மலையாக மாறிய மகாதேவன்!

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019

பல்­வேறு மலை­க­ளில் கட­வு­ளைக் காண முடி­யும்.  முரு­கன், பெரு­மாள், அம்­பாள் என எல்லா தெய்­வங்­க­ளும் அங்கே குடி­யி­ருக்­கி­றார்­கள்.  ஆனால், ஒரு மலையே சிவ­னாக இருக்­கி­றது என்­றால் அதுதான் அண்­ணா­மலை.     ‘அண்ணா’ என்­றால் மிக உயர்ந்த அண்­ணாந்து பார்க்க வைக்­கும் மலை என்­ப­தால் இப்­படி ஒரு பெயர்.   அத்­து­டன் மரி­யாதை நிமித்­த­மாக ‘திரு’ சேர்த்து திரு­வண்­ணா­மலை ஆயிற்று.  இங்கே அண்­ணா­ம­லை­யா­ரும் அபி­த­கு­ஜாம்­பிகை என்­னும் உண்­ணா­முலை அம்­ம­னும் அருள்­பு­ரி­கின்­ற­னர்.  இந்த அம்­மன் வற்­றாத தாய்ப்­பாலை உயிர்­க­ளுக்­கெல்­லாம் அருள்­ப­வள்.  இத­னால் உண்­ணா­முலை எவ்­வ­ளவு கேட்­டா­லும் வரம் தரும் இயல்­புள்­ள­வள் என்ற பெயர் பெறு­கி­றாள்.

திரு­வண்­ணா­மலை 2 ஆயிரத்து 748 அடி உய­ரம் கொண்டது. இதை ஒரு முறை சுற்றி வர 14 கி.மீ., நடக்க வேண்­டும்.  புவி­யி­யல் அமைப்­பின்­படி இந்த மலை தோன்றி 260 கோடி ஆண்­டு­கள் ஆகி­யி­ருக்க வேண்­டும். ஆரம்­பத்­தில் நெருப்­பைக்  கக்கி வந்த இந்த அனல் ­மலை, இப்­போது சிவ­னின் மனம் போல குளிர்ந்து எல்­லா­ரை­யும் அரு­கில் நெருங்க அனு­ம­திக்­கி­றது.  அண்­ணா­ம­லை­யார் கோயில் 24 ஏக்­கர் பரப்­பு­டை­யது.   இங்கு ஒன்­பது கோபு­ரங்­கள் உள்­ளன.  11 நிலை­கள் கொண்ட கிழக்கு ராஜ­கோ­பு­ரம் 217 அடி உய­ரம் கொண்­டது. வடக்­கி­லுள்ள அம்­மணி அம்­மாள் கோபு­ரம் 171 அடி,  மேற்­கி­லுள்ள பேய்க்­கோ­பு­ரம் 160 அடி,  வீர­வல்­லாள கோபு­ரம், கிளி கோபு­ரம் ஆகி­யவை 81 அடி. தெற்கு மேற்கு கட்டை கோபு­ரங்­கள் 20 அடி.   வடக்கு கட்டை கோபு­ரம் 45 அடி உய­ரம் கொண்­டவை.

