துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 58

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2019

இரண்டாம் உலகப்போர்!

1919–ம் ஆண்­டில் முத­லாம் உலக யுத்­தம் முடி­வுக்கு வந்­தா­லும், போரில் ஈடு­பட்ட நாடு­க­ளி­டையே ஆதிக்க வெறி­யும், நாடு பிடிக்­கும் ஆசை­யும் நீடித்­த­தால் எப்­போ­தும் மீண்­டும் போர் மூள­லாம் என்ற அச்­சம் நில­வி­யது.

இதன் விளை­வாக 1939 செப்­டம்­பர் மாதம் ஒன்­றாம் தேதி தொடங்கி, 1945–ம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் இரண்­டாம் தேதி வரை­யி­லான 6 ஆண்­டு­கள் இரண்­டாம் உல­கப்­போர் நடை­பெற்­றது. முதல் உல­கப்­போரை விட, இரண்­டாம் உல­கப்­போர் மிக­வும் கொடி­ய­தாக இருந்­துள்­ளது. ஆதிக்க வெறி­யை­யும் தாண்டி ஜன­நா­யக சக்­தி­க­ளுக்­கும், பாசிச சக்­தி­க­ளுக்­கு­மான கொள்கை போரா­க­வும் நடை­பெற்­றுள்­ளது. ஒவ்­வொரு கண்­டத்­தி­லும், ஒவ்­வொரு கடற்­ப­கு­தி­க­ளி­லும் மிக­வும் உக்­கி­ர­மாக நடை­பெற்ற போரின் கார­ண­மாக ராணுவ வீரர்­கள் மட்­டு­மின்றி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது மக்­க­ளும் மடிந்­துள்­ள­னர். கொஞ்­ச­மும் ஈவு இரக்­கம் இன்றி பொது­மக்­கள் மீது பீரங்­கித்­தாக்­கு­தல்­கள், விமா­னக் குண்டு வீச்­சுக்­கள் நடை­பெற்­றுள்­ளன.

1919–க்கு பிறகு, ஜெர்­ம­னி­யில் வளம் குன்றி, வேலை இல்­லாத் திண்­டாட்­டம் பெரு­கிய சூழ­லில், ஏரா­ள­மான தொழி­லா­ளர்­க­ளும், பொது மக்­க­ளும் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­லும், தேசிய சோச­லிஸ்ட் கட்­சி­யி­லும் சேரத் தொடங்­கி­யுள்­ள­னர்.

இந்த சூழ­லில் 1933–ம் அண்டு ஹிட்­லர் ஜெர்­ம­னி­யின் ஆட்­சிப் பொறுப்பை ஏற்­றார். அவர் ஜன­நா­ய­கக் குடி­ய­ரசு ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வந்து சர்­வா­தி­கா­ரி­யாக தன்னை பிர­க­ட­னப்­ப­டுத்­திக் கொண்டு ஐரோப்பா கண்­டம் முழு­வ­தை­யும் தம் ஆளு­கைக்­குக் கீழ் கொண்­டு­வ­ரத் திட்­ட­மிட்டு படை­களை பெருக்­கி­னார். ஜப்­பான் நாடு சீனா­வின் மீது ராணுவ நட­வ­டிக்கை எடுத்­தது. அப்­போது இத்­தா­லி­யின் சர்­வா­தி­காரி முசோ­லிணி எத்­தி­யோப்­பி­யாவை கைப்­பற்­றிய போதோ, ஸ்பெயின் நாட்­டில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில், புரட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு முசோ­லினி, ஹிட்­லர் ஆத­ர­வா­ளித்­த­போதோ, சர்­வ­தேச சங்­கம் மவு­னம் காத்­தது. இத­னால் இச்­சங்­கத்­தின் மீது உலக நாடு­கள் நம்­பிக்கை இழந்து, தங்­க­ளது படை­ப­லத்தை பெருக்­கு­வ­தில் கவ­னம் செலுத்­தி­னர்.

