சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் உல்பா முன்னாள் தீவிரவாதி!

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2019

அஸ்­ஸாம் மாநி­லம் திப்­ரு­காக் மாவட்­டத்­தில் உள்ள டிங்­காங் என்ற பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மோனி மானிக் கோகி. இவ­ரது ஒரே நோக்­கம் வறு­மை­யில் உழ­லும் மக்­களை முன்­னேற்ற வேண்­டும் என்­பது தான். 1970 பிற்­ப­கு­தி­யில் வளர்ந்த கோகி, இளம் வய­தில் சந்­தித்து எல்­லாம் கோர வறு­மை­யை­தான். அவ­ரது தந்தை நோய்­வாய்­பட்டு கிடக்­கை­யில், தாயார் தெரு­வில் பிச்சை எடுத்து குடும்­பத்தை காப்­பாற்­றி­னார்.

பெட்­ரோ­லிய கச்சா எண்­ணெய் வளம் மிக்க பகு­தி­யில் வாழ்ந்­தா­லும், இவ­ரது கிரா­மம் எவ்­வித முன்­னேற்­ற­மும் அடை­ய­வில்லை. எவ்­வித அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளும் இல்லை. துடிப்­பான இளை­ஞர்­க­ளுக்கு எவ்­வித வேலை வாய்ப்­பும் இல்லை. இதன் விளைவு மத்­திய அர­சால் தடை செய்­யப்­பட்ட ‘உல்பா’ என்று அழைக்­கப்­ப­டும் ‘அஸ்­ஸாம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி’ பொரு­ளா­தார தற்­சார்பு நிலை அடைய, ஆயுத கிளர்ச்சி மூலம் இந்­திய அரசை தூக்­கி­யெ­றிய வேண்­டும் என்று செய்த பிர­சா­ரத்­தால் இளை­ஞர்­கள் கவ­ரப்­பட்­ட­னர். அஸ்­ஸாம் ஐக்­கிய விடு­தலை முன்­ன­ணி­யில் கோகி பத்து வரு­டங்­கள் இருந்­தார். அவர் என்­றுமே ஆயு­தத்தை தூக்­கி­ய­தில்லை. தனக்­கென தனி பாதையை அமைத்­துக் கொண்­டார்.  

1987ம் ஆண்­டில் எனது கிரா­மத்­தில் உல்பா அமைப்­பி­னர் நோட்­டீஸ் விநி­யோ­கித்­த­னர். அதில் “வறுமை இல்­லாத சுதந்­திர அஸ்­ஸாம் அமைப்­போம் என்று இருந்­தது. இது என்னை கவர்ந்­தது” என்று கூறு­கின்­றார் கோகி. கோகி எப்­போ­தும் எல்லா இன, மதங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளு­ட­னும் நல்­லி­ணக்­க­மாக இருந்­தார். இத­னால் இவர் மக்­களை திரட்­டு­வ­தி­லும், சிறந்த அமைப்­பா­ள­ரா­க­வும் இருந்­தார்.

“உல்­பா­வில் இருக்­கும் போது நான் கோகியை முதன் முத­லில் சந்­தித்­தேன். அப்­போதே அவர் உல்பா செயல்­ப­டும் பகு­தி­யில் மக்­கள் மத்­தி­யில் மிகுந்த செல்­வாக்கு உள்­ள­வ­ராக இருப்­பதை அறிந்­தேன். அவர் மிக­வும் நேர்­மை­யா­ன­வ­ரா­க­வும் இருந்­தார். அவ­ரது கருத்­துக்­கள் உயர்ந்­த­தாக, சிறந்­த­தாக இருந்­தது” என்­கின்­றார் மிரு­ணாள் ஹஜா­ரிகா. இவர் உல்­பா­வின் ஆயுத பிரி­வின் கமாண்­ட­ராக இருந்­த­வர். 2017ல் வெளி­யான ‘ பெஜு­வெல்ட் கிளர்ச்சி’ என்ற ஆவ­ணப்­ப­டத்­தில் கோகி­யைப் பற்றி மேற்­கண்­ட­வாறு கூறி­யி­ருந்­தார்.

