மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை பலன் அளிக்குமா?

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2019

அர­சி­யல் கட்­சி­கள் வேலை­யில்லா திண்­டாட்­டத்தை சமா­ளிக்க, மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கே வேலை­யில் முன்­னு­ரிமை என்று கூறு­கின்­றன. இது ஏற்­க­னவே நெருக்­க­டி­யில் உள்ள பொரு­ளா­தா­ரத்­திற்கு மேலும் சிக்­கலை உண்­டாக்­குமா?     அர­சி­யல் சட்­டம் குடி­ம­கன்­கள் எங்கு வேண்­டும் என்­றா­லும் வேலை செய்­வ­தற்கு அடிப்­படை உரி­மையை வழங்­கி­யுள்­ளது. அர­சின் வேலை­வாய்ப்­பு­க­ளில் மட்­டு­மல்­லாது, தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­லும் வேலை வாய்ப்­பில் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு வேலைக்கு முன்­னு­ரிமை என்­பது, அர­சி­யல் சட்­டத்­திற்கு எதி­ரா­ன­தாக இருக்­காதா என்ற கேள்­வி­யும் எழு­கி­றது. மாநில கட்­சி­கள் வாக்கு வங்கி அர­சி­ய­லுக்­காக உள்­ளூ­ரைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே தனி­யார் துறை­க­ளி­லும் வேலை­யில் முன்­னு­ரிமை வழங்க வேண்­டும் என்ற கருத்தை வலி­யு­றுத்­து­கின்­றன.

தனி­யார் துறை­யி­லும் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கே வேலை வழங்க வேண்­டும் என்ற சட்­டத்தை முதன் முத­லில் கொண்டு வந்­தது ஆந்­தி­ரா­வில் ஜெகன் மோகன் ரெட்டி அரசே. ஆந்­திர அரசு தனி­யார் தொழிற்­சா­லை­க­ளில் 75 சத­வி­கித வேலை­களை மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு கொடுக்க வேண்­டும் என்ற சட்­டத்தை கொண்டு வந்­தது. ஆந்­தி­ராவை தொடர்ந்து மத்­திய பிர­தே­சத்­தில் கமல்­நாத் தலை­மை­யி­லான அரசு மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு 70 சத­வி­கித வேலை வழங்க வேண்­டும் என்று அறி­வித்­தது. தற்­போது மகா­ராஷ்­டி­ரா­வில் அமைந்­துள்ள சிவ­சேனா, தேசி­ய­வாத காங்­கி­ரஸ், காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யான ‘மகா­ராஷ்­டிரா வளர்ச்சி கூட்­டணி’ அரசு தனி­யார் துறை­க­ளி­லும் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு 80 சத­வி­கித வேலை வழங்க வேண்­டும் என்று அறி­வித்­துள்­ளது.

பா.ஜ.,ஆட்­சி­யில் உள்ள ஹரி­யானா மாநில அரசு தனி­யார் துறை வேலை­வாய்ப்­பு­க­ளில் 75 சத­வி­கி­தம் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு வழங்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளது. சட்­ட­சபை தேர்­தல் நடை­பெ­றும் ஜார்­கண்ட் மாநி­லத்­தில், பா.ஜ., வறுமை கோட்­டிற்கு கீழ் உள்­ள­வர்­க­ளுக்கு  வீட்­டிற்கு ஒரு­வ­ருக்கு வேலை என்ற வாக்­கு­று­தியை வழங்­கி­யுள்­ளது. ஒவ்­வொரு மாநில அர­சு­க­ளும், வேறு மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளால் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு பறி­போ­கி­றது என்­ப­தால், தொழில் தொடங்­கு­ப­வர்­கள் வேலை­க­ளில் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்­கின்­றன. தொழில் தொடங்­கு­ப­வர்­க­ளுக்கு வழங்­கும் பல்­வேறு சலு­கை­க­ளுக்கு, இதை நிபந்­த­னை­யாக விதிக்­கின்­றன.

தற்­போது அரசு துறை­கள், அரசு சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளில் வேலை­வாய்ப்­பில் இட ஒதுக்­கீடு உள்­ளது. பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், தாழ்த்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­ன­ருக்கு என இட ஒதுக்­கீடு உள்­ளது. (தற்­போது கல்­வி­யில் முற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­ன­ரில் ஏழை­க­ளுக்­கும் இட ஒதுக்­கீடு வழங்­கு­வது அமல்­ப­டுத்­தப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.)

