ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019

* காசிக்குச் சென்று வந்தவர்கள் கடைப்பிடிக்கவேண்டியது என்னென்ன? ஆ. மாரிமுத்து, செங்கோட்டை.

மிகப்புனிதமான பயணம் சென்றுவந்த பிறகாவது நம்மிடம் உள்ள குறைகள், குற்றங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கி தூயவாழ்க்கையை மேற்கொண்டால்,  அதன் பிறகு எந்தக் குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

* பூஜையறையில் சூலம், வேல் வைத்து வழிபடலாமா? எஸ். மகாதேவன், நாகர்கோவில்.

சூலம் சிவனுடையது. வேல் முருகனுடையது. தாராளமாக வழிபடலாம்.