இந்த சூழ்­நி­லை­யில்­தான் 1939–ம் அண்டு செப்­டம்­பர் மாதம் ஒன்­றாம் தேதி காலை ஹிட்­ல­ரின் ஜெர்­மனி, போலந்து நாட்­டின் மீது படை­யெ­டுத்து இரண்­டாம் உல­கப்­போரை தொடங்கி வைத்­தது. அடுத்த இரண்டே நாட்­க­ளில் பிரிட்­ட­னும், பிரான்ஸ் தேச­மும் யுத்­தக் களத்­திற்கு வந்­தன. கன­டா­வும், ஆஸ்­தி­ரே­லி­யா­வும், நியூ­ஜி­லாந்து மற்­றும் தென் ஆப்­பி­ரிக்­கா­வும் உறவு நாடு­க­ளோடு கை கோர்த்­தன. இதில் இந்­திய தேச­மும் இணை­வ­தாக அன்­றைய ஆங்­கி­லேய அரசு அறி­வித்­தது. ஆனால், இந்­திய மக்­கள் எங்­க­ளுக்கு பூரண சுதந்­தி­ரம் அளித்­தால் மட்­டுமே பிரிட்­ட­னு­டன் போரில் ஒத்­து­ழைப்­போம் என்று தெரி­வித்­து­விட்­ட­னர்.  ஜெர்­மனி போலந்து இடையே கடும் போர். போலந்து வீழ்ந்­ததை தொடர்ந்து ஜெர்­மன் படைக்­கும் பிரெஞ்­சுப் படைக்­கும் இடையே போர் மூண்­டது. இதில் பிரெஞ்­சுப் படை பின்­வாங்­கி­யது

இந்­நி­லை­யில் 1940–ம் ஆண்­டில் ஜெர்­ம­னிக்கு ஆத­ர­வாக இத்­தா­லி­யும் களம் இறங்­கி­யது. ஜெர்­மன் நாட்­டோடு போர் புரிய முடி­யாது என்­பதை உணர்ந்த பிரெஞ்ச் நாட்­டின் பிர­த­மர், அவர்­க­ளோடு போர் நிறுத்த உடன்­ப­டிக்கை செய்து கொண்­டார். இதை­ய­டுத்து பிரெஞ்ச் படை­க­ளும், கப்­பல் தளங்­க­ளும் கலைக்­கப்­பட்­டன.

ஜெர்­மா­னி­யர்­கள் அங்கே தங்­க­ளது படைத்­த­ளங்­களை அமைத்­துக் கொண்­ட­னர். பிரான்ஸ் தேச வீழ்ச்­சி­யால் இரண்­டாம் உல­கப்­போர் அரங்­கில் பெரிய மாறு­தல்­கள் நிகழ்ந்­தன. ஜெர்­மனி, மற்­றும் இத்­தாலி ஆகிய நாடு­க­ளின் ஆதிக்­கம் மேலோங்­கி­யது.

பிரெஞ்ச் போரை நிறுத்­தி­னா­லும், பிரிட்­டன் போரை நிறுத்த இணங்­க­வில்லை. ஜெர்­ம­னிக்­கும் – பிரிட்­ட­னுக்­கும் இடையே கடும் விமான சண்டை நடந்­தது. நாளொன்­றுக்கு சுமார் 200 விமா­னங்­கள் மூலம் ஜெர்­மனி, பிரிட்­டன் மக்­கள் மீது குண்டு மாரி பொழிந்­தன. இதற்கு பிரிட்­ட­னும் எதிர்த்­தாக்­கு­த­லில் ஈடு­பட்­டது. இத­னால் இரு நாடு­க­ளி­லும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பலி­யா­னார்­கள். 1940 ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் ஆயி­ரம் ஜெர்­மன் விமா­னங்­கள் பிரிட்­டனை தாக்­கி­யுள்­ளன. அதில் 200க்கும் மேற்­பட்ட விமா­னங்­களை பிரிட்­டன் சுட்டு வீழ்த்­தி­யுள்­ளது. ஜெர்­மன் படை­யி­ன­ரின் குண்டு வீச்­சால் லண்­டன், ஷெப்­பீல்டு, பிரிஸ்­டல், பர்­மிங்­காம், லிவர்­பூல் ஆகிய நக­ரங்­கள் கடும் சேதத்­திற்கு ஆளா­கின. ஆனா­லும் பிரிட்­டன் படை சோர்­வ­டை­யா­மல் எதிர்த்­தாக்­கு­தல் நடத்தி ஜெர்­ம­னியை சீர்­கு­லைத்­தது. ஜெர்­ம­னி­யில் ரூர், பெர்­லின், பிரெ­மன், டான்­சிக் உள்­ளிட்ட நக­ரங்­கள் பெரும் சேதத்­திற்கு உள்­ளா­யின. ஜெர்­ம­னி­யின் தொழிற்­சா­லை­கள், ஆயுத உற்­பத்தி தளங்­கள் பல­வும் சேதம் அடைந்­தன. தொடர்ந்து உலக நாடு­கள் பல­வும் ஆங்­காங்கே அணி சேர்ந்­தும், தனி­யா­க­வும் போரில் ஈடு­பட்டு வந்­தன.

