துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 59

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019

கல்வெட்டுகள் நிறைந்த கலைக்கோயில்..!

தமி­ழ­கத்­தில் புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் கொளத்­தூர் வட்­டத்­தில் குடு­மி­யான்  மலை என்ற பிர­ப­ல­மான ஊர் உள்­ளது. முற்­கா­லக் கல்­வெட்­டுக்­க­ளில் திரு­நற்­குன்­றம் என்­றும், பிற்­கா­லத்­தில் சிகா நல்­லூர் என்­றும் இந்த ஊரின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குடு­மி­யான் மலை உச்­சி­யில் சுப்­பி­ர­ம­ணி­யர் திருக்­கோ­யில் ஒன்று அமைந்­துள்­ளது. இப்­ப­கு­தி­யில் 120க்கும் மேற்­பட்ட புரா­த­னக் கல்­வெட்­டுக்­கள் உள்­ளன.

சுப்­பி­ர­ம­ணி­யர் கோயி­லுக்கு செல்­லும் மலை­யின் அடி­வா­ரத்­தில் கிழக்கு பகு­தி­யில் அகி­லாண்­டே­சு­வரி உட­னுறை சிகா­னந்­தர் கோயில் உள்­ளது. இக்­கோ­யி­லின் முன்­பு­றம் ஆயி­ரம்­கால் மண்­ட­பம் உள்­ளது. இதன் மையப்­ப­கு­தி­யில் உள்ள சிறிய அள­வி­லான தூண்­க­ளில் வானர வீரர்­கள், ராவ­ணன் மற்­றும் பல கட­வுள் சிற்­பங்­கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன.

இதை­ய­டுத்து பாண்­டி­யர் காலச் சிற்ப வேலைப்­பாட்­டு­டன் கூடிய சபா மண்­ட­பம் அமைந்­துள்­ளது. இங்கு வெண்­க­லத்­தா­லான நட­ரா­ஜர் சிலை பிர­தா­ன­மாக உள்­ளது. இதை அடுத்து, பிற்­கால சோழர் காலத்து மாமண்­ட­பம் ஒன்­றும் எழி­லுற அமைந்­தி­ருக்­கி­றது. இங்கு விநா­ய­கர், முரு­கன் மற்­றும் சைவ சம­யக்­கு­ர­வர்­க­ளின் வெண்­க­லச் சிலை­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. மாமண்­ட­பத்தை கடந்­த­தும் கர்ப்­ப­கி­ர­கம் அமைந்­தி­ருக்­கி­றது. இது பல­முறை புதுப்­பிக்­கப்­பட்­ட­தாக கல்­வெட்­டு­கள் தெரி­விக்­கின்­றன. இங்கு மூன்று பிர­கா­ரங்­கள் உள்­ளன. இதன் நடுப்­பி­ர­கா­ரத்­தின் தென் மேற்கு பகு­தி­யில் சிறிய அணி­யொட்­டிக் கல்­மண்­ட­பம் ஒன்­றுள்­ளது.

 வடக்­கில் அகி­லாண்­டே­சு­வரி கோயி­லும், வெளிப்­பி­ரா­கா­ரத்­தின் தென்­பா­கத்­தில் திருக்­கு­ள­மும், மேற்கு பாகத்­தில் மேலைக் கோயில் எனப்­ப­டும் குகைக் கோயி­லும் சிறப்­புற அமைந்­துள்­ளன. இந்த பகு­தி­யில் சுந்­தர நாயகி அம்­மன் கோயில், கண­பதி கோயில் ஆகி­ய­வை­யும் உள்­ளன.  குகைக் கோயி­லுக்கு பின்­பு­றத்­தில் பாறை­யில் இரண்டு பிள்­ளை­யார் சிற்­பங்­கள் அழ­குற செதுக்­க­பட்­டுள்­ளன. இந்த சிற்­பங்­க­ளுக்கு இடையே 78–ம் நூற்­றாண்டை சேர்ந்த இசைக் கலைக்­கல்­வெட்டு உள்­ளது. ‘சித்­தம் நம­சி­வாய’ எனத் தொடங்­கும் இக்­கல்­வெட்­டு­க­ளில் ராகத்­துக்கு ஒரு பிரிவு என ஏழு பிரி­வு­கள், மொத்­தம் முப்­பத்­தெட்டு வரி­க­ள­டங்­கி­ய­தாக உள்ள இந்த இசைக்­கல்­வெட்டை ‘பரம மாகே­சு­வ­ரன்’ என்ற குறு­நில மன்­னன் எழுப்­பி­ய­தாக தெரி­கி­றது. இன்­ற­ள­வும் கூட இசை ஆராய்ச்­சிக்கு பயன்­த­ரக்­கூ­டிய அள­விற்கு நான்­காம் நூற்­றாண்­டுக்­கும் 13–ம் நூற்­றாண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­திய இசை பற்­றிய குறிப்­பு­கள் இக்­கல்­வெட்­டுக்­க­ளில் இடம் பெற்­றி­ருப்­பது சிறப்பு. இது­போன்ற கல்­வெட்டு இங்கு மட்­டுமே இருப்­பது இன்­னும் கூடு­தல் சிறப்பு.

