­மாக உரு­வாக்­கி­யுள்­ளோம். நாங்­கள் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யுள்­ளோம். இல­வச வைபி மட்­டும் பாக்­கி­யுள்­ளது. அதை­யும் கூடிய விரை­வில் நிறை­வேற்றி விடு­வோம். (டில்லி அரசு இல­வச வைபி திட்­டத்­தை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.)

கேள்வி: மொகிலா க்ளினிக் என அழைக்­கப்­ப­டும் சில ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் மருத்­து­வர்­கள் இல்­லையே?

பதில்: ஒரு ஆரம்ப சுகா­தார நிலை­யம் கட்டி அது இயங்­கு­வ­தற்கு 15 முதல் 20 நாட்­கள் வேண்­டும். எதிர்­கட்­சி­கள் இது போன்ற கட்டி முடிக்­கப்­பட்ட ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களை போட்டோ எடுத்து, அங்கு டாக்­டர்­கள் இல்லை என்று பிர­சா­ரம் செய்­கின்­ற­னர். நான் நேர­டி­யாக ஆரம்ப  சுகா­தார நிலை­யங்­களை கண்­கா­ணிக்­கின்­றேன். அங்கு பணி­யு­ரி­யும் மருத்­து­வர்­க­ளுக்­காக வாட்ஸ் அப் குழு உரு­வாக்­கி­யுள்­ளேன். (அவ­ரது செல்­போ­னில் ஆம் ஆத்மி மொகிலா க்ளினிக் வாட்ஸ் அப் குழுவை காண்­பிக்­கின்­றார்.) இந்த நாட்­டின் வேறு எந்த முத­ல­மைச்­ச­ரா­வது இது போல் செய்­துள்­ள­னரா?

கேள்வி: சலுகை கட்­ட­ணத்­தில் மின்­சா­ரம், இல­வச தண்­ணீர் போன்­ற­வை­க­ளால் வாக்­கு­கள் கிடைக்­குமா?

பதில்: எது­ச­ரி­யான பொரு­ளா­தா­ரம்? ஒரு பக்­கம் நீங்­கள் பெரிய கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு சலு­கையை வாரி வழங்­கு­கின்­றீர்­கள். மற்­றொரு பக்­கம் சாமா­னி­ய­னில் வாழ்க்கை நெருக்­க­டிக்­குள்­ளா­கி­றது. அரசு பள்­ளி­க­ளின் தரம் உயர்ந்த பிறகு, தனி­யார் பள்­ளி­க­ளில் படிக்­கும் பல மாண­வர்­கள் அரசு பள்­ளி­க­ளுக்கு மாறி­யுள்­ள­னர். நாங்­கள் மருத்­து­வ­ம­னை­களை மேம்­ப­டுத்­தி­யுள்­ளோம். எல்­லா­வித மருந்­து­க­ளும், பரி­சோ­த­னை­க­ளும் இல­வ­சம். டில்­லி­யில் தான் மின்­சார கட்­ட­ணம் மிக குறைவு. தண்­ணீர் இல­வ­சம். பெண்­க­ளுக்கு இல­வச பஸ், மெட்ரோ பய­ணம். இவற்றை எல்­லாம் சேர்த்­தால், ஒரு குடும்­பம் மாதத்­திற்கு சரா­ச­ரி­யாக ரூ.5 ஆயி­ரம் மிச்­ச­மா­கும். வரு­டத்­திற்கு ரூ.60 ஆயி­ரம் மிச்­ச­மா­கும். 50 லட்­சம் குடும்­பங்­கள் வாழ்­வ­தாக எடுத்­துக் கொண்­டால், நாங்­கள் மக்­க­ளுக்கு ரூ.30 ஆயி­ரம் கோடி வழங்­கி­யுள்­ளோம். எனவே நாங்­கள் பொரு­ளா­தார ரீதி­யாக தேவையை அதி­க­ரித்­துள்­ளோம். இப்­போது நமது பொரு­ளா­தா­ரத்­தின் மிகப்­பெ­ரிய பிரச்னை என்­ன­வெ­னில், உற்­பத்தி செய்த பொருட்­கள் விற்­பனை ஆக­வில்லை என்­பதே. பொருட்­க­ளின் தேவையை அதி­க­ரிக்க செய்­வதை விட, சிறந்த பொரு­ளா­தா­ரம் என்ன உள்­ளது.