இரண்­டாம் உலக போர் நாற்­ப­து­க­ளில் உச்­சத்தை தொட்­டது. எகிப்­தி­லும், லிபி­யா­வி­லும் ஆங்­கி­லே­ய–­இத்­தாலி போர் வலுப்­பெற்­றது. ஜப்­பா­னும், சீனா­வும் மோதின. வட ஆப்­பி­ரிக்க போர் முனை­யி­லும், மேற்கு ஐரோப்­பி­யப் பகு­தி­யி­லும், கிழக்கு ஆப்­பி­ரிக்­கப் பகு­தி­யி­லும், மேற்கு ஆசி­யப் பகு­தி­யி­லும் தொடர்ந்து போர் நடை­பெற்­றது.

1941–ம் அண்டு அமெ­ரிக்­கா­வும் நேரடி யுத்­தத்­தில் ஈடு­பட்­டது. சீனா மீதான ஜப்­பான் ஆக்­கி­ர­மிப்பை தடுக்க முற்­பட்ட அமெ­ரிக்கா மீது ஜப்­பான் போர் தொடுத்­தது. அமெ­ரிக்க கப்­பல் தளத்­தின் மீது குண்டு மாரி பொழிந்­தது.

ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கும் கிழக்கு ஆசிய நாடு­க­ளுக்­கும் இடையே எழுந்த கருத்து வேறு­பாடு கார­ண­மாக இரண்­டாம் உல­கப்­போர் ஒரு கட்­டத்­தில் மிக­வும் உக்­கி­ர­மாக மாறிப் போனது. ஜப்­பா­னுக்கு எதி­ராக அமெ­ரிக்கா, பிரிட்­டன், நெதர்­லாந்து, கிழக்­கிந்­தி­யத் தீவு­கள், பிரிட்­டிஷ் டொமி­னி­யன் நாடு­கள், லத்­தீன் அமெ­ரிக்க நாடு­கள் உள்­ளிட்­டவை போரில் குதித்­தன. ஜெர்­ம­னி­யும், இத்­தா­லி­யும் ஜப்­பான் பக்­கம் சேர்ந்து கொண்­டன. இத­னால் பல்­வேறு நாடு­க­ளில் படை­யெ­டுப்­பும், சண்­டை­க­ளும் அவ்­வப்­போது நிகழ்ந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளும், பல லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான பொருட்­சே­த­மும், நாடு, நக­ரங்­க­ளும் அழிந்து கொண்­டி­ருந்­தன. உலக மக்­கள், இந்த போர் முடி­வுக்கு வராதா? என கவ­லை­யோடு காத்­தி­ருந்­த­னர். இந்த இரண்­டாம் உல­கப் போரின் மிகப்­பெ­ரிய அழி­வெ­னக் கரு­தப்­ப­டும் ஜப்­பான் நாட்­டின் மீது நடத்­தப்­பட்ட அமெ­ரிக்­கா­வின் அணு­குண்டு தாக்­கு­தல்­தான் இந்த போரை முடி­வுக்கு கொண்­டு­வந்­துள்­ளது. ஆம் 1945–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6–ம் தேதி ஜப்­பான் நாட்­டின் ஹிரோ­ஷிமா என்ற நக­ரின் மீது அமெ­ரிக்கா அணு­குண்டு வீசி­ய­தால் சுமார் 80 ஆயி­ரம் மக்­கள் மடிந்­த­னர். அடுத்த இரண்டு நாட்­க­ளில் ரஷ்­யா­வும் ஜப்­பான் மீது போர் தொடுத்­தது. ஆகஸ்ட் 9–ம் தேதி ஜப்­பா­னின் நகா­சாகி நக­ரத்­தின் மீது அமெ­ரிக்கா இரண்­டா­வது அணு­குண்டு போட்­டது. அது­வும் மிகப்­பெ­ரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­யது. இனி­யும் போரை நீடிப்­பது ஜப்­பான் மக்­க­ளுக்கு பெரும் அழி­வைத் தேடித்­த­ரும் என கரு­திய ஜப்­பான் நிபந்­த­னை­யின்றி அடி­ப­ணிந்­தது.

ஹிட்­ல­ரின் ஜெர்­மனி வீழ்ந்த பிறகு, ஒரு­வ­ழி­யாக 1945–ம் ஆண்டு செப்­டம் 2–ம் தேதி இரண்­டாம் உல­கப்­போர் முடி­வுக்கு

வந்­தது.