ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தண்­ணீர் பஞ்­சம்

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019


ஆஸ்­தி­ரே­லிய அரசு தண்­ணீரை பயன்­ப­டுத்த பல கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது. கிரேட்­டர் சிட்னி, ப்ளு மவுண்­டன்ஸ், இல்­லா­வாரா ஆகிய பகு­தி­க­ளில் மக்­கள் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை தோட்­டத்­திற்கு தண்­ணீர் பாய்ச்­சக்­கூ­டாது.

வாக­னங்­களை கழுவ இரண்டு வாளி தண்­ணீர் மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்­டும். நீச்­சல் குளத்­தில் தண்­ணீர் நிரப்ப கூடாது. அப்­படி நிரப்ப வேண்­டும் எனில் அனு­மதி பெற வேண்­டும். இதனை மீறி­னால் 150 டாலர்­கள் வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­டும். வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு 500 டாலர் வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­டும் என்று ஆஸ்­தி­ரே­லிய அரசு அறி­வித்­துள்­ளது. தண்­ணீர் தட்­டுப்­பாடு ஒரு புறம், மறு புறம் வெப்­பம் அதி­க­ரித்து வரு­கி­றது. வெப்­பம் 40 டிகிரி செல்­சி­யஸ் வரை அதி­க­ரித்­துள்­ளது. வெப்­பம் அதி­க­ரிப்­ப­தால் காட்­டுத் தீ ஏற்­ப­டு­கின்­றன.

நியு சவுத் வேல்ஸ் பகு­தி­யில் மட்­டும் நூறு முறை காட்­டுத் தீ ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு பரு­வ­நிலை மாற்­றமே கார­ணம் என்­கின்­ற­னர் விஞ்­ஞா­னி­கள். அதிக வெப்­பத்­தின் கார­ண­மாக வறட்சி ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறு­கின்­ற­னர்.