உல்பா போன்ற இயக்­கத்­தில் சேர்ந்­தால் தலை­ம­றைவு வாழ்க்கை வாழ­வேண்­டும். தலை­ம­றை­வாக இருந்து கொண்டே கோகி, ஜோர்­கட், திப்­ரு­காக், தினுஸ்­கியா, சிப்­சா­கர் உட்­பட பல்­வேறு மாவட்­டங்­க­ளில் உல்­பா­வுக்­காக பணி­யாற்­றி­யுள்­ளார்.

“நான் உல்­பா­வில் இணைந்த பிறகு, போலீ­சார் என்னை சல்­லடை போட்டு தேடிக் கொண்டே இருந்­த­னர். நான் வீட்­டில் தங்­கி­னால் போலீ­சார் பிடித்து விடு­வார்­கள் என்­பது தெரி­யும். எனவே நான் ஒரு கிரா­மத்­தில் இருந்து வேறு கிரா­மத்­திற்கு இடம் மாறிக்­கொண்டே இருந்­தேன். 1991ல் எனக்கு திரு­ம­ணம் நடை­பெற்­றது. அப்­போ­தும் கூட வீட்­டில் தங்­க­வில்லை. பக்­கத்து கிரா­மத்­தில் தங்­கிக் கொண்டே வாய்ப்பு கிடைக்­கும் போது வீட்­டிற்கு வந்து சென்­றேன். 1994ம் ஆண்டு வாக்­கில் போலீஸ், ராணு­வத்­தி­ன­ரின் நெருக்­க­டி­யால் அஸ்­ஸா­மில் இருப்­பதே பிரச்­னை­யாக மாறி­யது. 1994ல் நானும், மற்ற 150 பேரும் மியான்­மர் நாட்­டில் வனப்­ப­கு­தி­யில் உள்ள உல்பா பயிற்சி பாச­றைக்கு இடம் பெயர்ந்­தோம். அங்கு ஒரு வரு­டம் தங்­கி­யி­ருந்­தோம்” என்று நினைவு கூறு­கின்­றார் கோகி. இவ­ருக்கு இரண்­டா­வ­தாக மகன் பிறப்­ப­தற்கு மூன்­று­நாட்­க­ளுக்கு முன் மியான்­மர் வனப்­ப­கு­திக்கு இடம் பெயர்ந்­துள்­ளார்.  

எனது உயி­ருக்கு உத்­த­ர­வா­தம் இல்­லாத நிலை­யி­லும் கூட, பயிற்சி பாச­றை­யில் நான் எப்­போ­தும் ஆயு­தப்­ப­யிற்சி பெற விரும்­பி­ய­தில்லை. நான் ஒரு விவ­சாயி, இயற்­கை­யோடு இணைந்து வாழ்ந்து, சமூக சேவை செய்­வதே எனது குறிக்­கோள். யாரை­யும் சாக­டிக்க விரும்­ப­வில்லை. அந்த பயிற்சி பாச­றை­யில் ஆயு­தப்­ப­யிற்சி பெறாத ஆளாக நான் மட்­டுமே இருந்­தி­ருப்­பேன். அதே நேரத்­தில் நான் ஆயு­தப்­ப­யிற்சி பெறா­மல் இருப்­பதை, அவர்­கள் மன­தார விரும்­ப­வில்லை என்­ப­தை­யும் அறி­வேன் என்று நினைவு கூறு­கின்­றார் கோகி.

