அரசியல் மேடை: கமல் – ரஜினியின் புறக்கணிப்பு அரசியல்!

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019

நாட்டை நல்­வ­ழிப்­ப­டுத்த, மக்­க­ளுக்கு சேவை செய்ய அவ்­வப்­போது, சில தலை­வர்­கள் உரு­வாகி அர­சி­யல் கட்­சி­களை தொடங்கி ஆட்சி, அதி­கா­ரத்­திற்கு வரு­கி­றார்­கள். சில தலை­வர்­கள் தானே உரு­வா­கி­றார்­கள். சில தலை­வர்­கள் உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

தமி­ழ­கத்தை பொறுத்­த­வரை சுதந்­தி­ரத்­திற்கு பிறகு, ஏக இந்­தி­யா­வை­யும் ஆண்ட காங்­கி­ரஸ் கட்­சி­தான் இங்­கும் ஆட்சி அமைத்­தது. சுதந்­தி­ரப் போரில் பங்­கேற்ற மக்­கள் தொண்­டும், தேச சேவை­யுமே பிர­தா­ன­மா­கக் கொண்­டி­ருந்த ராஜாஜி, காம­ரா­ஜர் போன்ற தலை­வர்­கள் முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்று ஆட்சி நடத்­தி­னார்­கள். 1952, 57, 62 ஆகிய மூன்று பொதுத்­தேர்­தல்­க­ளில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தது.

20–ம் நூற்­றாண்­டின் தொடக்­கத்­தில் உரு­வான ஜஸ்­டிஸ் கட்சி பின்­னர் திரா­வி­டக் கட்­சி­யாக பரி­ம­ளித்து திரா­வி­டக் கழ­கம் எனும் பெய­ரில் பெரி­யார் ஈ.வெ.ரா. தலை­மை­யில் சமூக நல இயக்­க­மாக செயல்­பட்­டது. அதி­லி­ருந்து வெளி­யேறி 1949–ல் திமு­கவை தொடங்­கிய அண்­ணா­துரை அர­சி­யல் களத்­திற்கு வந்­தார். மொழி, இனம், திரா­விட நாடு என பல கொள்­கை­களை முன்­நி­றுத்தி அவ­ரும், அவ­ரது கட்­சி­யி­ன­ரும் பிரச்­சா­ரம் மேற்­கொண்­ட­னர். காங்­கி­ரஸ் அர­சின் மீது பல்­வேறு விமர்­ச­னக் கருத்­துக்­களை தொடர்ந்து பேசி­யும் எழு­தி­யும் வந்­த­னர். மக்­கள் பிரச்­ச­னைளை முன்­நி­றுத்தி பல போராட்­டங்­களை நடத்­தி­னர். கொஞ்­சம், கொஞ்­ச­மாக பட்டி தொட்டி எங்­கும் கட்­சி­யின் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­தி­னர். அண்­ணா­துரை, நெடுஞ்­செ­ழி­யன், எம்.ஜி.ஆர், கரு­ணா­நிதி, அன்­ப­ழ­கன், மதி­ய­ழ­கன், என்.வி.நட­ரா­ஜன், சத்­திய வாணி முத்து என பல முன்­ன­ணி­யி­ன­ரின் பேச்­சும் எழுத்­தும் மக்­களை திமுக ஆத­ரவு நிலைக்கு கொண்டு வந்­தது. அதன் விளை­வாக 18 ஆண்­டு­க­ளுக்கு பிறகு 1967–ம் ஆண்டு திமுக ஆட்­சிக்கு வந்­தது. அண்­ணா­துரை முத­ல­மைச்­ச­ரா­னர். அவ­ரது மறை­வுக்கு பிறகு திமுக தலைமை பொறுப்­பேற்ற கரு­ணா­நிதி, திரா­வி­டர் கழக காலத்­தி­லி­ருந்தே அர­சி­யல் பொது­வாழ்­வில் இருந்­தார். தன்­னு­டைய எழுத்­தா­லும் பேச்­சா­லும் அன்­றைய இளைய சமு­தா­யத்தை ஈர்த்­தி­ருந்­தார். பல ஆண்­டு­கள் அர­சி­யல் களப்­ப­ணி­யில் இருந்த பிற­கு­தான் ஆட்சி, கட்சி தலைமை பொறுப்­புக்கு வர­மு­டிந்­தது. அவரை விட­வும் மூத்த தலை­வர்­கள் இருந்­தா­லும் எம்.ஜி.ஆர். போன்­ற­வர்­கள் துணை­யு­டன் தலைமை பொறுப்­புக்கு வந்­தார்.