தனி­யார் நிறு­வ­னம், தொழிற்­சா­லை­க­ளில் குறிப்­பிட்ட வேலைக்கு தகு­தி­யான உள்­ளூர் வாசி­கள் (மண்­ணின் மைந்­தர்­கள்) கிடைக்­கா­விட்­டால் என்ற செய்­வது என்ற கேள்வி எழு­கி­றது. ஆந்­தி­ரா­வில் இயற்­றப்­பட்­டுள்ள சட்­டம், தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு தேவைப்­பட்ட திறன் மிகுந்த, தேர்ச்சி பெற்ற உள்­ளூர் தொழி­லா­ளர்­கள் கிடைக்­கா­விட்­டால், மாநில அர­சு­டன் இணைந்து பயிற்சி அளிக்க வேண்­டும் என்று கூறு­கி­றது. அந்த நிறு­வ­னம் உள்­ளூர் தொழி­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி அளித்த விப­ரத்தை மூன்று மாத்­திற்கு ஒரு முறை சமர்ப்­பிக்க வேண்­டும். தனி­யார் நிறு­வ­னங்­க­ளால், பயிற்சி அளிக்­கும் செலவை ஏற்­றுக் கொள்ள முடி­யுமா? தனி­யார் நிறு­வ­னங்­கள்  சந்­தை­யில் உள்ள போட்­டியை சமா­ளிக்க, உற்­பத்தி செலவை குறைக்­கவே முயற்சி செய்­யும். தனி­யார் நிறு­வ­னங்­கள் குறைந்த சம்­ப­ளத்­தில், ஊதி­யத்­தில் ஆட்­களை வேலைக்கு அமர்த்­தவே விரும்­பும். இந்த சூழ்­நி­லை­யில் உள்­ளூர் வாசி­க­ளுக்கு வேலை வழங்க வேண்­டும் என்­ப­தால், உற்­பத்தி செலவு அதி­க­ரிக்­காதா என்­ப­தை­யும் பரி­சீ­லிக்க வேண்­டும்.

மாநில அர­சு­க­ளின் இத்­த­கைய சட்­டங்­க­ளால், அறி­விப்­பு­க­ளால் பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­ப­டாதா? தனி­யார் நிறு­வ­னங்­கள் தங்­க­ளுக்கு வச­தி­யான, சலு­கை­கள் அளிக்­கும் இடங்­க­ளி­லேயே முத­லீடு செய்ய விரும்­பும். மாநில அர­சு­கள் விதிக்­கும் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கே வேலை போன்ற நிபந்­த­னை­க­ளால் தனி­யார் நிறு­வ­னங்­கள், குறிப்­பாக வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் மூத­லீடு செய்ய முன்­வ­ரு­வது சந்­தே­கமே. ஒரு நிறு­வ­னத்­தில் உள்­ளூர் வாசி­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து நிய­மிக்­கும் தொழி­லா­ளர்­க­ளுக்­கும், வேறு மாநி­லங்­க­ளில் இருந்து இடம் பெயர்ந்த தொழி­லா­ளர்­க­ளுக்­கும் இடையே சச்­ச­ரவு ஏற்­ப­டு­வ­தற்­கும் வழி­கோ­லும்.

வேறு மாநி­லங்­க­ளில் இருந்து இடம் பெய­ரும் தொழி­லா­ளர்­க­ளால் உள்­ளூர் மக்­க­ளுக்கு வேலை வாய்ப்பு பறி­போ­கி­றது என்ற கருத்து பர­வ­லாக நில­வு­கி­றது. சமீ­பத்­திய கணக்­கெ­டுப்­பில் வேலை தொடர்­பாக இடம் பெயர்­ப­வர்­கள். பெரும்­பா­லும் அந்த மாநி­லத்­திற்­குள்­ளேயே இடம் பெயர்­கின்­ற­னர். வேறு மாநி­லங்­க­ளில் இருந்து இடம் பெயர்­ப­வர்­கள் அதிக அளவு இல்லை என்று தெரிய வந்­துள்­ளது. நகர்ப்­பு­றங்­க­ளில் வேலை பார்க்­கும் தொழி­லா­ளர்­க­ளில் 10 சத­வி­கி­தத்­தி­னரே வேறு மாநி­லங்­க­ளில் இருந்து வந்­த­வர்­கள். உத்­த­ர­பி­ர­தே­சம், பீகார்,ஓடிசா போன்ற மாநி­லங்­க­ளில் இருந்து தான் அதிக அளவு தொழி­லா­ளர்­கள் வேறு மாநி­லங்­க­ளுக்கு வேலை தேடி செல்­கின்­ற­னர். இவர்­க­ளில் பெரும்­பா­லோர் கூலி தொழி­லா­ளர்­க­ளா­கவே உள்­ள­னர். நிரந்­தர வேலை­யில் உள்­ள­வர்­க­ளில் பெரும்­பா­லோர் உள்­ளூ­ரைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவே உள்­ள­னர்.

