அரசியல் மேடை: ‘அம்மா மட்டும் இருந்திருந்தால்...’

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2019

தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் கூட மக்கள் மத்தியில், பொது வெளிகளில், அதிமுக தொண்டர்களிடம் அதிகமாக புழக்கத்தில் உள்ள வார்த்தை என்பது, ‘அம்மா மட்டும் இருந்திருந்தால்...’’ என்பதாகவே இருக்கிறது.  அந்த அளவிற்கு அரசியல் களத்தில் கோலோச்சிய ஜெயலலிதா திரையுலகிலும், அரசியல் களத்திலும் சந்தித்தவற்றை சாதித்த நிகழ்வுகளை இக்கட்டுரையில் காண்போம்.

சினிமா, அர­சி­யல், கோட்டை, முத­ல­மைச்­சர் பதவி, அப்­பல்லோ ஆஸ்­பி­டல், ராஜாஜி ஹால், மெரீனா என ஆசான் எம்­ஜி­ஆர் வழி­யி­லேயே தனது பய­ணத்­தை­யும் முடித்­துக்­கொண்ட விந்­தை­யான பெண்­மணி.

சந்­தியா என்ற பிர­பல நடி­கை­யின் மக­ளான அவ­ருக்கு, வழக்­க­றி­ஞ­ராக ஆசை. ஆனால் குடும்ப பொரு­ளா­தார சூழல் சினி­மா­வில் அரி­தா­ரம் பூசியே ஆக வேண்­டும் என்று வைத்­து­விட்­டது.. சில­ரின் வற்­பு­றுத்­த­லுக்­காக சிறு­மி­யாக சில படங்­க­ளில் தலை­காட்­டிய வருக்கு தலை­விதி அப்­படி ஆகிப்­போ­னது.

1964ல் கதா­நா­ய­கி­யாக சின்­னத கொம்பே என்ற கன்­னட படம்­தான் முதல் படம். முதல் ஹீரோ. கல்­யாண்­கு­மார்.  இந்த படம்­தான் தமி­ழில் சிவாஜி தேவிகா நடித்து முர­டன் முத்து என ரீமேக் ஆனது. படத்­தின் இயக்­கு­நர் பி.ஆர் பந்­துலு. ஆயி­ரத்­தில் ஒரு­வன் படத்தை பின்­னா­ளில் இயக்­கி­னாரோ அதே பந்­து­லு­தான்.

ஆனால் தமி­ழுக்கு ஜெய­ல­லி­தாவை கொண்­டு­வந்­த­வர் இயக்­கு­நர் ஸ்ரீதர்.  தமி­ழில் முதல் படம்  வெண்­ணிற ஆடை… இந்த படத்­தில் இரண்டு கதா­நா­ய­கி­கள் அறி­மு­கம். ஜெய­ல­லிதா  மற்­றும் நிர்­மலா, வெண்­ணிற ஆடை நிர்­மலா என்று பெயர் அமைந்து போன­வ­ருக் கும் சரி, ஜெய­ல­லி­தா­வுக்­கும் சரி, திரு­மண வாழ்க்கை  என்­பது அமை­யா­மல் போய்­விட்­டது என்­ப­து­தான் பிந்­தைய வினோ­த­மான வர­லாறு.

ஏற்­றுக்­கொண்ட விஷ­யம் எது­வா­னா­லும் அதனை உள்­வாங்கி வெற்­றி­க­ர­மாக வெளிப்­ப­டுத்­தும் திறமை ஜெய­ல­லி­தா­வி­டம் சிறு­வ­யது முதலே தாரா­ள­மா­கவே இருந்­தது..அத­னால்­தான் கதா­நா­ய­கி­யாக நடிக்­கும் முன்பே இங்­லீஷ், இந்தி படங்­க­ளி­லும் சிறு­மி­யாக இருந்­த­போதே நடிக்க முடிந்­தது.

இனி இது­தான் உல­கம் என்று சினிமா வாழ்க்­கை­யில் தாயார் சந்­தியா தள்­ளி­விட்­ட­தால், ஜெய­ல­லிதா துவண்­டு­போய்­வி­ட­வில்லை. இது­தான் ஒரே வழி என்று தீர்­மா­ன­மா­கி­விட்­டால் அதன் இறு­தி­வரை போய் சாக­சம் காட்­டு­வ­தில் ஜெய­ல­லிதா கில்­லாடி.