கேள்வி: இது சரி­யா­னதா? இல­வ­சங்­களை வாரி வழங்க பணம் எங்­கி­ருந்து வரு­கி­றது. இது திவால் நிலைக்கு கொண்டு போகும் என்­கின்­ற­னரே?

பதில்: இது சாத்­தி­யமே. எங்­கள் வரு­வாய் அதி­க­ரிக்­கும். முத­லில் மக்­கள், வியா­பா­ரி­கள், வர்த்­த­கர்­க­ளின் நம்­பிக்­கையை பெற­வேண்­டும். நான் வரு­மான வரித்­து­றை­யில் வேலை செய்­துள்­ளேன். அதிக அளவு வரி ஏய்ப்பு நடக்க கார­ணம், கஷ்­டப்­பட்டு சம்­பா­தித்த பணத்தை அர­சி­யல்­வா­தி­கள், அதி­கா­ரி­கள் அப­க­ரிக்­கின்­ற­னர் என்­ப­தா­லேயே. ஊழல் வரி ஏய்ப்­புக்கு கார­ண­மா­கி­றது. மக்­கள் அவர்­கள் கட்­டும் வரி சரி­யாக செலவு செய்­யப்­ப­டு­கின்­றது என்­பதை காணும் போது, அவர்­க­ளா­கவே வரி கட்­டு­வார்­கள். குறைந்த அளவு வரி­யும் கூட, அதிக வரி வசூ­லுக்கு கார­ண­மா­கும். இரண்­டை­யும் இரண்டு வரு­டத்­தில் செய்­துள்­ளோம். முன்பு வாட் வரி 12 சத­வி­கி­த­மாக இருந்­தது. அதை 5 சத­வி­கி­த­மாக குறைத்­தோம்.

நாங்­கள் அதி­ரடி சோத­னையை முழு­வ­து­மாக நிறுத்­தி­னோம். பயத்­தால் வரி கட்­டு­வதை விட, தானாக முன்­வந்து கட்ட வேண்­டும். 2010 முதல் 2014 வரை முதல்­வ­ராக ஷீலா தீட்­சித் இருக்­கும் போது, வரி வரு­வாய் ரூ.26 ஆயி­ரத்­தில் இருந்து, ரூ.31 ஆயி­ர­மாக அதி­க­ரித்­தது. நான் வாட் வரியை குறைத்த பிறகு, வரி வரு­வாய் ரூ.60 ஆயி­ரம் கோடி­யாக உயர்ந்­தது. நாங்­கள் வரு­டத்­திற்கு சரா­ச­ரி­யாக வரி வரு­வாயை ரூ.6 ஆயி­ரம் கோடி அதி­க­ரித்­துள்­ளோம். ஏனெ­னில் வரி கட்­டு­வது அதி­க­ரித்­தது. நாங்­கள் ஊழ­லை­யும் பெரு­ம­ளவு கட்­டுப்­ப­டுத்­தி­னோம். பெரிய காண்ட்­ராக்­டில் அதிக அளவு ஊழல் நடை­பெற்­றது. நாங்­கள் மேம்­பா­லம் கட்ட ரூ.325 கோடி செல­வா­கும் என மதிப்­பிட்­டதை, ரூ.250 கோடி­யில் முடித்­தோம். முன்பு ரூ.300 கோடிக்கு மதிப்­பி­டப்­ப­டும் மேம்­பா­லம் கட்டி முடிக்க ரூ.1,500 கோடி செல­வா­கும். ஏனெ­னில் கால­தா­ம­தம் ஆவ­தால் செல­வும் அதி­க­ரிக்­கும். நாங்­கள் செல­வை­யும்,நேரத்­தை­யும் மிச்­சப்­ப­டுத்­தி­யுள்­ளோம்.

