தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் முக்தியடைந்தார்

பதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2019 17:00

சென்னை,

தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று காலமானார்.

இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
95 வருட உலக அனுபவம், 73 வருட துறவறம், 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர், திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 வது குருமகா சந்நிதானம் இன்று சிவபரிபூரணம் அடைந்தார்கள்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினத்தின் மடம் அமைந்துள்ளது.