ஒரு கட்­டத்­தில், தமிழ்­நாட்­டின் நெம்­பர் ஒன் வசூல் சக்­ர­வர்த்­தி­யான எம்.ஜி.ஆர். நடித்து தொடர்ச்­சி­யாக வெளி­வந்த 12 படங்­க­ளில் ஜெய­ல­லி­தா­தான் கதா­நா­யகி. அவரோடு நடித்த மொத்த படங்கள் 28. இந்­திய சினிமா வர­லாற்­றில் இப்­ப­டி­யொரு ஹீரோ-­ஹீ­ரோ­யின் காம்­பி­னே­ஷன் சாதனை கிடை­யவே கிடை­யாது.

குடி­யி­ருந்த கோவில், ஒளி­வி­ளக்கு, நம்­நாடு அடி­மைப்­பெண், மாட்­டுக்­கார வேலன் என பல பிளாக் பஸ்­டர்­கள்.

ரஜி­னி­யின் பில்லா பட நாய­கியை மறுத்­தது, தன்­னை­விட மூன்று வயது இளை­ய­வ­ரான நடி­கர் சரத்­பா­பு­வின் படத்­தில் நாய­கி­யாக நடித்­தது, என ஜெய­ல­லி­தா­வின் திரை­யு­லக ப­ய­ணம் நதியை தேடி­வந்த கட­லோடு முடிந்­த­போது பல வியப்­பு­கள் மிஞ்­சின. அதை­விட தனிப்­பட்ட வாழ்­வி­லும் ஏமாற்­ற­மும் சறுக்­கல்­க­ளுமே கையில் கிடைத்­தன.

விரக்­தி­யான மன­நி­லை­யில் வெளி­யு­லக வாழ்­வில் ஆர்­வம் காட்­டா­மல் ஒதுங்­கிப்­போய்­விட்ட நடிகை ஜெய­ல­லி­தா­வுக்கு, இம்­முறை அர­சி­யல்­வாதி என்ற அடை­யா­ளத்தை காட்­டிய பின்,  நடி­க­னும் நாடா­ள­மு­டி­யும் என நாட்­டுக்கே நிரூ­பித்து காட்டி முத­ல­மைச்­ச­ரா­கி­யி­ருந்த எம்­ஜி­ஆர்.

ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு பிறகு திருப்பி அழைத்து அதி­மு­க­வில் உறுப்­பி­ன­ராக்­கி­னார். கொள்கை பரப்பு செய­லா­ளர் என்ற பொறுப்பு..கட­லூ­ரில் மக்­கள் அலை­வெள்­ளத்­தில் கலக்­கி­னார்.

அர­சி­யல் சொல்­ல­டி­களை தாங்­கிக்­கொண்டு பக்­கு­வப்­பட்­டுப் போன­வ­ருக்கு 1984 மார்ச் 24ல் இன்ப அதிர்ச்சி.. ராஜ்­ய­சபா எம்­பி­யாக தேர்வு செய்­யப்­பட்­டார். நாடா­ளு­மன்­றத்­தில் அறி­ஞர் அண்ணா உட்­கார்ந்த அதே இருக்கை கிடைத்­தது. அரு­மை­யான ஆங்­கி­லத்­தில் நேர்த்­தி­யாக இருந்­தது ஜெய­ல­லி­தா­வின் கன்­னிப்­பேச்சு.

சபையே வியப்­பாக பார்த்­தது. பிர­த­மர் இந்­திரா காந்­தி­யை­யும் ஈர்த்­து­விட்­டது கன்­னிப்­பேச்சு.

1987ல் எம்­ஜி­ஆர் மறைந்த பிறகு, ஜெய­ல­லி­தா­வுக்கு நேர்ந்த அதிர்ச்­சி­க­ர­மான சம்­ப­வங்­கள் வேறொரு பெண்­ணுக்கு நேர்ந்­தி­ருந்­தால் போது­மடா சாமி என ஏதோ ஒரு வெளி­நாட்­டுக்­குப்­போய் செட்­டில் ஆகி­யி­ருப்­பார்.

