டி.வி. பேட்டி: மாற்றம் ஒன்றே மாறாதது! – கிருஷ்ணா

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2019

*    “நடி­க­னா­வது என் கனவு!” என்­கி­றார் “தெய்வ மகள்” புகழ் கிருஷ்ணா.

*    இப்­போது அவர் “ரன்” ஹீரோ.

*    6 அடி உய­ர­மும், 80 கிலோ எடை­யும் கொண்­ட­வர்.

*    ஆகஸ்ட் 1, 1981 அவ­ரு­டைய டேட் ஆப் பெர்த். சென்­னை­யில் பிறந்­தார்.

*    அவர் பிறந்த பிறகு, அவ­ரு­டைய பெற்­றோர் புது டில்­லிக்கு குடி­பெ­யர்ந்­த­னர்.

*    பெற்­றோர்  நகு­நந்­தன் – நளினி.

*    புது டில்­லி­யி­லுள்ள கேந்­தி­ரியா வித்­யா­லயா வில் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­தார்.

*    அதன்­பின், நொய்­டா­வி­லுள்ள பிர்லா இன்ஸ்­டி­டி­யூட் ஆப் டெக்­னா­ல­ஜி­யில் பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்­தார்.

*    பின்பு நொய்­டா­வி­லேயே ஆசிய அகா­டமி ஆப் பிலிம் & டெலி­வி­ஷ­னில் நடிப்­புக்­கான மூன்று மாத­கால படிப்­பை­யும் படித்­தார்.

*    அதன்­பின்,  சென்­னைக்கு

    வந்­து­விட்­டார்.

*    2009ல் கே. பால­

சந்­தர் டைர­க்  ஷ­ னில் உருவான “ஒரு கூடை பாசம்” மேடை­நா­ட­கத்­தில் நடிக்­கும் முதல் வாய்ப்பை

பெற்­றார்.

*    அதை­ய­டுத்து மீண்­டும் பால­சந்­த­ரின் டைர­க் ஷ­னி­லேயே “சஹானா” (”சிந்து பைரவி” இரண்­டாம் பாகம்) சீரி­ய­லில் நடித்­தார். அதுவே அவர் நடித்த முதல் சீரி­யல். அதில் அவ­ருக்கு ஜேகேபி மகன் ‘சூர்யா’ கேரக்­டர் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

*    “சிதம்­பர ரக­சி­யம்,” “செல்வி,” “நான் அவள் இல்லை,” “சிவ­சங்­கரி,”  “தெய்வ மகள்” ஆகிய  தமிழ் சீரி­யல்­க­ளி­லும், “காஞ்­சனா,” “கங்கா,” “மகா­லட்­சுமி நிவ­சம்” ஆகிய தெலுங்கு சீரி­யல்­க­ளி­லும் நடித்­தார்.

*    “இதய திரு­டன்,” “அனந்­த­பு­ரத்து வீடு,” “அழ­கிய அசுரா,” “பத்து பத்து,” “ஈரம்,” “பலம்” ஆகி­யவை அவர் நடித்த படங்­கள்.

*    “வசூல்­ராஜா எம்­பி­பி­எஸ்” கமல் படத்­தில் ஒரு கேன்­சர் நோயாளி கேரக்­ட­ரில்  கிருஷ்ணா நடித்­தி­ருக்க வேண்­டி­யது. ஆனால், அவ­ரால் நடிக்க முடி­யா­மல் போய் விட்­டது.

*    ‘காமெடி ஜங்­ஷன்,’ ‘அசத்­தல் சுட்­டீஸ்’ ஆகிய டிவி நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்­றுள்­ளார்.

*    ஜூன் 2012ல் அவ­ருக்கு திரு­ம­ணம் நடந்­தது.  அவ­ருக்கு (தாலி கட்ட) கழுத்தை நீட்­டி­ய­வர்  வேறு யாரு­மல்ல, “திருடா திருடி” புகழ் நடிகை சாயா சிங்.

*    ‘மாற்­றம் ஒன்றே மாறா­தது’ – இது அவ­ருக்கு மிக­வும் பிடித்த வாச­கம்.

*    ஓய்வு நேரத்­தில், டிவி­யில் விளை­யாட்டு நிகழ்ச்­சி­களை மிக­வும் ரசித்து பார்ப்­பார்.

-– -இரு­ளாண்டி