குடு­மி­யான் மலை­யின் தெற்­கில் தம்­பிக்­கி­ணறு என்­றும் மேற்­கில் அண்­ணன் கிணறு என்­றும் இரு கிண­று­கள் உள்­ளன. மலைக்­கோ­யி­லின் கோபு­ரப் பகு­தி­யில் கூட நிறைய கல்­வெட்­டுக்­கள் உள்­ளன.

குடு­மி­யான் மலைக் கோயி­லின் மிகப்­ப­ழைய பகு­தி­யாக மேலைக்­கோ­யில் கரு­தப்­ப­டு­கி­றது. இது கல்­வெட்­டுக்­க­ளில் திரு­மேற்­றளி என்று குறிக்­கப்­பட்­டுள்­ளது. இது 7–ம் நூற்­றாண்­டில் மகேந்­திர வர்­மன் காலத்­தில் புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு அடுத்­த­தா­கவே சிகா­னந்­தர் கோயில் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தெரி­கி­றது. இக்­கோ­யில்­க­ளுக்கு இருக்கு வேளிர் மர­பின் இள­வ­ர­சர்­கள், இள­வ­ர­சி­கள், சோழ­நாட்டு மன்­னர்­கள், பாண்­டிய நாட்டு அர­சர்­கள் பல­ரும் கொடை­கள் வழங்­கி­யி­ருப்­ப­தாக கல்­வெட்­டு­கள் கூறு­கின்­றன.

சோழர்­கால மற்­றும் சாளுக்­கி­யர் கால ஆட்­சி­க­ளின் போது குடு­மி­யான்­மலை சிறப்­பு­மிக்க, முக்­கிய நக­ர­மாக இருந்­துள்­ளது. இங்கு படை­க­ளின் முகா­மும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. குகைக் கோயி­லுக்கு முன்­னாள் உள்ள மாமண்­ட­பம் முத­லாம் குலோத்­துங்க சோழர் காலத்­தில் கட்­டப்­பட்­ட­தாக கல்­வெட்­டுக்­கள் தெரி­விக்­கின்­றன.

இது­போல, இரண்­டாம் பாண்­டி­யப் பேர­ர­சின் போதும் குடு­மி­யான் மலைப் பகுதி மிக­வும் சிறப்பு வாய்ந்த நிலை­யில் இருந்­துள்­ளது.

முற்­கா­லச் சோழர்­க­ளின் கல்­வெட்­டுக்­கள் எல்­லாம் மேலைக் கோயி­லி­லும், நடுப்­பி­ர­கா­ரத்­தி­லுமே காணப்­ப­டு­கின்­றன. சிகா­னந்­தர் கோயி­லில் அத்­த­கைய கல்­வெட்­டுக்­கள் இல்­லா­த­தால், இக்­கோ­யில் பின்­னர்­தான் புதுப்­பிக்­கப்­ப­டி­ருக்க வேண்­டும் என தெரி­கி­றது. முத­லாம் மாற­வர்ம சுந்­தர பாண்­டி­யன்­தான் சிகா­னந்­தர் கோயிலை புதுப்­பித்­த­தாக கல்­வெட்­டுக்­கள் தெரி­விக்­கின்­றன. மாற­வர்­ம­ருக்கு பிறகு வந்த பாண்­டிய அர­சர்­கள் காலத்­தில் 13–ம் நூற்­றாண்­டின் இடைப்­பட்ட பகு­தி­யில் பழைய மண்­ட­பங்­கள் புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த கால­கட்­டத்­தில் தான் சுப்­பி­ர­ம­ணி­யர் கோயில் கட்­டப்­பட்­டுள்­ளது. இங்கு ஒரே­யொரு கல்­வெட்­டு­தான் உள்­ளது.

தற்­போது நாம் காணும் சிகா­னந்­தர் கோயி­லின் கர்ப்­பக்­கி­ர­க­மும் அர்த்த மண்­ட­மும், 15–ம் நூற்­றாண்­டில் புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்­னர் மதுரை பகு­தியை ஆண்ட நாயக்க மன்­னர்­க­ளின் ஆட்­சிக் காலத்­தி­லும் குடு­மி­யான் மலைப் பகு­தி­யில் புதிய கோபு­ரங்­க­ளும், மண்­ட­பங்­க­ளும் கட்­டப்­பட்­ட­து­டன் ரதங்­க­ளும் உரு­வாக்­கப்­பட்­ட­தாக, அந்த பகு­தி­யில் உள்ள கல்­வெட்­டுக்­கள் மூலம் நாம் அறிய முடி­கி­றது.