நயன் பாணியில் ஆல்யா!

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2019

நயன்­தாரா பாணியை பின்­பற்­றியி ருக்­கி­றார் ‘ராஜா ராணி’ புகழ் ஆல்யா மானசா. எந்த விஷ­யத்­தில் தெரி­யுமோ? பச்சை குத்­து­கிற விஷ­யத்­தில்!

  கலா மாஸ்­டர் டைரக்ட் செய்து கலை­ஞர் டிவி­யில் ஒளி­ப­ரப்­பான ‘மானாட மயி­லாட’ டான்ஸ் ரியா­லிட்டி ஷோ 10வது சீச­னில் ஒரு டான்ஸ் கலை­ஞ­ராக கால் பதித்­த­வர், ஆல்யா மானசா. அதில் அவ­ரும் மானஸ் என்­ப­வ­ரும் ஜோடி சேர்ந்து டான்ஸ் ஆடி­னார்­கள். இயற்­கை­யா­கவே ஆல்­யா­வுக்கு டான்ஸ் என்­றால் ரொம்ப உயிர். அத­னால், இந்த நிகழ்ச்­சிக்கு பிறகு பல மேடை­க­ளி­லும் டிவி நிகழ்ச்­சி­க­ளி­லும் டான்ஸ் ஆடி பல­ரு­டைய பாராட்­டுக்­க­ளை­யும் பெற்­றார்.  ‘இல் தக்க செய்ய’ பாடல் ஆல்­பத்­தில் மான­சோ­டும், ‘சிட்­டுக்­கு­ரு­வியே’ பாடல் ஆல்­பத்­தில் சஞ்­சீ­வு­ட­னும் இணைந்து டான்ஸ் ஆடி­னார். விஜய் டிவி­யில் ஒளி­ப­ரப்­பான ‘ரெடி ஸ்டெடி போ’ விளை­யாட்டு நிகழ்ச்சி, ‘ரகள வெர்­சஸ் சகள,’ விஜய் டிவி தீபா­வளி சிறப்பு நிகழ்ச்சி ஆகி­ய­வற்­றி­லும் பங்­கேற்­றார். அதன்­பின், ‘ராஜா ராணி’ சீரி­ய­லில் (விஜய் டிவி)  ஹீரோ­யின் ‘செம்­பா’­­வாக நடித்­தார். அதில் நடித்­த­தன் மூல­மாக அவர் ‘ராஜா ராணி செம்பா’ என்றே அழைக்­கப்­பட்­டார். அந்த அள­வுக்கு ஆல்யா மிக­வும் புகழ் பெற்­றார்.  அதில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போதே  ‘ஜூலி­யும் 4 பேரும்’ படத்­தில் நடிக்­கும் வாய்ப்­பை­யும் பெற்­றார். இதற்கு மத்­தி­யில், டப்ஸ்­மேஷ் வீடி­யோ­வி­லும் ஏற்­க­னவே பிர­ப­லம்.

   ‘மானாட மயி­லாட’ நிகழ்ச்­சி­யில் தன்­னு­டன் ஜோடி போட்டு டான்ஸ் ஆடிய மானசை ஆல்யா காத­லித்­தார். அவ­ரு­டைய லவ் புரொப்­போ­ச­லுக்கு முத­லில் சிவப்பு கொடி காட்­டிய மானஸ், பின்பு பச்சை கொடி காட்­டி­னார். அதை தொடர்ந்து தங்­கள் இரு­வ­ரும் சம்­பந்­தப்­பட்ட போட்டோ மற்­றும் வீடி­யோக்­க­ளை­யெல்­லாம் ஆல்யா சமூக வலை­த­ளத்­தில் பதிவு பண்­ணி­னார். இரு­வ­ருமே ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தங்­கள் பெயர்­களை அவ­ர­வர் கைக­ளில் மாற்றி (அதா­வது மான­சின் பெயரை ஆல்­யா­வும், ஆல்­யா­வின் பெயரை மான­சும்) பச்சை குத்தி கொண்­ட­னர். அந்த போட்­டோக்­களை இரு­வ­ரும் சமூக வலை­த­ளத்­தில் பதி­வும் பண்­ணி­யி­ருந்­தார்­கள். ஆனால், இவர்­க­ளின் காதல் எதிர்­பா­ரா­வி­த­மாக சில மாதங்­க­ளி­லேயே முறிந்து விட்­டது. அதை தொடர்ந்து ‘ராஜா ராணி’­­யில் தன்­னு­டன் இணைந்து நடித்த சஞ்­சீவை ஆல்யா காத­லிக்க ஆரம்­பித்­தார்.  அந்த நேரத்­தில் சஞ்­சீவ் வேறொரு பெண்ணை காத­லித்து வந்­தார். நிச்­ச­ய­தார்த்­தம் வரை போய் அவர்­க­ளின் காதல் முடி­வுக்கு வந்­தது.

   ஆக, காதல் தோல்­வி­களை கண்ட ஆல்­யா­வும், சஞ்­சீ­வும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் காத­லிக்க தொடங்­கி­னார்­கள். சஞ்­சீவ் குடும்­பத்­தி­ன­ரின் எதிர்ப்­பால் அவர்­க­ளின் திரு­ம­ணம் மிக­வும் எளிய முறை­யில் நடந்­தது. திரு­ம­ணத்­துக்கு பிறகு, இரு­வ­ருமே தாங்­கள் காத­லித்­த­போது கைக­ளில் பச்சை குத்தி கொண்ட முன்­னாள் காத­லர் – காதலி பெயர்­களை அழித்து விட்­ட­னர் என்­பது லேட்­டஸ்ட் நியூஸ். நயன்­தாரா எப்­படி தான் கையில் பச்சை குத்­தி­யி­ருந்த முன்­னாள் காத­ல­ரின் பெயர் இருந்த இடத்­தில் ‘பாசிட்­டிவ்’ என்று மாற்­றிக்­கொண்­டாரோ, அதை போலவே ஆல்­யா­வும் இன்­னொரு வித­மாக மாற்றிக் கொண்­டார்.

– டமால்  டுமீல்