கேள்வி: உங்­க­ளுக்கு ஏழை மக்­கள் மத்­தி­யில் அதிக செல்­வாக்கு உள்­ளதே….

பதில்: ஏழை­கள் மத்­தி­யில் மட்­டு­மல்ல, நடுத்­தர மக்­கள், உயர் நடுத்­தர மக்­கள் மத்­தி­யி­லும் செல்­வாக்கு உள்­ளது. நாங்­கள் அரசு பள்­ளி­களை மேம்­ப­டுத்­திய போது, உயர் நடுத்­தர மக்­கள் மத்­தி­யில் இருந்து தான் வர­வேற்பு இருந்­தது. அவர்­கள், “கெஜ்­ரி­வால் நீங்­கள் சாதித்­து­விட்­டீர்­கள்” நீங்­கள் உண்­மை­யி­லேயே பல­மான நாட்­டின் அஸ்­தி­வா­ரத்தை அமைத்து விட்­டீர்­கள் என்று கூறி­னார்­கள்.

கேள்வி: அங்­கீ­கா­ரம் இல்­லாத கால­னி­களை வரை­மு­றைப்­ப­டுத்த மத்­திய அரசு சட்­டம் இயற்­றி­யுள்­ளது. இத­னால் டில்­லி­யில் பா.ஜ.,வுக்கு சாத­க­மாக இருக்­குமா?

பதில்: மக்­கள் பா.ஜ.,வை நம்­ப­வில்லை. இது போன்ற பல சட்­டங்­கள் முன்பு வந்­துள்­ளன. ஆனால் மக்­கள் அங்­கீ­கா­ரம் இல்­லாத கால­னி­யில் உள்ள வீடு­களை அங்­கீ­க­ரிக்க வேண்­டும் என்­கின்­ற­னர். ஆனால் மத்­திய அரசு ஆறு மாதங்­க­ளுக்கு பிறகு அங்­கீ­கா­ரம் வழங்­கப்­ப­டும் என்­கின்­றது. அதா­வது சட்­ட­சபை தேர்­தல் முடிந்த பிறகு. இதே போல் முன்­னாள் முதல்­வர் ஷீலா தீட்­சித்­தும், “நாங்­கள் தேர்­த­லுக்கு பிறகு செய்­வோம். இப்­போது எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள்”­என்று கூறி­னார். தேர்­த­லுக்கு பிறகு மக்­கள் அவ­ரி­டம் சென்று கேட்ட போது, அடுத்த தேர்­தல் வரும் போது வாருங்­கள் என்­றார். இப்­போது பா.ஜ., 100 பேருக்கு அங்­கீ­கா­ரம் கொடுக்­கப்­போ­வ­தாக கூறு­கி­றது. இது போட்டோ எடுத்து விளம்­ப­ரம்­ப­ரப்­ப­டுத்­திக் கொள்­வ­தற்கே பயன்­ப­டும்.

கேள்வி: பஸ், மெட்ரோ ரயி­லில் பெண்­கள் இல­வ­ச­மாக பய­ணம் செய்­ய­லாம் என்­ப­தால் மகிழ்ச்­சி­யாக உள்­ள­னர். பெண்­க­ளின் பாது­காப்பு எப்­படி?

