ஆசிரியர், மாணவர் இடையே புரிதல் இல்லை

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2019

இந்­தி­யா­வின் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் சமீ­ப­கா­ல­மாக மாண­வர்­கள் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வது அதி­க­ரித்து வரு­கி­றது. டில்­லி­யில் உள்ள புகழ் பெற்ற ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லைக்கழகத்­தில் மாண­வர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். இதற்கு கார­ணம் விடுதி, உணவு கட்­ட­ணத்தை இரண்டு மடங்­காக ரூ. 60 ஆயி­ர­மாக உயர்த்­தி­யதே. இந்த புது கட்­ட­ணத்­தில் பாதி­ய­ளவு குறைப்­ப­தாக பல்­க­லை­க­ழக நிர்­வா­கம் கூறி­யதை மாண­வர்­கள் ஏற்­க­வில்லை. இதே போஸ் எய்ம்ஸ் மருத்­து­வ­கல்­லூரி கட்­ட­ண­மும் பல மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. ஹைத­ர­பாத் பல்­க­லைக்­க­ழ­கம், மேற்கு வங்­கா­ளத்­தில் உள்ள ஜாதேவ்­பூர் பல்­க­லை­க்க­ழ­கம், பூனா­வில் உள்ள பிலிம் அண்ட் டெலி­வி­ஷன் இன்ஷ்­டி­யூ­டிட், அலி­கார் முஸ்­லீம் பல்­க­லைக்­க­ழ­கம், பன­ராஸ் ஹிந்து பல்­க­லை­க­ழ­கம் என மாண­வர்­கள் பல்­வேறு கார­ணங்­க­ளால் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

இதற்­கான கார­ணம் என்ன என்­ப­தை­யும், கல்வி குறித்த பல்­வேறு தக­வல்­களை தலை­சி­றந்த கல்­வி­யா­ள­ரும், முன்­னாள் மத்­திய மனி­த­வள மேம்­பாட்­டுத்­துறை அமைச்­ச­ரான முரளி மனோ­கர் ஜோஷி விளக்­கு­கின்­றார். அவர் ஆசி­ரி­யர்–­மா­ண­வர்­கள் இடையே புரி­தல் இல்லை என­வும், கல்­விக்கு நிறம் இல்லை என்­றும் கூறு­கின்­றார். அவுட்­லுக் வார இதழ் நிரு­பர்­கள் பவான விஜி–­அ­ரோரா ஆகி­யோ­ருக்கு அளித்த பேட்­டி­யின் தமி­ழாக்­கம்.

கேள்வி: நமது பல்­க­லைக்­க­ழ­கங்­கள் கருத்து மாறு­பாடு கொண்­ட­வர்­க­ளின் மைய­மாக மாறி­வ­ரு­கி­றது. கல்­வி­யா­ளர், முன்­னாள் மனி­த­வள மேம்­பாட்டு துறை அமைச்­சர் என்ற முறை­யில், இதை எப்­படி பார்க்­கின்­றீர்­கள்?

பதில்) பல்­க­லை­க­ழ­கங்­க­ளில் நடப்­பது திடீ­ரென ஏற்­பட்­ட­தல்ல. இதற்கு வர­லாறு உள்­ளது. இதை ஒரு அறிக்­கை­யாலோ அல்­லது ஒரு நட­வ­டிக்­கை­யாலோ கையா­ள­மு­டி­யாது. ஆசி­ரி­யர்­க­ளுக்­கும், மாண­வர்­க­ளுக்­கும் இடையே நல்ல புரி­தல் இருந்­தால் ஒழிய, இதை கையாள்­வது சிர­மம். நம்­பிக்­கை­யின்மை அதிக அளவு உள்­ளது. நிர்­வா­கத்­திற்­கும், மாண­வர்­க­ளுக்­கும் இடையே பிளவு பெரி­தா­கி­விட்­டது.

ஆசி­ரி­யர்­களோ அல்­லது நிர்­வா­கமோ தங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­கள் அல்ல என்­ப­தை­யும், அவர்­களை நம்­பியோ உள்­ளோம் என்­பதை மாண­வர்­கள் உண­ரும்­படி இருக்க வேண்­டும். இந்த இளம் தலை­முறை நிர்­வா­கத்­திற்கு எதி­ராக இல்லை என்­ப­தை­யும், மாண­வர்­கள் அவற்றை ஏற்­றுக் கொள்­கின்­ற­னர் என்­ப­தை­யும் நிர்­வா­கம் உணர வேண்­டும். இந்த அவ­நம்­பிக்கை அமை­தி­யின்­மை­யில் (போராட்­டங்­க­ளில்) போய் முடி­கி­றது. சில பல்­க­லை­க­ழ­கங்­க­ளில் சித்­தாந்­தங்­கள் முக்­கிய இடம் வகிக்­கின்­றன. ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­களை போராட்­டத்­தில் தள்­ளு­வதை விட, அவர்­க­ளுக்கு வழி­காட்ட வேண்­டும்.

