நிர்மலா அதிர்ச்சி!

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2019

ராஜ் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ‘மண்­வா­சனை’ ஒளி­ப­ரப்­பாகி வரு­கி­றது.

கோபாலை கண்­டு­பி­டிக்க வர­த­ராஜ் கடும் முயற்­சி­களை எடுக்­கி­றார். நிர்­ம­லா­வும், மங்­க­ல­மும் கண்­காட்சி அரங்­கிற்கு செல்­கின்­ற­னர். அங்கு சிவ­மும், ஆனந்­தி­யும் இருக்­கின்­ற­னர். அதே கண்­காட்­சி­யில் கோபா­லும், கம­லி­யும் வந்­தி­ருப்­பதை வர­த­ரா­ஜின் அடி­யாட்­க­ளும், நிர்­ம­லா­வும் பார்த்­து­வி­டு­கின்­ற­னர்.

கண்­காட்­சி­யில் இருந்து கோயி­லுக்கு செல்­லும் கோபா­லை­யும், கம­லி­யை­யும் வர­த­ரா­ஜின் ஆட்­கள் பின்­தொ­டர்ந்து சென்று கண்­கா­ணிக்­கின்­ற­னர். இதனை கவ­னித்த கோபால், கம­லியை ஓடி­வி­டும்­படி கூறு­கி­றார். அதற்­குள் வர­த­ராஜ் கோயி­லுக்கு வந்­து­வி­டு­கி­றார். அவரை கண்­ட­தும் ஓடி­விட முயன்ற கோபாலை, வர­த­ராஜ் பிடித்து கிரா­மத்­திற்கு அழைத்­துச் செல்­கி­றார். கோபாலை விட்­டு­வி­டும்­படி வர­த­ரா­ஜி­டம் கமலி கெஞ்­சு­கி­றாள்.

மறு­நாள் அங்­குள்ள மரம் ஒன்­றில், தூக்­கில் தொங்­கிய நிலை­யில் கோபால் இறந்து கிடக்­கி ­றார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கமலி தற்­கொலை செய்து கொள்ள முயல, மங்­க­லம் அவளை தடுத்து ஆறு­தல் கூறு­கி­றாள்.

கோபா­லின் பெற்­றோர் போலீ­சில் புகார் அளித்­த­னர். கோபால் தற்­கொலை விவ­கா­ரம் குறித்து வர­த­ரா­ஜி­டம் போலீ­ஸார் விசா­ரணை நடத்­தி­னர். இந்­நி­லை­யில், ரத்­தன்­சிங் உயி­ரி­ழந்­து­விட, அவ­ரது இறுதி சடங்­கு­களை மனோ செய்­கி­றார். கம­லியை மக­னுக்கு திரு­ம­ணம் செய்து வைக்­கும் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யும்­படி புஷ்­க­ரி­டம் வர­த­ராஜ் கூறு­கி­றார். அசோக்­கும், வர­தா­ஜும் பேசு­வதை ஒட்­டு­கேட்டு நிர்­மலா அதிர்ச்சி அடை­கி­றாள்.