பதில்: நாங்­கள் தெரு­வி­ளக்­கு­க­ளை­யும். சிசி­டிவி கேமி­ராக்­க­ளை­யும் நிறு­வி­யுள்­ளோம். பஸ்­சில் பாது­கா­வ­லர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். எங்­க­ளால் முடிந்­ததை செய்­துள்­ளோம். பெண்­கள் பாது­காப்பை அர­சி­ய­லாக்க கூடாது. மத்­திய, மாநில அர­சு­கள் இணைந்து செயல்­பட வேண்­டும்.

கேள்வி: டில்லி யூனி­யன் பிர­தே­ச­மாக இருப்­ப­தால் ஆட்சி செய்ய கஷ்­ட­மாக உள்­ளதா? இதை எப்­படி சமா­ளிக்­கின்­றீர்­கள்?

பதில்: சட்­ட­ச­பை­யில் உள்ள 70 தொகு­தி­க­ளில் 67 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று, மக்­க­ளால் தேர்வு செய்­யப்­பட்ட அர­சுக்கு முடிவு எடுக்க அதி­கா­ரம் இல்லை. இது அர­சி­ய­ல­மைப்பு, ஜன­நா­ய­கத்­தின் மீதான தாக்­கு­தல் இல்­லையா? சென்ற வரு­டம் வரை ஒவ்­வொரு கோப்­பும் துணை நிலை ஆளு­ந­ரி­டம் சென்று ஒப்­பு­தல் பெற வேண்­டும். அவர் அங்­கீ­கா­ரம் தரு­வாரா இல்­லையா என்று காத்­தி­ருக்க வேண்­டும். இதில் அர­சி­யல் விளை­யா­டும். சிசி­டிவி கேமிரா பொருத்­து­வ­தற்­கான கோப்­பில் கையெ­ழுத்து பெற, நான் பத்து நாட்­கள் துணை நிலை ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் தர்ணா போராட்­டம் நடத்த வேண்­டி­ய­தி­ருந்­தது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக சுப்­ரீம் கோர்ட், எங்­கள் அரசு பல விஷ­யங்­க­ளில் முடிவு எடுக்க அதி­கா­ரம் வழங்­கி­யது. இத­னால் தான் கடந்த ஒரு வரு­டத்­தில் பல வேலை­கள் நடந்­துள்­ளன.

அதே நேரத்­தில் இன்­னும் அதி­கா­ரி­களை மாற்­றும் அதி­கா­ரம்  எனக்கு இல்லை. நான் மருத்­து­வ­ம­னை­கள், பள்­ளிக்­கூ­டங்­களை மேம்­ப­டுத்­தி­யுள்­ளேன். ஆனால் கல்வி, சுகா­தார செய­லா­ளர்­கள் யார் என்­பதை, எனது எதிர் கட்சி நிய­மித்­துள்ள துணை நிலை ஆளு­நர் தான்­மு­டிவு செய்­கின்­றார். எனது வேலை­களை முடிக்க நான் அதி­கா­ரி­க­ளி­டம் கெஞ்ச வேண்­டி­ய­துள்­ளது. அதி­கா­ரி­கள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கும் அதி­கா­ரம் கூட, துணை நிலை ஆளு­நர் வசமே உள்­ளது. நான் யாரை­யும் இட­மா­று­தல் கூட செய்ய முடி­யாது. இது பற்­றிய வழக்கு சுப்­ரீம் கோர்ட்­டில் நிலு­வை­யில் உள்­ளது.

டில்லி தலை­ந­கர் என்­ப­தால் சிறப்பு வாய்ந்­தது. இதன் நிர்­வா­கம் சுமூ­க­மாக இருக்க வேண்­டும். பல்­வேறு அமைப்­பு­கள் வசம் நிர்­வா­கம் இருக்க கூடாது. மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சி­டம் எல்லா அதி­கா­ரங்­க­ளும் இருக்க வேண்­டும்.

கேள்வி: மத்­திய அர­சும் தலை­ந­கர் டில்லி என்­ப­தால்,இவ்­வாறே கூறு­கின்­றதே?