உல்பா ஆயு­தப்­ப­யிற்சி பாச­றை­யில் சேரு­வ­தற்கு முன்­பும், அதன் பிற­கும் அவ­ரது கிரா­மத்­தின் முன்­னேற்­றத்­தையே மன­த­ள­வில் விரும்­பி­னார் கோகி. 1993ல் உல்­பா­வின் அனு­ம­தி­யின்றி ‘டிங்­காங் கலா கேந்­திரா’ என்ற அமைப்பை தொடங்­கி­னார். இதன் மூலம் சிறு­வர், சிறு­மி­க­ளுக்கு பாடல், இசை, நட­னம், ஓவி­யம் தீட்­டு­தல் ஆகி­ய­வற்­றில் பயற்சி அளிக்­கப்­பட்­டது. (உல்­பா­வில் இருந்து கோகி வில­கி­ய­தற்கு பிறகு, 2003ல் அதி­கா­ர­பூர்­வ­மாக டிங்­காங் கலா கேந்­திரா தொடங்­கப்­பட்­டது.)

டிங்­காங் கலா கேந்­திரா வாயி­லாக நூற்­றுக்­க­ணக்­கான சிறு­வர், சிறு­மி­கள் நாட­கம், நடிப்பு, நட­னம், வாய்ப்­பாட்டு, விவ­சா­யம் ஆகி­ய­வற்­றில் பயிற்சி பெற்­ற­னர். இதை தொடங்­கும் போதே நூறுக்­கும் அதி­கான குழந்­தை­கள் பயிற்சி பெற்­ற­னர். 1995ல் மியான்­ம­ரில் இருந்து கோகி திரும்பி வந்­த­தற்கு பிறகு, அவ­ரது கிரா­மத்­தில் இசை பயிற்சி பள்­ளியை தொடங்­கி­னார். உள்­ளூர் கிரா­மத்­தி­னர் நாட­கம், பாட்டு, இசை போன்­ற­வை­க­ளில் பயிற்சி பெற்று நிகழ்ச்­சியை நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­தார்.

கோகி தலை­ம­றை­வாக இருந்து போதும் கூட, 1995,96,97ம் ஆண்­டு­க­ளில் மருத்­து­வ­மனை கட்­டு­வ­தற்­கும், விவ­சாய பண்ணை அமைப்­ப­தற்­கும், மக­ளிர் உதவி குழுக்­களை அமைக்­க­வும் உத­வி­க­ளைச் செய்­தார். அவர் தலை­ம­றைவு வாழ்க்கை வாழ்ந்­தற்­கான விலையை கொடுக்க வேண்­டி­ய­தி­ருந்­தது.

போலீ­சா­ரும், ராணு­வத்­தி­ன­ரும் கோகியை வலை­வீசி தேடிக் கொண்­டி­ருந்­த­னர். இவ­ரது இருப்­பி­டத்தை கூறு­மாறு, இவ­ரது தந்­தை­யு­யம், தம்­பி­யை­யும் அதி­கா­ரி­கள் கொடு­மைப்­ப­டுத்­தி­னர். ராணு­வத்­தி­ன­ரின் தாக்­கு­த­லின் போது அடி­பட்­ட­தால், இவ­ரது தந்தை மர­ண­ம­டைந்­தார்.

“இவை எல்­லாம் 1998, ஜூலை­யில் முடி­வுக்கு வந்­தன. நான் ஜோர்­கட் மாவட்­டத்­தில் இருந்து வந்து, எனது கிரா­மத்­தில் நடை­பெற்ற ஒரு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க சென்­றேன். நான் வீட்­டில் அயர்ந்து தூங்­கிக் கொண்டு இருக்­கும் போது நடு­இ­ரவு 3 மணிக்கு போலீ­சார் வீட்­டிற்­குள் நுழைந்து பிடித்து சென்­ற­னர்” என்­கின்­றார் கோகி.

