கவலை உனக்கில்லை!

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2019

ஐரோப்­பி­ய­ரான போர்ச்­சு­கீ­சி­யர் கட்­டிய ஆல­யத்­தால் புகழ்­பெற்­றது, சென்னை, பரங்­கி­மலை. இங்­குள்ள, புனித துாய­தோமா உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1974ல், 10ம் வகுப்பு படித்­துக் கொண்­டி­ருந்­தேன்.

விடு­மு­றையை கழித்த விதம் பற்றி கட்­டுரை எழுத சொன்­னார் ஆசி­ரி­யர் மார்ட்­டின். எழு­தி­ய­வற்றை எங்­க­ளையே, மாற்றி மாற்றி திருத்­தச் சொன்­னார்.

என்­னி­டம் வந்­ததை படித்து சிரித்­தேன். பக்­கத்­தி­லி­ருந்­த­வ­னும் ஏள­னத்தை உதிர்த்­தான். இப்­படி, கைமாற்றி அலட்­சி­ய­மாக சிரித்­துக் கொண்­டி­ருந்­தோம். கார­ணத்தை கேட்­டார் ஆசி­ரி­யர்.

அந்த கட்­டு­ரை­யில், 'என் அப்பா முடி திருத்­தும் கடை வைத்­துள்­ளார். விடு­மு­றை­யில் அவ­ருக்கு துணை­யாக இருந்து, தொழிலை கற்­றுக் கொண்­டேன்...' என, எழு­தி­யி­ருந்­தான். ஏள­ன­மான சொற்­க­ளால் அதை தெரி­வித்­தோம்.

எழு­தி­ய­வன் தர்ம சங்­க­டத்­து­டன், எழுந்து நின்­றான். ஆசி­ரி­யர் மிக அமை­தி­யாக, 'கட்­டுரை எழு­திய பாபு­வின் அற்­புத அனு­ப­வத்தை பாராட்­டும் வகை­யில் கைதட்­டுங்­கள்...' என்­றார். புரி­யா­மல் விழித்­தோம்.

உடனே, 'விடு­மு­றை­யில் எல்­லா­ரும் பெற்­றோ­ருக்கு செலவு வைத்­துள்­ளீர்­கள்; பாபு மட்­டுமே வரு­வாய் ஈட்டி தந்­துள்­ளான். தொழிற்­ப­யிற்­சி­யும் பெற்­றுள்­ளான். தொழி­லில், கீழ்மை என்று எது­வும் இல்லை...' என்­றார்.

கேலி­பே­சிய நாங்­கள், தவறை உணர்ந்­தோம். 'செய்­யும் தொழிலே தெய்­வம்' என்­பதை உணர்த்­திய ஆசி­ரி­யரை மன­தில் கொண்­டுள்­ளேன்.

–-- மல்­லிகா குரு, சென்னை.