திமுக.வில் அதன் நிறு­வன தலை­வர் அண்­ணாவே மதித்து போற்­றத்­தக்க முன்­ன­ணிப் பிர­மு­க­ராக இருந்த எம்.ஜி.ஆர். அந்த கால­கட்­டத்­தி­லேயே தனித்த செல்­வாக்­கு­மிக்­க­வ­ராக இருந்­தார். திரைப்­பட துறை­யில் சம்­பா­தித்த பணத்­தின் பெரும்­ப­கு­தியை ஏழை, எளிய மக்­க­ளுக்­கும், பல்­வேறு தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் வாரி வழங்கி, பெரும்­பான்­மை­யான மக்­க­ளின் ஆத­ரவை பெற்­றி­ருந்­தார். அத­னால்­தான் திமு­க­வில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தும் அவர் தொடங்­கிய அண்ணா திமுக வெகு வேக­மாக வளர்ச்சி பெற்­றது. தொடர் வெற்­றி­களை பெற்­றது. 1972–ல் தொடங்­கப்­பட்ட அதி­முக 1977, 80, 84 என மூன்று சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லில் தொடர் வெற்­றியை பெற்­றது. அதன் நிறு­வ­னத் தலை­வர் எம்.ஜி.ஆர். முத­ல­மைச்­சர் பெறுப்­பேற்று மக்­கள் ஆத­ர­வு­டன் சுமார் 11 ஆண்­டு­கள் ஆட்சி நடத்­தி­னார்.

எம்.ஜி.ஆர். மறை­வுக்கு பிறகு, அவ­ரால் அர­சி­ய­லுக்கு அழைத்து வரப்­பட்ட ஜெய­ல­லிதா சுமார் 28 ஆண்­டு­கள் அண்ணா திமுக.வை காத்து வளர்த்­தெ­டுத்­தார். சினிமா பிர­ப­லம் என்­ப­தை­யும் தாண்டி, எம்.ஜி.ஆரின் வாரிசு என்ற அடை­யா­ளம் அவ­ரது வளர்ச்­சிக்கு பெரி­தும் கை கொடுத்­தது. அது­மட்­டு­மல்ல, 1988, 89 கால­கட்­டங்­க­ளில் தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து மக்­களை சந்­தித்து ஆத­ரவு திரட்­டி­னார். பல்­வேறு எதிர்ப்­பு­களை சந்­தித்து, எதிர்­நீச்­சல் போட்­டுத்­தான் அர­சி­ய­லில் படிப்­ப­டி­யாக முன்­னே­றி­னார்.

காம­ரா­ஜர், அண்­ணா­துரை, கரு­ணா­நிதி, எம்.ஜி.ஆர். ஜெய­ல­லிதா என இவர்­கள் யாரும் இன்ஸ்­டண்ட் தலை­வர்­கள் இல்லை. தேர்­த­லில் அதி­ச­ய­மும், அற்­பு­த­மும் நடக்­கும் என்று எதிர் பார்த்­த­வர்­கள் இல்லை. மக்­க­ளுக்­கான சேவை­யில் பல ஆண்­டு­கள் தங்­களை அர்ப்­ப­ணித்­த­வர்­கள், ஆட்சி, அதி­கா­ரத்­திற்கு வரு­வோம் என்ற எண்­ணம், சிந்­த­னை­யின்றி பொதுத்­தொண்­டில் ஈடு­பட்­ட­வர்­கள். மக்­க­ளின் எண்­ணங்­க­ளுக்கு, உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து அவர்­க­ளோடு பய­ணப்­பட்­ட­வர்­கள்.

இப்­படி மிகப்­பெ­ரும் ஆளு­மை­க­ளாக இருந்த இந்த தலை­வர்­கள் இல்­லாத நிலை­யில் ‘அர­சி­யல் வெற்­றி­டம்’ உரு­வா­கி­யி­ருக்­கி­றது அதை நிரப்ப போகி­றோம் என இரண்டு உச்ச நட்­சத்­தி­ரங்­கள் இப்­போது களம் இறங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அதில உலக நாய­கன் கமல் தைரி­ய­மாக அர­சி­யல் களத்­திற்கு வந்து ஒரு தேர்­த­லை­யும் தில்­லாக சந்­தித்து விட்­டார்.