பதில்: புது­டில்லி நக­ராட்சி பகு­தி­யில், தூத­ர­கங்­கள், பார்­லி­மென்ட், அமைச்­சர் பங்­க­ளாக்­கள், நார்த் பிளாக் போன்­றவை அடங்­கும். புது­டில்லி நக­ராட்சி பகு­திக்கு முழு மாநில அந்­தஸ்து வழங்க வேண்­டும். இந்த கோரிக்கை பதி­னைந்து வரு­டங்­க­ளாக மத்­திய அர­சி­டம் நிலு­வை­யில் உள்­ளது. எல்.கே.அத்­வானி உள்­துறை அமைச்­ச­ராக இருந்த போது, இதற்­கான மசோதா தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஆனால் அந்த மசோதா நிறை­வே­ற­வில்லை.

கேள்வி. டில்­லிக்கு முழு மாநில அந்­தஸ்து கோரிக்கை தேர்­த­லில் எதி­ரொ­லிக்­குமா?

பதில்: நாங்­கள் முழு மாநில அந்­தஸ்தை தொடர்ந்து வலி­யு­றுத்­து­வோம். காங்­கி­ரஸ். பார­திய ஜனதா ஆகி­யவை மாறி­விட்­டன.

கேள்வி: மகா­ராஷ்­டிரா தேர்­த­லுக்கு பிறகு, இனி பா.ஜ.,வை வெல்­ல­மு­டி­யாது என்ற தோற்­றம் உரு­வா­கி­யுள்­ளதே. டில்­லி­யில் எப்­படி?

பதில்: சென்ற முறை கூட பா.ஜ., ஒவ்­வொரு தேர்­த­லி­லும் வெற்றி பெற்­றது. ஆனால் டில்­லி­யில் மூன்று தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. இந்த முறை நிலைமை ஆம் ஆத்­மிக்கே சாத­க­மாக உள்­ளது. நாங்­கள் போதிய பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைப்­போம்.

கேள்வி: நீங்­கள் 2014ல் 33 சத­வி­கித வாக்­கு­கள் வாங்­கி­னீர்­கள். இது சென்ற லோக்­சபா தேர்­த­லில் 18 சத­வி­கி­த­மாக குறைந்து விட்­டதே?

பதில்: நாங்­கள் டில்­லி­யில் மட்­டுமே போட்­டி­யிட்­டோம். எங்­க­ளுக்கு ஏன் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று மக்­க­ளி­டம் சரி­யாக விளக்­க­வில்லை. அந்த தேர்­தலை பா.ஜ.,வுக்­கும், காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் இடை­யி­லான போட்­டி­யாக மக்­கள் பார்த்­த­னர். “நாங்­கள் உங்­க­ளுக்கு டில்லி சட்­ட­சபை தேர்­த­லில் வாக்­க­ளிப்­போம். தற்­ச­ம­யம் நீங்­கள் தேசிய மட்­டத்­தில் இல்லை” என்­ற­னர். சட்­ட­சபை தேர்­தல் வேறு மாதி­ரி­யா­னது. ஒடி­சா­வில் சட்­ட­சபை தேர்­த­லும், லோக்­சபா தேர்­த­லும் ஒரே சம­யத்­தில் நடை­பெற்­றது. ஆனால் மக்­கள் இரண்­டிற்­கும் வெவ்­வேறு மாதிரி வாக்­க­ளித்­த­னர். நாங்­கள் செய்­துள்ள வேலை­களை பார்த்து டில்லி வாக்­கா­ளர்­கள் வாக்­க­ளிப்­பார்­கள். இது அர­சுக்கு ஆத­ர­வான வாக்கு.

இவ்­வாறு பேட்­டி­யின் போது அர­விந்த் கெஜ்­ரி­வால் கூறி­னார்.

நன்றி: அவுட்­லுக் வார இத­ழில் பவா­ன–­விஜி அரோரா. பிரிதா நாயர்