கேள்வி) ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லை­க­ழ­கத்­தில் நடக்­கும் போராட்­டத்தை, நீங்­கள் எப்­படி கையாள்­வீர்­கள்?

பதில்) 1970ல் அல­கா­பாத் பல்­க­லை­க­ழ­கத்­தில் நான் ஆசி­ரி­யர்­கள் சங்க பொதுச் செய­லா­ள­ராக இருக்­கும் போது, அங்கு செல்­வாக்கு மிக்க கம்­யூ­னிஸ்ட், சோஷ­லிஸ்ட் தலை­வர்­களை எதிர் கொண்­டோம். நாங்­கள் போராட்த்­தில் ஈடு­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­களை சமா­ளித்­தோம். மாண­வர்­கள் தங்­க­ளின் குறை­களை களை­ய­வில்லை என்­ப­தால், மாண­வர்­கள் துணை­வேந்­த­ரின் அலு­வ­ல­கத்தை அடித்து நொறுக்­கி­னார்­கள். துணை வேந்­தர் என்னை போனில் தொடர்பு கொண்டு, ஆசி­ரி­யர்­க­ளின் உதவி தேவை என்­றார். ஆசி­ரி­யச் சங்­கத்­திற்­கும், மாண­வர்­க­ளுக்­கும் இடையே புரி­தல் இருந்­தது. மாண­வர்­கள் துணை வேந்­தர் மீது கோப­மாக இருந்­த­னர். கடு­மை­யான அவ­நம்­பிக்கை நில­வி­யது.

அந்த நேரம் கடு­மை­யான வெப்­பம் உள்ள செப்­டம்­பர் மாதம். நாங்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மாண­வர்­க­ளுக்கு குடி­தண்­ணீர் வழங்­கி­னோம். நான் மாண­வர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தும்­படி துணை வேந்­தரை கேட்­டுக் கொண்­டேன். மாண­வர்­கள் தன்னை அவ­தூ­றாக பேசு­வார்­கள், செருப்பை கூட விட்டு எறி­வார்­கள் என்று அவர் அஞ்­சி­னார். நாம் அவர்­கள் (மாண­வர்­கள்) கூறு­வதை காது கொடுத்து கேட்­கா­விட்­டால், அவர்­கள் எதிர்­வினை புரி­வார்­கள் என்று கூறி­னேன். துணை வேந்­தர் மாண­வர் பிர­தி­நி­தி­களை சந்­திக்க சம்­ம­தித்­தார். பிரச்னை சுமு­க­மாக முடி­வுக்கு வந்­தது. நாங்­கள் (ஆசி­ரி­யர்­கள்) மாண­வர்­களை நல்ல முறை­யில் நடத்­தி­ய­தால், அவர்­க­ளின் நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மா­னோம். நாங்­கள் சக மனி­தர்­க­ளாக, ஆசி­ரி­யர்­க­ளாக மாண­வர்­கள் கூறு­வதை கேட்­டோம்.

கேள்வி) ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லை­க­ழ­கத்­தில் கமிட்­டி­யில் மாண­வர்­கள் பங்­கேற்­பதை கூட அனு­ம­திக்­க­வில்­லையே?

பதில்) பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­தில் மாண­வர்­கள் பங்­கேற்­பது ஆரோக்­கி­யான செயல். நான் துறை­யின் நூல­கத்தை நிர்­வ­கிக்­கும் பொறுப்பை மாண­வர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தேன். நான் அவர்­க­ளி­டம் நூல­கத்­தின் சாவியை ஒப்­ப­டைத்­தேன். மாண­வர்­கள் நூலக நேரம் முடிந்த பிற­கும் கூட, அங்கு சென்று படித்­த­னர். இதில் விஷ­யம் என்ன வெனில், நீங்­கள் மாண­வர்­களை சக­ம­னி­தர்­க­ளாக நடத்த வேண்­டும். அவர்­க­ளது குறை, நிறை­க­ளு­டன் ஏற்­றுக் கொள்ள வேண்­டும். அப்­படி செய்­தால், உங்­க­ளு­டைய குறை­களை கூட பொருட்­ப­டுத்­தா­மல், உங்­களை ஏற்­றுக் கொள்­வார்­கள். நீங்­கள் ஆசி­ரி­யர் என்ற முறை­யில் நேர்­மை­யாக இருந்­தால், மாண­வர்­க­ளும் நேர்­மை­யாக இருப்­பார்­கள்.

