பலரின் பசியை போக்கும் குழந்தை தொழிலாளி

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019

நான் குழந்தை தொழி­லாளி. சிறு வய­தில் ஹைத­ரா­பாத்­தி­லும், அரு­கில் உள்ள இடங்­க­ளி­லும் கட்­டம் கட்­டும் இடங்­க­ளில் வேலை பார்த்­துள்­ளேன் என்­கின்­றார் மல்­லிஸ்­வர் ராவ் (26). இவர் குழந்தை தொழி­லா­ளி­யாக இருந்து வாழ்க்­கை­யில் முன்­னே­றி­ய­து­டன், இன்று பல­ரின் வாழ்க்­கைக்கு துணை­யா­க­வும் உள்­ளார்.

மல்­லிஸ்­வர் ராவ் நடத்­தும் ‘உணவை வீணாக்­கா­தீர்­கள்’ (don’t waste food) என்ற அமைப்பு ஹைத­ரா­பாத்­தி­லும், அதனை சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் கூடு­த­லாக உள்ள உணவை சேக­ரித்து, ஏழை­க­ளுக்கு விநி­யோ­கிக்­கி­றது. தின­சரி இரண்­டா­யி­ரம் பேருக்­கும் அதி­க­மா­னோ­ரின் பசியை போக்­கு­கி­றது. இவ­ரது சேவையை பாராட்டி 2018ம் வரு­டத்­திய இந்­திய இளை­ஞர் முன்­மா­திரி விருது, ராஷ்­டி­ரிய குரோவ் விருது உட்­பட 26 விரு­து­களை இவ­ருக்கு வழங்கி கௌர­வித்­துள்­ள­னர்.

நான் நிஜா­மா­பாத்­தில் ஏழை குடும்­பத்­தில் பிறந்­தேன். சிறு வய­தி­லேயே சுய­மாக உழைத்து வாழ வேண்­டும். முடிந்­த­வரை குடும்­பத்­திற்கு உதவி செய்ய வேண்­டும் என்­பதை உணர்ந்­தேன் என்­கின்­றார் மல்­லிஸ்­வர் ராவ். இவர் மீது பிர­பல சமூக சேவகி ஹேம­லதா லாவ­னின் கவ­னம் பதிந்­த­வு­டன், வாழ்க்­கையே தலை­கீ­ழாக மாறி­விட்­டது. “அவர் என்னை தெரு­வில் பார்த்து அழைத்­துச் சென்று கல்வி கற்­கும் வாய்ப்பை கொடுத்­தார். இது என் வாழ்க்­கை­யையே அடி­யோடு  மாற்­றி­விட்­டது” என்று நினைவு கூறு­கின்­றார்.

ஹேம­லதா லாவா­னி­யும், அவ­ரது கண­வ­ரும் இணைந்து நடத்­திய ‘சம்ஸ்­கார் ஆஷ்­ரம் வித்­யா­ல­யத்­தில்’ மல்­லிஸ்­வர் ராவ் படித்­தார். 2008ல் ஹேம­லதா கால­மா­கும் வரை அங்­கேயே இருந்­தார். “அந்த பள்­ளிக்­கூ­டத்­தில் இருந்த சூழ்­நிலை எங்­க­ளுக்கு எல்­லாம் வித்­தி­யா­ச­மாக இருந்­தது. அங்கு படிக்­கும் மாண­வர்­கள் பல்­வேறு பின்­தங்­கிய சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். நாங்­கள் எல்­லோ­ரும் ஒன்­றாக வளர்ந்­தோம். என்­னு­டன் பாலி­யல் தொழி­லா­ளர்­கள், தேவ­தா­சி­க­ளின் குழந்­தை­க­ளும் ஒன்­றாக படித்­த­னர். நாங்­கள் விரும்­பிய பாடத்­தில் படிக்க அனு­ம­திக்­கப் பட்­டோம்” என்­கின்­றார். அங்கு படித்­த­தன் பய­னாக வாழ்க்­கை­யில் எதை­யா­வது பய­னுள்­ள­தாக செய்ய வேண்­டும். சமு­தா­யத்­திற்கு சேவை செய்ய வேண்­டும் என்று மல்­லிஸ்­வர் ராவ் முடிவு செய்­தார்.  