ஆனால் ஜெய­ல­லி­தாவோ அத்­தனை சொல்­ல­டி­க­ளை­யும் எதிர்­த­ரப்பு அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து வாங்கி பதி­லுக்கு செமை­யாக அடி­களை திருப்­பித்­தந்­தார். அவ­ரின் துணிச்­சல், கம்­பீ­ரம் அதற்கு பெரும் துணை­யாக இருந்­தன..

எம்­ஜி­ஆ­ருக்கு பிறகு அதி­முக ஜானகி அணி, ஜெ.அணி என இரண்­டாக பிரிந்­து­போ­ன­தில் ஆட்சி மகு­டத்தை தொடர்ந்து நான்­கா­வது முறை­யாக வெல்­லும் வாய்ப்பை 1989 சட்­ட­மன்ற தேர்­த­லில் அதி­முக இழந்­தது..

ஆனால் சில மாதங்­க­ளி­லேயே ஒருங்­கி­ணைந்த அதி­மு­கவை உரு­வாக்­கு­வ­தில் வெற்­றி­கண்­டு­விட்­டார். சட்ட மன்ற தேர்த்­லில் ஆட்­சியை பிடித்த திமு­கவை அடுத்த நடந்த மதுரை கிழக்கு, மருங்­கா­புரி இடைத்­தேர்­த­லில் அதி­மு­கவை வெற்­றி­பெ­றச்­செய்து அதிர்ச்சி வைத்­தி­யம் கொடுத்­தார். ஜெய­ல­லி­தாவை பார்த்து திமுக உண்­மை­யி­லேயே மிரண்­டு­போன முதல் திகில் தரு­ணம்.

அத்­தோடு ஆளும் திமு­கவை ஜெய­ல­லிதா விட­வில்லை. . அவர் தலை­மை­யில் 1989 நவம்­ப­ரில் காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைத்து மக்­க­ளவை தேர்­த­லில் அதி­முக போட்­டி­யிட்­டது.

39 தொகு­தி­க­ளில் 38 ஐ கைப்­பற்றி எதிர்­கட்சி திமு­க­வுக்கு முதல் தட­வை­யாக தன் ஆளுமை மூலம் பெரும் அதிர்ச்சி தந்­தார் அதன் கூட்­ட­ணி­யி­லி­ருந்த இ.கம்­யூ­னிஸ்ட் மட்­டுமே நாகப்­பட்­டி­ணத்­தில் வென்­றது.

திமு­கவை அல­ற­வி­டும்­போக்கு, 1991 சட்­ட­மன்ற தேர்­த­லில் இன்­னும் மூர்க்­க­மாக தென்­பட்­டது ஜெய­ல­லி­தா­வி­டம். 234 உறுப்­பி­னர்­கள் கொண்ட சட்­ட­ச­பைக்கு, அதி­முக கூட்­ட­ணிக்கு கிடைத்த இடங்­கள் 225.

1991ஐ தொடர்ந்து 2001, 2011, 2016 ஆகிய கால­கட்­டங்­க­ளில் நடை­பெற்ற சட்­ட­சபை பொதுத்­தேர்­த­லில் வெற்றி பெற்று  முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்று ஆட்சி நடத்­தி­ய­வர் ஜெ.

தமிழ்­நாட்­டில் அர­சி­யல் களத்­தில் அதி­மு­க­வின் தனி­பெ­ரும் செல்­வாக்கை நிரூ­பிப்­ப­தற்­காக 2014ல் நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­த­லில் தனித்­துப்­போட்­டி­யிட்டு 39 இடங்­க­ளில் 37ல் வெற்றி பெற்று சாதனை படைத்­தார். இதைத் தொடர்ந்து நடை­பெற்ற 2016 சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லி­லும் இரட்டை இலை சின்­னத்தை 234 தொகு­தி­க­ளி­லும் தனித்து களம் இறக்கி மீண்­டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தார்.

இப்­படி பல்­வேறு சாத­னை­களை அர­சி­யல் களத்­தில் செய்த ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் என்­ப­தும் அவ­ரது வாழ்க்­கை­யைப்­போல மர்­ம­மாக அமைந்­து­விட்­டது.