நமது கல்­வி­யின் நோக்­கம் மாண­வர்­களை சிந்­த­னை­யா­ளர்­க­ளா­க­வும், ஆய்வு செய்­யும் திறன் கொண்­ட­வர்­க­ளாக மாற்­று­வ­தா­கும். குழந்தை பரு­வத்­தில் இருந்தே மாறு­பட்டு சிந்­திக்க அவர்­க­ளுக்கு உரிமை உண்டு. அவர்­கள் கேள்வி கேட்க ஆரம்­பித்­தால், அவர்­கள் கிளர்ச்சி செய்­கி­றார்­கள் என்று நினைக்க கூடாது.

கேள்வி) ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கம், குறிப்­பிட்ட கருத்­துள்­ள­வர்­க­ளின் மைய­மாக மாறி­விட்­டது. இது சித்­தாந்­தத்­து­டன் தொடர்பு உடை­யது என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்) சில கோஷங்­க­ளில் இருந்து கருத்­தி­யல் திரிபு ஏற்­ப­டு­கி­றது. சிலர் இந்­திய தேசி­யத்­திற்கு எதி­ராக உள்­ள­னர். சிலர் வேறு மாதி­ரி­யான தேசி­யத்தை கட்­டா­யப்­ப­டுத்த பார்க்­கின்­ற­னர். இது மாதி­ரி­யான போக்கை எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லும் நீண்­ட­நாள் அனு­ம­திக்க கூடாது. தேசி­யத்தை பற்­றி­யும், தேச­பக்­தியை பற்­றி­யும் ஒரே மாதி­ரி­யான கருத்து இருக்க வேண்­டும். இந்­தி­யாவை துண்­டாட அனு­ம­திக்க கூடாது. இந்­தியா முழு­மை­யும் ஒரே நாடு, ஒரே மக்­கள்,ஒரே தேசம்.

கேள்வி) இட­து­சா­ரி­க­ளின் மைய­மாக, ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கம் பார்க்­கப்­ப­டு­கி­றதே?

பதில்: இட­து­சா­ரியோ அல்­லது வல­து­சா­ரியோ, பிரச்னை அது அல்ல. நான் பேரா­சி­ரி­ய­ராக இருக்­கும் போது, சோஷ­லிஸ்ட், கம்­யூ­னிஸ்ட், காங்­கி­ரஸ் மாண­வர்­களே இருந்­த­னர். அப்­போது ஏபி­விபி ( தற்­போ­தைய பா.ஜ,வின் மாண­வர் அமைப்­பான அகில பார­திய வித்­யார்த்தி பரி­ஷத்), அல்­லது மற்ற மாண­வர் சங்­கங்­கள் இல்லை. ஆனால் பல்­க­லைக்­க­ழ­கம் திறந்த மன­து­டன் இருந்­தது. பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பல்­வேறு அர­சி­யல் கருத்து உடை­ய­வர்­கள் வந்­த­னர். பி.சி.ஜோஷி (கம்­யூ­னிஸ்ட்), எலி­னால் ரூஸ்­வெல்ட், வாஜ்­பாய், ஆச்­சா­ரிய கிரு­பா­ளானி, கிருஷ்ண மேனன், ஜவ­ஹர்­லால் நேரு, ராம் மனோ­கர் லோகியா ஆகி­யோர் வந்­த­னர். ஆசி­ரி­யர் என்ற முறை­யில், அவர்­க­ளது சித்­தாந்­தம் பிரச்னை அல்ல. தகு­தி­தான் முக்­கி­யம்.

கேள்வி: பன­ராஸ் ஹிந்து பல்­க­லை­க­ழத்­தில். பெரோஸ் கான் என்ற முஸ்­லீம், சமஸ்­கி­ருத பேரா­சி­ரி­ய­ராக இருக்க கூடாது என்று எதிர்க்­கின்­றரே? இதை பற்றி என்ன கூறு­கின்­றீர்­கள்?