அந்த பள்­ளி­யில் இருந்து வெளி­யே­றி­ய­வு­டன், காச­நோய் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும் ஆஸ்­ர­மத்­தில் வேலைக்கு சேர்ந்­தேன். இது எனது குடும்ப பொரு­ளா­தார நிலையை பலப்­ப­டுத்த உத­வி­யது. இங்கு சில­கா­லம் வேலை செய்த பின், உணவு தயா­ரித்து வழங்­கும் கேட்­ட­ரிங் நிறு­வ­னத்­தில் வேலைக்கு சேர்ந்­தேன். அங்கு வேலை செய்த போது, அதிக அளவு உணவு வீணா­வதை நேரில் கண்­டேன். நான் சொந்த ஊரில் இருந்து பிழைப்பு தேடி ஹைத­ர­பாத்­திற்கு வந்த போது பசி­யு­டன் பிளாட்­பா­ரத்­தில் படுத்து தூங்­கி­யதை நினைவு கூர்ந்­தேன். அப்­போது சாப்­பிட பணம் இல்லை. அப்­போது பட்ட கஷ்­டம் மறக்­கா­மல் நினை­வில் இருந்­தது என்று நினைவு கூறும் மல்­லிஸ்­வர் ராவ், இது போல் பட்­டி­னி­யு­டன் இருப்­ப­வர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்­டும் என்ற எண்­ணத்­தில், 2012ல் உரு­வாக்­கி­ய­து­தான் உணவை வீணாக்­கா­தீர்­கள் அமைப்பு.

சில நண்­பர்­க­ளு­டன் இணைந்து, மல்­லிஸ்­வர் ராவ் ஹாத­ரா­பாத்­தில் உணவு மிச்­ச­முள்ள இடங்­க­ளுக்கு பைக­ளு­டன் செல்­கின்­றார். அங்­கி­ருந்து பெற்ற உணவை தேவை­யா­ன­வர்­க­ளுக்கு கொடுக்­கின்­றார். “நாங்­கள் சிறிய அள­வில் தொடங்­கி­னோம். இப்­போது பெரிய அள­வில் வளர்ந்­துள்­ளது. பல தொண்­டர்­க­ளின் உத­வி­யு­டன் தின­சரி இரண்­டா­யி­ரம் பேருக்கு உணவு வழங்கி வரு­கின்­றோம் என்று கூறு­கின்­றார் மல்­லிஸ்­வர் ராவ். இந்த இயக்­கம் டெல்லி, ரோதக், டேரா­டூன் ஆகிய நக­ரங்­க­ளி­லும் விரி­வு­ப­டுத்­தி­யுள்­ள­னர். தின­சரி பத்­தா­யி­ரத்­திற்­கும் அதி­க­மா­னோ­ரின் பசியை போக்கி வரு­கின்­ற­னர்.

இவர்­கள் ஆரம்­பத்­தில் விருந்து,திரு­ம­ணம் போன்ற சுப­கா­ரிய நிகழ்ச்­சி­கள் எங்கு நடக்­கின்­றது என்­பதை பார்த்து, அங்கு சென்று மீத­மா­கும் உண­வு­களை சேக­ரித்து விநி­யோ­கித்­த­னர். தற்­போது சமூக வலைத்­த­ளங்­கள் வந்த பிறகு, உணவு சேக­ரிப்­பது எளி­தா­கி­விட்­டது.

“நாங்­கள் பேஸ்­புக் நடத்­து­கின்­றோம். அதில் மக்­கள் தொடர்பு கொண்டு மீத­மா­கும் உணவை எங்கு வந்து எடுத்­துக் கொள்ள வேண்­டும் என்று கூறு­கின்­ற­னர். அங்கு சென்று சேக­ரிக்­கின்­றோம். இது நாங்­கள் செயல்­பட எளி­தா­கி­யுள்­ளது. உணவு விடு­தி­கள், மற்ற நிகழ்ச்­சி­கள், சிலர் வீட்­டில் விருந்­துக்கு பிறகு மீத­மா­கும் உணவை எடுத்­துச் செல்­லும்­படி கூறு­கின்­ற­னர். வார கடைசி விடு­முறை நாட்­க­ளில் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தில் வேலை செய்­ப­வர்­கள் உதவி செய்­கின்­ற­னர். சில நாட்­க­ளில் யாரும் இல்­லை­யெ­னில், நானே தனி­யாக உணவை விநி­யோ­கிக்­கின்­றேன் என்று மல்­லிஸ்­வர் ராவ் தெரி­வித்­தார்.

நன்றி: பெட்­டர் இந்­தியா இணை­ய­த­ளத்­தில் வித்யா ராஜா.