பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2019 09:53

சென்னை,         

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று (டிசம்பர் 11ம் தேதி) எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் டீசல் விலை, தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தன. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் விலைகள் சந்தித்தன.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 11ம் தேதி) பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.77.97க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல், விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.69.81க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.