ஜெர்­ம­னி­ய­ராக மாறும் அமெ­ரிக்­கர்

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019

ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரி­டம் இருந்து எலும்பு மஜ்ஜை தான­மாக பெற்ற அமெ­ரிக்­க­ரின் உடல் ஜெர்­ம­னி­யா­ரின் உடலை போன்று மாறி வரும் ஆச்­ச­ரி­யம் நிகழ்ந்­துள்­ளது.

நெவா­டா­வைச் சேர்ந்­த­வர் கிரிஸ் லாங். இவர் ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரி­டம் இருந்து எலும்பு மஜ்ஜை தான­மாக பெற்­றார். அதன் பிறகு கிரிஸ் லாங் டிஎன்ஏ.,வை சோதித்­த­தில், அவர் சிறிது சிறி­தாக ஜெர்­ம­னி­ய­ராக மாறி வரு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவ­ரது மார்பு,  தலை முடி மட்­டுமே மாறா­மல் பழைய மாதிரி உள்­ளது. அவ­ரது ரத்­தம் மட்­டுல்ல, விந்­த­ணு­வும் கூட ஜெர்­மா­னி­யா­ராக மாறி வரு­வதை அறிந்த கிரிஸ் லாங், நான் காணா­மல் போய் வேறு ஒரு­வ­ராக மாறி வரு­வது, எனக்கே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது என்று கூறி­யுள்­ளார். இரத்த புற்று நோயால் பாதிக்­கப்­பட்டு இருந்த கிரிஸ் லாங்­கிற்கு, ஜெர்­ம­னி­யைச் சேர்ந்­த­வர் எலும்பு மஜ்ஜை தான­மாக கொடுத்­தார்.