இவரை போலீ­சார் டிங்­காங் போலீஸ் நிலை­யத்­திற்கு அழைத்­துச் சென்­ற­னர். அங்கு இவர் மீது தடா வழக்கை பதிவு செய்து கைது செய்­த­னர். திப்­ரு­காக் மாவட்ட சிறை­யில் ஆறு மாதம் இருந்­தார். அப்­போ­தும் கூட கிரா­மத்­தி­னர் இவர் மீது அன்­பா­கவே இருந்­த­னர். மாவட்ட சிறை­சாலை மிக மோச­மாக இருந்­தது. ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஒரு­வர் மீது மற்­ற­வர் இடித்­துக் கொண்டு தங்கி இருந்­த­னர். சாப்­பாடு படு மோச­மாக இருந்­தது. குடிக்க சுகா­தா­ர­மான தண்­ணீர் இல்லை. சுகா­தா­ரம் இல்லை. கழிப்­ப­றை­க­ளில் தண்­ணீர் வர­வில்லை. சிறை­யில் இருக்­கும் போது மோச­மான நிலையை மாற்­று­மாறு கோரிக்கை விடுத்து அமை­தி­யான முறை­யில் மற்ற சிறை­வா­சி­களை ஒருங்­கி­னைத்து போராட்­டம் நடத்­தி­னார். சிறைத்­துறை உதவி கமி­ஷ­ன­ருக்­கும், மற்ற அதி­கா­ரி­க­ளுக்­கும் நிலை­மையை விளக்கி கடி­தம் எழு­தி­னார் கோகி.

‘நான் சிறைத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு கடி­தம் எழு­தி­ய­தற்கு பிறகு, எங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் உண­வின் தரம் அதி­க­ரித்­தது. கூடு­த­லாக 200 புதிய போர்­வை­களை விநி­யோ­கித்­த­னர். கழிப்­ப­றை­க­ளில் குழாய் மூலம் தண்­ணீர் வர தொடங்­கி­யது. சிறை­யின் உள்­பு­றம் கூட புதுப்­பிக்­கப்­பட்­டது” என்று தெரி­வித்­தார் கோகி.

உல்பா அமைப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் சிறை­யில் இருக்­கும் போதே, கோகி உல்பா அமைப்­பை­விட்டு விலகி சென்­றார். குறிப்­பாக வன்­மு­றையை கையாள்­வ­தும், இத­னால் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­யும் இல்லை என்­பதை புரிந்து கொண்­டார். “இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஆயு­தப் போராட்­டத்­தால், எனது மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­யும் இல்லை என்­பதை புரிந்து கொண்­டேன்” என்­கின்­றார் கோகி. 1999ல் சிறை­யில் இருந்து விடு­த­லை­யான பிறகு, இவர் உல்பா அமைப்­பிற்கு செல்­ல­வில்லை. இவ­ரது சொந்த கிரா­மத்­திற்கு சென்­றார். கிராம மக்­கள் அன்­பு­டன் வர­வேற்­ற­னர்.

சிறை­யில் இருந்து விடு­த­லை­யான பிறகு, முதல் கடமை என்ன என்­பதை உணர்ந்­தார். இவர் குழந்தை பரு­வத்­தில் படித்த பள்­ளி­யின் நூற்­றாண்டு விழா, 2000 ஜன­வ­ரி­யில் வந்­தது. ஆனால் அந்த பள்­ளிக்­கூ­டம் சிதி­ல­ம­டைந்து இருந்­தது. பள்­ளி­யின் நூற்­றாண்டு விழா கமிட்டி, இவரை பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மித்­தது. பொதுத்­துறை பெட்­ரோ­லிய நிறு­வ­ன­மாக ஆயில் இந்­தியா லிமி­டெட் நிறு­வ­னத்­தின் சமூக பொறுப்­பு­ணர்ச்சி நிதியை பெற்று, பள்­ளியை சீர­மைத்து புதுப்­பிக்க உத­வி­னார். இந்த பள்­ளியை சீர­மைக்க உத­வி­யைத் தொடர்ந்து, ஆயில் இந்­தியா நிறு­வ­னம், இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு உரு­வாக்­கும் நர்­சிங், டெய்­ல­ரிங், எலக்ட்­ரி­சன், விடு­தி­கள், உண­வ­கங்­க­ளில் பணி போன்­ற­வை­க­ளுக்கு பயிற்சி அளிக்க நிதி உதவி செய்­தது.

