வெங்காயம் வாங்க கடலூர் நோக்கி படையெடுத்து செல்லும் மக்கள்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 13:44

திருப்பாதிரிப்புலியூர்,

ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 150 வரை விற்பனையான நிலையில், குறைந்த விலையில் விற்பனையாகும் வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் பலரும் கடலூருக்கு படையெடுத்துள்ளனர்.

கடலூர் - திருப்பாதிரிப்புலியூர் சந்தையில் இன்று விற்பனைக்கு வந்திருக்கும் வெங்காயத்தின் விலை 1 கிலோ வெறும் 25 ரூபாய் மட்டுமே. அழுகிப் போன வெங்காயமா அல்லது ரொம்பக் சிறிய வெங்காயமோ என்று நினைக்க வேண்டாம். இது முற்றிலும் புதிய வெங்காயம்.
இன்று கடலூர் சந்தைக்கு லாரிகளில் வந்த வெங்காயத்தின் விலை குறைந்திருப்பதால், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
திருப்பாதிரிப்புலியூர் சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து

கேள்விப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள நகரங்களிலிருந்து விரைந்துள்ளதால், நண்பகலிலேயே, ஒட்டுமொத்த வெங்காயமும் விற்றுத் தீர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் சந்தையிலும் இன்று வெங்காயம் விலை குறைந்திருப்பது கவனிக்க வேண்டியது.

எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.