பதில்: இது துர­திஷ்­ட­வ­ச­மா­னது. இது மிக­வும் மோச­மா­னது. பேரா­சி­ரி­யர் பெரோஸ் கான் சமஸ்­கி­ருத பாடம் நடத்­து­வதை வர­வேற்க வேண்­டும். அவரை சமஸ்­கி­ருத பாடம் நடத்த அனு­ம­திக்க வேண்­டும். மதன் மோகன் மாள­வியா, ஹிந்து என்­ப­வர் யார் என்று விளக்­கி­யுள்­ளார். (அவ­ரது உரை­கள் அடங்­கிய புத்­த­கத்தை படி­யுங்­கள்) ஹிந்து என்­ப­வர் யார் என்­பதை பற்றி,  1924, பிப்­ர­வரி 23ம் தேதி ஹிந்து மகா­சபை கூட்­டத்­தில் மதன் மோகன் மாள­வியா உரை­யாற்­றி­யுள்­ளார். அவ­ரது கருத்­துப்­படி பேரா­சி­ரி­யர் பெரோஸ் கான் ஒரு ஹிந்து. அவரை பாடம் நடத்த அனு­ம­திக்க வேண்­டும். இதே போல் மோகன் பகத் (ஆர்.எஸ்.எஸ் தலை­வர்) கூட இந்­தி­யா­வில் வாழ்­ப­வர்­கள், இந்­தி­யாவை தனது தாய்­நா­டாக கரு­து­ப­வர்­கள், ஹிந்­துவே என்று கூறி­யுள்­ளார்.

கேள்வி: பல்­க­லைக்­க­ழங்­க­ளில் கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. இத­னால் பல்­க­லைக்­க­ழங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கு­வது பற்றி விஷ­யம் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது. உயர் கல்­விக்கு அரசு நிதி ஒதுக்­கு­வது பற்றி உங்­கள் கருத்து என்ன? உயர்­கல்­விக்கு அரசு நிதி ஒதுக்­கு­வது கட­மையா அல்­லது சலு­கையா?

பதில்: கல்வி என்­பது சமூக சொத்து. கல்­விக்­காக செல­வ­ழிப்­பது முத­லீடு செய்­வது போல், அது செலவு அல்ல. கல்­விக்­காக நூறு ரூபாய் முத­லீடு செய்­தால், நூற்று பத்து ரூபா­யாக திரும்ப கிடைக்­கும். கல்­விக்­காக செய்­யும் முத­லீடு, நல்ல வரு­வாயை கொடுக்­கும். இந்த முத­லீட்டை அரசு தான் செய்ய வேண்­டும். எல்லா குழந்­தை­க­ளுக்­கும் ஒரே மாதி­ரி­யான கல்வி வழங்க வேண்­டும். என்­னி­டம் பணம் இருப்­ப­தால், எனது குழந்­தைக்கு சிறந்த கல்­வியை கொடுக்க முடி­யும். என்­னி­டம் பணம் இல்லை. ஏழை­யாக இருப்­ப­தால், எனது குழந்­தை­கள் படிப்­ப­றிவு அற்­ற­வர்­க­ளாக உள்­ள­னர் என்ற நிலை கூடாது. ஏழை­க­ளுக்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைக்­கா­விட்­டால், அவர்­க­ளுக்கு போதிய வாய்ப்பு கிடைக்­கா­மல் ஏழை­க­ளா­கவே இருப்­பார்­கள்.

கேள்வி: மழ­லை­யர் பள்­ளிக்­கும் உயர் கல்­விக்­கும் தொடர்பு இருப்­ப­தாக கரு­து­கின்­றீர்­களா?

பதில்: கல்வி என்­பது ஒரு தலை­மு­றை­யின் அறி­வும், அனு­ப­வங்­க­ளும் அடுத்த தலை­மு­றைக்கு மாற்­றப்­ப­டு­வது. கல்வி மனித அறிவு வளர்ச்­சிக்­கும், பரி­ணாம வளர்ச்­சிக்­கும் உத­வு­கி­றது. அவர்­கள் அறிந்த தக­வல்­க­ளும்,  பெற்ற அனு­ப­வங்­க­ளும் அவர்­களை புத்­தி­சா­லி­யாக்­கு­கின்­றன. இப்­ப­டி­தான் நாக­ரி­கங்­கள் வளர்­கின்­றன.

அர­சி­யல் சட்­டம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சம உரிமை வழங்­கு­கி­றது. கல்வி பொதுப்­பட்­டி­ய­லில் உள்­ளது. ஆரம்ப கல்வி கொடுப்­பது அர­சின் பொறுப்பு. நாடு சுதந்­தி­ரம் அடைந்த பிறகு, மாநில அர­சு­கள் ஆரம்ப கல்­வி­யில் பார­மு­க­மாக இருந்­தன. இந்­திரா காந்தி கல்­வியை பொதுப்­பட்­டி­ய­லில் கொண்டு வந்­தது, சரி­யான நட­வ­டிக்கை என்­பேன். அப்­ப­டி­யில்லை எனில் மத்­திய அர­சுக்கு பொறுப்பு இருக்­காது.

