சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 422– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2019

நடி­கர்­கள்  :  கார்த்தி, பிரபு, நாசர், காஜல் அகர்­வால், சந்­தா­னம், ராதிகா ஆப்தே, சரண்யா பொன்­வண்­ணன், ஆடு­க­ளம் நரேன், கோட்டா ஸ்ரீனி­வா­ச­ராவ், எம்.எஸ். பாஸ்­கர், மற்­றும் பலர். இசை : எஸ். தமன், ஒளிப்­ப­திவு : சக்தி சர­வ­ணன், எடிட்­டிங் : விவேக் ஹர்­ஷன், தயா­ரிப்பு : ஞான­வேல் ராஜா, திரைக்­கதை, இயக்­கம் : எம். ராஜேஷ்.

ஆல்­இன்­ஆல் அழ­கு­ராஜா என்ற தனது பெய­ரி­லேயே (ஏஏஏ) பிர­ப­ல­மா­காத ஒரு கேபிள் சேனலை நடத்­து­கி­றான் ராஜா (கார்த்தி). கேபிள் கம்­பெ­னி­யின் இரண்டே பணி­யா­ளர்­கள் ராஜா­வும், கல்­யா­ண­மும் (சந்­தா­னம்). சேனலை நடத்த இரு­வ­ரும் எத்­த­னையோ முயற்­சி­கள் செய்ய அத்­த­னை­யும் தோல்­வி­ய­டை­கி­றது. திரு­மண வர­வேற்பு நிகழ்ச்சி ஒன்­றில் பாடும் சித்ரா தேவிப்­ரி­யாவை (காஜல் அகர்­வால்) சந்­திக்­கும் ராஜா அவளை விரும்­பத் தொடங்­கு­கி­றான். ஆனால் மோச­மாக பாடும் ப்ரியாவை நன்­பர்­கள்  விமர்­சிக்க, இரு­வ­ரும் மோதிக்­கொள்­கி­றார்­கள். சிறந்த நட­னக்­க­லை­ஞ­ரா­வேன் எனக்­கூ­றும் ப்ரியா­வி­டம் தெரு­வில் சாட்­டை­யால் அடித்­துக்­கொள்­ளும் எம்.எஸ். பாஸ்­கரை மாஸ்­ட­ராக அனுப்பி ஏமாற்­று­கி­றார்­கள். இறு­தி­யில் தனக்கு எந்த திற­மை­யும் இல்லை என்று வருந்­தும் ப்ரியா­வும், அவளை சமா­தா­னம் செய்­யும் ராஜா­வும் காத­லிக்­கி­றார்­கள்.

கேபிள் கம்­பெ­னிக்­காக நகைக்­கடை விளம்­ப­ரம் ஒன்றை எடுப்­ப­தாக நன்­பர்­கள் நகைக்­கடை அதி­ப­ரி­டம் (கோட்டா ஸ்ரீனி­வா­ச­ராவ்) ஒப்­புக்­கொள்­கி­றார்­கள். செலவு செய்ய பணம் இல்­லாத நிலை­யில் கல்­யா­ணமே ‘கரீனா சோப்ரா’ என்ற பெய­ரில் பெண் வேடத்­தில் நடிக்­கி­றார். அவரை நடிகை என்று நம்பி அந்த நகைக்­கடை அதி­ப­ரும் கல்­யா­ணத்­தி­டம் மயங்­கு­கி­றார். மகன் ராஜா­வின் காதல் கதையை கேட்­கும் அப்பா முத்­து­கி­ருஷ்­ணன் (பிரபு) தனது பழைய காதலை நினைத்­துப் பார்க்­கி­றார்.

காளி­யின் (சந்­தா­னம்) சிபா­ரி­சில் பர்மா ராம­சா­மி­யி­டம் (நாசர்) வேலைக்­குச் சேரும் முத்­து­கி­ருஷ்­ணன் (கார்த்தி) தனது புத்­தி­சா­லித்­த­னத்­தால் ராம­சா­மி­யின் நம்­பிக்­கைக்கு உரி­ய­வ­னா­கி­றான். ராம­சா­மி­யில் மக­ளான மீனாட்­சி­யும் (ராதிகா ஆப்தே) முத்­து­கி­ருஷ்­ண­னும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நேசிக்­கி­றார்­கள். பொறாமை கொள்­ளும் காளி பொய்த்­த­க­வல் அனுப்பி முத்­து­கி­ருஷ்­ணனை அக்­கு­டும்­பத்­தில் இருந்து பிரிக்­கி­றான். நிகழ்­கா­லத்­தில் ராஜா­வுக்­காக பெண் கேட்­டுச்­செல்­லும் முத்­து­கி­ருஷ்­ணன் ப்ரியா­வின் தந்­தை­யான கந்­த­சா­மியை (‘ஆடு­க­ளம்’ நரேன்) பார்த்து அதிர்ச்­சி­ய­டை­கி­றான். ராம­சா­மி­யின் மக­னும், மீனாட்­சி­யின் அண்­ண­னு­மான கந்­த­சாமி இவர்­கள் காத­லுக்கு தடை­யாக நிற்­கி­றார்.

முத்­து­கி­ருஷ்­ண­னும், கந்­த­சா­மி­யும் சந்­தித்து பேசிக்­கொள்­ளும்­போது காளி­யின் சதித்­திட்­டம் புரி­கி­றது. காளி­யின் மக­னான கல்­யா­ணம் இறந்­து­போன தன் தந்தை சொன்ன உண்­மை­களை கூறி­ய­தும் குழப்­பங்­கள் தீர்ந்து இரு குடும்­ப­மும் இணைந்து ராஜா – ப்ரியா­வின் திரு­ம­ணத்தை நடத்­து­கி­றது. கரீனா சோப்­ரா­வால் பைத்­தி­ய­மாக இருக்­கும் நகைக்­கடை அதி­ப­ருக்­காக கல்­யா­ணம் தனது வேடத்தை தொடர்­கி­றான்.