வேலை­யில்லா திண்­டாத்தை போக்க தேவை­யான திட்­டங்­களை தீட்­டா­மல், புதிய வேலை வாய்ப்­பு­களே உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கா­மல், மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு வேலை கிடைக்­காத கார­ணம், வெளி­மா­நி­லங்­க­ளில் இருந்து வரும் தொழி­லா­ளர்­களே என்ற தோற்­றத்தை உரு­வாக்­கு­கின்­ற­னர். கட்­டம் கட்­டு­தல், மெட்ரோ ரயில், பெரிய அளவு உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­தல் போன்ற மிக கடி­ன­மான பணி­க­ளில், அந்­தந்த மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், மண்­ணின் மைந்­தர்­கள் வேலை செய்ய விரும்­பு­வ­தில்லை. இது போன்ற வேலை­க­ளி­லேயே வெளி­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் வேலை செய்­கின்­ற­னர்.

மாநில அர­சு­கள் புதிய வேலை வாய்ப்பை உரு­வாக்க தொழில், வர்த்­த­கம் போன்­ற­வை­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு, குறிப்­பாக அந்­தந்த மாநி­லங்­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளுக்கு உரிய சலு­கை­கள் வழங்க வேண்­டும். வெளி­நாட்டு முத­லீட்டை ஈர்க்க, பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு சலு­கை­கள் வழங்­கு­ப­வது போல், உள்­ளூர் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்­கும் கூடு­தல் சலு­கை­கள் வழங்கி ஊக்­கு­விக்க வேண்­டும். அதே போல் வேலை தேடும் இளைர்­க­ளுக்கு உரிய பயற்­சி­கள் அளித்து திறன்­மிகு தொழி­லா­ளர்­க­ளாக மாற்ற வேண்­டும். இவ்­வாறு செய்­தால், இவர்­களை உற்­பத்­தி­யில் ஈடு­ப­ட­வைக்க ஏது­வா­கும். வேலை­யில்லா திண்­டாட்­ட­மும் குறை­யும்.பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும் உத­வி­யாக இருக்­கும்.

தேர்­தல் சம­யங்­க­ளில் அர­சி­யல் வாதி­கள் பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளிக்­கின்­ற­னர். ஆட்­சிக்கு வந்த பிறகு இந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும் நிர்ப்­பந்­தம் ஏற்­ப­டு­கி­றது. இத­னால் இவர்­கள் மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கு வேலை என்­பது போன்ற சட்­டங்­களை இயற்­று­கின்­ற­னர். இதற்கு பதி­லாக சிறு, குறுந் தொழில்­கள், குடிசை தொழில்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள், நிதி வசதி, கடன் ஆதா­ரம் போன்ற வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­னால், சிறு, குறு, குடிசை தொழில்­கள் வளர்ச்சி அடை­யும். இன்­ற­ள­வும் பெரிய நிறு­வ­னங்­கள் அளிக்­கும் வேலை­க­ளை­விட, நடுத்­தர, சிறு, குறுந் தொழில்­களே அதிக வேலை வாய்ப்பை வழங்­கு­கின்­றன. வேலை தேடும் இளை­ஞர்­களை தொழில் முனை­வோர்­க­ளாக மாற்ற தேவை­யான பயிற்­சி­கள் அளிக்க வேண்­டும். அவர்­கள் தொழில் தொடங்க தேவை­யான நிதி, கடன் உட்­பட அனைத்து வச­தி­க­ளை­யும் செய்து கொடுக்க வேண்­டும். இதன் மூலம் வேலை வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும். வேலை­யில்லா திண்­டாட்­ட­மும் குறை­யும்.

இதற்கு பதி­லாக மண்­ணின் மைந்­தர்­க­ளுக்கே வேலை, உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு முன்­னு­ரிமை போன்ற கோஷங்­க­ளால், திட்­டங்­க­ளால் எதிர்­பார்த்த பலன் கிடைக்­காது.