கேள்வி: நீங்­கள் எல்­லோ­ருக்­கும் கல்வி கிடைக்க வேண்­டும் என்ற சோஷ­லிச முறையை ஊக்­கு­விப்­ப­தாக தெரி­கி­றது. நீங்­கள் மத்­திய மனி­த­வள மேம்­பாட்டு துறை அமைச்­ச­ராக இருக்­கும் போது, சர்வ சிக்சா அபி­யான் திட்­டத்தை கொண்டு வந்து, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்­தை­க­ளுக்கு கல்வி அடிப்­படை உரிமை ஆக்­கி­னீர்­கள். நீங்­கள் கல்­வியை காவி­யம்­மாக்­கு­வ­தா­க­வும் குற்­றம்­சாட்­டப்­பட்­டதே?

பதில்: கல்வி ஒவ்­வொ­ரு­வ­ரின் உரிமை. இதற்கு நேர்­மை­யான முயற்­சி­கள் இருக்க வேண்­டும். ஆரம்ப கல்வி பற்­றி­யும்,நிதி ஒதுக்­கல், பொறுப்பு, உள்­ள­டக்­கம் பற்றி ஒரு மித்த கருத்து இருக்க வேண்­டும். அர­சு­கள் மாறும் போது எல்­லாம் பாட புத்­த­கங்­களை மாற்ற கூடாது. இது அதி­கா­ரத்­தில் உள்ள ஒரு கட்சி சம்­பந்­தப்­பட்ட விஷ­யம் அல்ல. கல்­வி­யில் காவி, பச்சை, வெள்ளை அல்­லது ஊதா என்று எந்த நிற­மும் இல்லை.

கேள்வி: உயர்­கல்வி தனி­யார் மயத்தை நோக்கி செல்­கி­றதா?

பதில்: பெரிய நிறு­வ­னங்­கள் ஏரா­ள­மான கல்­லூ­ரி­களை நடத்­து­கின்­றன. இவை வரு­மான வரி சட்­டத்­திற்­காக. தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளால் எவ்­வித கெடு­த­லும் இல்லை. அரசு கல்­லூ­ரி­களை நடத்­து­வ­தற்­கும், தனி­யார் நடத்­து­வ­தற்­கும் கார­ணம் நாட்­டின் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வே. இது பற்றி பல வரு­டங்­க­ளாக ஆய்வு செய்த போது, கல்­வி­யும், மருத்­து­வ­மும் தனி­ந­ப­ரின் பண வச­தியை பொருத்து கிடைக்­கி­றது என்­ப­துவே. இது அதிக அளவு ஏற்­றத்­தாழ்வு நிலையை உரு­வாக்கி, அத­னால் அமை­தி­யின்­மையே ஏற்­ப­டும்.

கேள்வி: கல்வி சமூ­கத்­தில் உயர் அடுக்­கில் (பணக்­கா­ரர்­கள்) உள்­ள­வர்­க­ளுக்­கா­ன­தாக  மாறி­வ­ரு­கி­றதா?  

பதில்: ஆம், இது பணத்தை பொருத்­தது. இது மிக­வும் ஆபத்­தா­னது. ஏனெ­னில் அறி­வு­சார் பற்­றாக்­குறை இருக்­கும் சமூ­கத்­தில், இது சமூக வளர்ச்­சிக்கு ஆபத்­தான அறி­கு­றி­யா­கும். கல்­வியை சீர­மைத்­தால், கல்வி சமூ­கத்தை சீர­மைக்­கும். கல்­வி­யில் ஏற்­றத்­தாழ்வை குறைக்க வேண்­டும். படித்­த­வர்­கள் சமூ­கத்­தில் நில­வும் ஏற்­றத்­தாழ்வை நீக்க கடு­மை­யாக முயற்­சிக்க வேண்­டும். ஆனால் நீங்­கள் கல்­வி­யால் தொழில் நுட்­பம் தெரிந்­த­வர்­கள், கணக்­கா­ளர்­கள், நிகழ்ச்சி நடத்­து­ப­வர்­கள் போன்­ற­வர்­களை உரு­வாக்­கி­னால், அது நாட்­டிற்கு ஆபத்­தா­ன­தாக முடி­யும்.

நன்றி: அவுட்­லுக் வார இத­ழில் பவான விஜி–­அ­ரோரா