ஆயில் இந்­தியா நிறு­வ­னத்­தின் உத­வி­யு­டன் தினுஸ்­கியா, சிப்­சா­கர், திப்­ரு­காக் ஆகிய மாவட்­டங்­க­ளில் இரண்­டா­யி­ரம் மக­ளிர் சுய உதவி குழுக்­களை அமைக்க உத­வி­னார். அத்­து­டன் சமூக நல கூடங்­கள், கழிப்­ப­றை­கள், கோழிப்­பண்ணை, நெசவு மையங்­களை அமைக்­க­வும் உதவி செய்­தார். உள்­ளூர் நட­மா­டும் மருத்­துவ சிகிச்சை மையத்­தை­யும் கண்­கா­ணித்­தார்.

“அஸ்­ஸா­மில் காலங்­கள் மாறி வரு­வற்­கும், மக்­க­ளின் மன­நிலை, விருப்­ப­கங்­கள் மாறி வரு­வ­தற்­கும்  சிறந்த உதா­ர­ண­மாக திகழ்­கின்­றார் மோனி மானிக் கோகியே. அவர் ஆயில் இந்­தியா நிறு­வ­னத்­தைச் சேர்ந்த பிர­சாந்தா போர்­கா­கோ­டி­யு­டன் இணைந்து ‘ரூபாந்­தர்’ என்ற திட்­டத்­தில் செயல்­பட்­டார். இந்த திட்­டத்­தின்­படி (2003ல் இருந்து) விவ­சா­யி­கள் இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்தி விவ­சா­யம் செய்­கின்­ற­னர். இளை­ஞர்­கள் கம்­யூட்­டர் பயிற்சி பெற்று வேலை செய்­கின்­ற­னர். பெண்­கள் நவீ­ன­ம­ய­மாக்­கப்­பட்ட தறி­யில் நெய்­கின்­ற­னர். இவை கிரா­மப்­பு­ரங்­க­ளில் பொரு­ளா­தார மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்று கூறு­கின்­றார் பிர­பல பத்­தி­ரிக்­கை­யா­ள­ரும், எழுத்­தா­ள­ரு­மான சமுத்ரா குப்தா காஷ்­யப். இந்த தக­வல்­களை ‘பெஜு­வெல்ட் கிளர்ச்சி’ என்ற ஆவ­ணப்­ப­டத்­தில் கூறி­யி­ருந்­தார்.

2001ல் எனது தம்­பிக்கு பொன்­னுக்கு வீங்கி ஏற்­பட்­டது. நான் தம்­பியை அழைத்­துக் கொண்டு நக­ரானி என்ற இடத்­தில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு சென்­றேன். டிங்­காங், நகர்­கட்­டாயா ஆகிய இரண்டு சட்­ட­மன்ற தொகு­தி­க­ளுக்­கும் சேர்த்து, இந்த ஒரு ஆரம்ப சுகா­தார நிலை­யம் தான் உள்­ளது. அங்கு போதிய படிக்­கை­கள் இல்ல. தண்­ணீர், மின்­சா­ரம் இல்லை. கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை சீர்­தி­ருத்­தம் செய்­யும் படி கேட்­டுக் கொண்­ட­னர். இந்த ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை ரூ.25 லட்­சத்­தில் புதுப்­பித்­த­னர். இதற்கு ஆயில் இந்­தியா நிறு­வ­னம் ரூ.12 லட்­சம் வழங்­கி­யது. மீதம் உள்ள ரூ. 13 லட்­சத்தை மக்­கள் திரட்டி கொடுத்­த­னர்.