திருக்­கார்த்­திகை விழா­வன்று மலை உச்­சி­யில் தீப­மேற்­று­வர்.  பிரம்­மா­வுக்­கும் பெரு­மா­ளுக்­கும் அண்­ணா­ம­லை­யார் நெருப்பு மலை­யாக காட்சி தந்­த­தன் அடிப்­ப­டை­யில் இந்த விழா நடத்­தப்­ப­டு­கி­றது.  தீப­மேற்­றும் வழக்­கம் ஏற்­பட்ட வர­லாறு சுவை­யா­னது.  பிரம்­மா­வுக்­கும் பெரு­மா­ளுக்­கும் தங்­க­ளில் யார் உயர்ந்­த­வர் என்ற சர்ச்சை எழுந்­தது. அவர்­கள் சிவனை அணுக அவர் நெருப்பு வடி­வாக வானுக்­கும் பூமிக்­கு­மாக உயர்ந்து நின்­றார். தனது உச்­சியை பிரம்­மா­வும் பாதத்தை பெரு­மா­ளும் பார்த்து வரும்­படி அனுப்­பி­னார். இரு­வ­ரா­லும் அதை செய்ய முடி­ய­வில்லை.  பெரு­மாள் தனது தோல்­வியை ஒப்­புக்­கொண்­டார்.  பிரம்­மாவோ முடி­யைக் கண்­ட­தாக பொய் சொன்­னார். இத­னால் அவ­ருக்கு பூமி­யில் பூஜை கிடை­யாது என்ற தண்­ட­னை­யைப் பெற்­றார்.  பின் சிவ­னின் நெருப்பு வடி­வம் குளிர்ந்து  மலை­யாக மாறி­யது.  இதுவே அண்­ணா­மலை  ஆயிற்று. ‘அண்ணா’ என்­னும் சொல்­லுக்கு நெருங்க முடி­யாத என்ற பொரு­ளும் உண்டு.  நெருப்பு மலை என்­ப­தால் யாரா­லும் நெருங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது.  கலி­யு­கத்­தில் நம் மீது அன்பு கொண்டு மலை­யாய் இருக்­கும் சிவன் குளிர்ந்து நம்மை அரு­கில் வர அனு­ம­தித்­தார். இங்கு வசித்த அன்­பர் ஒரு­வர் கணம்­புல் கொண்டு திரி­யிட்டு சுவா­மிக்கு விளக்­கேற்றி வந்­தார்.  ஒரு சம­யம் அப்­புல்­லுக்கு தட்­டுப்­பாடு வரவே, தனது முடி­யையே திரி­யாக்கி தீப­மேற்ற முயன்­றார். சிவ­னும் பார்­வ­தி­யும் தோன்றி அவ­ரைத் தடுத்து ஆட்­கொண்­ட­னர்.  அவ­ரது மன­தி­டத்தை பாராட்டி நாயன்­மார்­க­ளில் ஒரு­வ­ராக்­கி­னர்.   கணம்­புல்­லால் விளக்­கேற்­றி­ய­தால் ‘கணம்­புல்­லர்’ எனப் பெயர் பெற்­றார்.

கிரி­வ­லப்­பா­தை­யில் அஷ்­ட­லிங்­கம் எனப்­ப­டும் எட்டு லிங்­கக்­கோ­யில்­கள் உள்­ளன. முத­லில் இந்­தி­ர­லிங்­கத்தை வணங்கி விட்டு கிரி­வ­லத்தை துவங்க வேண்­டும்.  தொடர்ந்து அக்­னி­லிங்­கம்   ‘எம­லிங்­கம்’ , ‘நிரு­தி­லிங்­கம்’, ‘வரு­ண­லிங்­கம்’, ‘வாயு­லிங்­கம்’, ‘குபே­ர­லிங்­கம்’ தரி­ச­னம் முடித்து  சுடு­காட்­டி­லுள்ள ஈசா­ன­லிங்­கக் கோயி­லுக்கு செல்­ல­வேண்­டும்.  மனித வாழ்­வின் இறுதி நிலை இறப்பு என்­னும் தத்­து­வத்தை இங்கே உண­ர­லாம். அடுத்த அண்­ணா­ம­லை­யார் கோயி­லுக்­குள் சென்று சுவாமி தரி­ச­னம் செய்­வ­து­டன் தரி­ச­னம் நிறைவுபெறும்.  கிரி­வ­லப்­பா­தை­யில் அடி அண்­ணா­மலை நேர் அண்­ணா­மலை கோயில்­க­ளும் உண்டு.

இருப்பிடம்: விழுப்­பு­ரம் – வேலூர் சாலை­யில் 70 கி.மீ.,

விசேஷ நாட்­கள்: திருக்­கார்த்­திகை,    பவுர்­ணமி கிரி­வ­லம்,   மகா­சி­வ­ராத்­திரி,   சனி பிர­தோ­ஷம்,

நேரம்: காலை 4.30 மணி – 1.00 மணி; மாலை 4.00 மணி – இரவு 9.00 மணி.

அருகிலுள்ள தலம் : திருவண்ணாமலையிலிருந்து சந்தவாசல் வழியாக 52 கி.மீ., தொலைவில் படவேடு ரேணுகாம்பாள் கோயில்.