ஆனால், சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்தோ இதோ அதோ என இன்­னும் போக்­குக் காட்டி வரு­கி­றார். நிச்­ச­யம் அர­சி­ய­லுக்கு வரு­வேன் என்று சொல்லி ஓராண்டு கடந்­து­விட்­டது. நடை­பெற்று முடிந்த நாடா­ளு­மன்ற தேர்­த­லில் போட்­டி­யில்லை என்று கூறி ரசி­கர் மன்­றத்தை மக்­கள் மன்­ற­மாக மாற்றி அர­சி­யல் அஸ்­தி­ர­வா­ரத்தை பலப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்­கி­னார். அந்த நிலை­தான் இன்­ற­ள­வும் தொடர்­கி­றது. அர­சி­யல் கட்சி ஆரம்­பிக்­கா­ம­லேயே அவ்­வப்­போது ‘கருத்­து’ச் சொல்லி அத­க­ளப்­ப­டுத்தி வரு­கி­றார். இப்­போது உள்­ளாட்­சித் தேர்­த­லில் யாருக்­கும் ஆத­ரவு இல்லை. ரஜினி மக்­கள் மன்­ற­மும் போட்­டி­யி­டாது என்று அறி­விப்­புச் செய்து விட்டு, அப்­படி தேர்­த­லில் யாரா­வது ரஜினி பெய­ரையோ கொடி­யையோ பயன்­ப­டுத்­தி­னால் சட்­டப்­படி நட­வ­டிக்கை பாயும் என பயம் காட்­டு­கி­றார்.

1996 – 2001 உள்­ளாட்சி தேர்­தல்­க­ளி­லேயே ரஜினி ரசி­கர்­கள் பலர் போட்­டி­யிட்டு வார்டு கவுன்­சி­லர்­க­ளாக வந்­துள்­ள­னர்.  இப்­போது அர­சி­யல் கட்சி தொடங்­கும் நிலை­யில், தங்­க­ளுக்­கான  செல்­வாக்கை நிரூ­பிக்க, ஆங்­காங்கே வார்­டு­க­ளில் போட்­டி­யிட்டு வெற்றி பெற நிச்­ச­யம் விரும்­பு­வார்­கள், ஆசைப்­ப­டு­வார்­கள். அவர்­கள் ஆசை­யில் மண்ணை அள்ளி போட்டு விட்­டார்­கள்.

திடீ­ரென 2021 சட்­ட­ச­பைத் தேர்­த­லில் 234 தொகு­தி­க­ளி­லும் ரசி­கர்­களை களம் இறக்கி அமோக வெற்றி பெற்று ஆட்­சியை பிடிக்­கும் அதி­ச­யத்தை, அற்­பு­தத்தை நிகழ்த்த ரஜினி திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார் என அவ­ரது ரசி­கர்­க­ளும், ஆத­ர­வா­ளர்­க­ளும், சில அறிவு ஜீவி­க­ளும் கூட சொல்லி வரு­கி­றார்­கள். இவர்­கள் எண்­ணம் ஈடேற இறை­வனை பிரார்த்­திப்­போம்! பக­வான் ராக­வேந்­தர் துணை நிற்­கட்­டும் ‘பாபா’­வின் ஆசி கிட்­டட்­டும்!

மக்­கள் நலன் கருதி ரஜி­னி­யும் நானும் கை கோர்ப்­போம் என பேசி வரும் கம­லும் இந்த உள்­ளாட்­சித் தேர்­தலை புறக்­க­ணித்­தது அவ­ரது அர­சி­யல் பக்­கு­வ­மற்ற தன்­மை­யையே காட்­டு­கி­றது. மாநி­லம் முழு­தும் சுமார் 1 லட்­சத்து 32 ஆயி­ரம் பொறுப்­பு­க­ளுக்கு நடை­பெ­றும் தேர்­தல் இது. இந்த தேர்­த­லில் போட்­டி­யிட்­டால் மாவட்­டத்­துக்கு 50 பேர், 100 பேர் வார்டு கவுன்­சி­லர்­க­ளாக மய்­யத்து தம்­பி­கள் வெற்­றி­பெற வாய்ப்பு இருக்­கும். அப்­படி 1000 பேர், இரண்­டா­யி­ரம் பேர் பொறுப்­பு­க­ளுக்கு வரும்­போது, எதிர்­வ­ரும் 2021 பொதுத்­தேர்­த­லுக்கு அது உத­வி­யாக இருக்­கும். கட்சி ஆரம்­பிக்­காத ரஜி­னி­தான் புறக்­க­ணிக்­கி­றார் என்­றால், களத்­தில் உள்ள கம­லும் புறக்­க­ணித்து ‘மாடு போகிற வழி­யி­லேயே கயி­ரும் போகும்’ என்­பது போல, இப்­போதே புறக்­க­ணிப்­பில் கை கோர்க்­கத் தொடங்­கி­விட்­ட­னர். இவர்­களை சட்­ட­மன்ற தேர்­த­லில் மக்­கள் புறக்­க­ணிக்­கா­மல் இருந்­தால் சரி.