அந்த ஊரைச் சேர்ந்­த­வர்­கள் படுக்கை வாங்­கு­த­வற்­கும், ஓய்வு அறை கட்­டு­வ­தற்­கும் உதவி செய்­த­னர். அரசு நிர்­வா­கம் அறுவை சிகிச்சை அறையை கட்­டி­யது. ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை சீர­மைக்க நான்கு வரு­டங்­கள் ஆனது. 2005ல் இதே போல் டிங்­காங் நக­ரில் உள்ள ஆரம்பு சுகா­தார நிலை­யத்தை ஒன்­றரை வரு­டங்­க­ளில் கோகி புதுப்­பித்­தார். கோகி முன் முயற்­சி­யில் அஸ்­ஸாம் மாநி­லத்­தின் மிகப்­பெ­ரிய, அதிக செல­வில் இயற்கை சுற்­றுலா திட்­ட­மான சசோ­னி–­மெர்­பில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது திப்­ரு­காக் மாவட்­டத்­தில் நகர்­கட்­டாயா தாலு­கா­வில் சசானி என்ற இடத்­தில் மெர்­பில் ஏரி­யில் இயற்கை சுற்­றுலா திட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

2010 வாக்­கில் சசா­னி­யைச் சேர்ந்­த­வர்­கள் ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை கட்ட உதவி செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­த­னர். இதற்­கான இடத்தை தேடும் போது, இந்த ஏரி கண்­ணில் பட்­டுள்­ளது. இங்கு இயற்கை சுற்­றாலா தளம் அமைக்­க­லாம் என்று கோகி முடிவு செய்­துள்­ளார். “அந்த ஏரி­யில் நூற்­றுக்­க­ணக்­கான வலசை (இடம் பெய­ரும்) பற­வை­கள், வித­வி­த­மான மீன், தாவ­ரங்­கள், செடி கொடி­கள் இருப்­பதை பார்த்­தேன். அப்­போதே இயற்கை சுற்­றுலா தளம் அமைக்க சிறந்த இடம் என்­பதை முடிவு செய்­தேன் என்­கின்­றார் கோகி. (இந்த ஏரி 1550 பிகா பரப்­ப­ள­வில் அமைந்­துள்­ளது.)

இந்த இயற்கை சுற்­றுலா தளம், 2010 செப்­டம்­பர் 26ம் தேதி தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. அந்த நிகழ்ச்­சி­யில் 20 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மா­னோர் பங்­கேற்­ற­னர். இந்த திட்­டத்­தின் மூலம் 50 ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்­துள்­ளது. கோகி­யின் சமூக சேவைக்கு உறு­து­ணை­யாக இருப்­ப­வர் அவ­ரது மனைவி தீபாலி. “அவர் என்னை நன்கு புரிந்து கொண்­டுள்­ளார். எனக்கு எப்­போ­தும் உறு­து­ணை­யாக உள்­ளார். நான் வீட்­டில் இருந்து வெளியே சென்­றா­லும் கூட, உடனே வீட்­டிற்கு திரும்­பு­மாறு கூறு­வ­தில்லை. எனது சமூக சேவையை மனைவி விரும்­பு­கின்­றார் என்­கின்­றார் கோகி.

“நான் ஏழை குடும்­பத்­தைச் சேர்ந்­த­வன். எனது பெற்­றோர் உன்­னால் முடிந்த அளவு மற்­ற­வர்­க­ளுக்கு உதவி செய் என்று கூறு­வார்­கள். நான் நல்ல மனி­த­னாக வர வேண்­டும் என்று விரும்­பி­னார்­கள். நீ மற்­ற­வர்­க­ளுக்கு நல்­லதை செய்­தால், உன்­னு­டம் அனை­வ­ரும் இருக்­கின்­ற­னர் என்று கூறு­வார்­கள். அது உண்­மை­யும் கூட என்­கின்­றார் கோகி.

நன்றி: பெட்­டர்­இந்­தியா இணை­ய­

த­ளத்­தில் ரிஞ்­சன் நோப்ரு வாங்­சுக்.